(Reading time: 28 - 55 minutes)

அழுகையை மறைத்த ஒரு புன்னகையோடு “ காதலா? அதை என் மனதுக்குள் புதைத்து, ரொம்ப நாள் ஆச்சு. என் அப்பாவோட கவரவம், சந்தோஷம் எல்லாம் இந்தக் கல்யாணத்தில் தான் இருக்கு. அது தெரிஞ்ச அன்னைக்கே என் மனதில் இருந்த காதல எனக்குல்லேயே மூடி மறச்சிட்டேன். எனக்கு இப்போ காதலும் இல்ல ஒண்ணும் இல்ல” என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள் அனு.

“போடி பைத்தியக்காரி, உன் மனசுல காதல் இல்லனா எதுக்கு இவ்வளவு நேரம் அழுதுட்டு இருந்த. மனசுல வர முதல் காதல மறக்குறது அவ்வளவு ஈஸீ இல்ல” திவ்யாவும் விடுவதாக இல்லை.

திவ்யா விடமாட்டாள் என்று அனுவுக்கும் தெரியும். “போதும் திவ்யா, இதுக்கு மேல நீ ஒண்ணும் பேச வேண்டாம். நா காலையில் சீக்கிரம் கிளம்ப னு. ஸோ ஐ நீட் டூ செஞ்ச், இப்போ நீ கிளம்பு” என்று திவ்யாவை அறையில் இருந்து தள்ளுவது போல் இருவரும் திரும்ப, அப்படியே இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

அறையின் வாசலில் ராஜசேகர் நின்றுக் கெண்டு இருந்தார்.

அனு உரைந்து போய் நின்றிருந்தாள். திவ்யா சற்று சுதாரித்துக் கொண்டு, “அப்பா, நீங்க, எங்க, இங்க, எப்போ” என்று கேட்டு முடிப்பதற்குள், ராஜசேகர் பேசினார்.

“ நா அப்போதே வந்துட்டேன். நீங்க பேசினது எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தான்” என்று அவர் கூறி முடிப்பதற்குள், அனு ஓடிச் சென்று அவர் காலில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.

“என்ன மன்னிச்சீடுங்க பா” என்பதை மட்டும் கூறிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

அவள் அழுவதைத் தாங்க முடியாமல் பதறி தூக்கினார் ராஜசேகர். “ அழாதட அனு” என்று தன் மகளின் கண்ணீரை துடைத்துக் கொண்டே, “பாரு அழுது அழுது முகம் எப்படி அயிடுச்சி” என்றவரின் கண்களின் சிறு கண்ணீர்.

தன் மகளின் கண்ணீர் எந்தத் தந்தையின் மனதையும் கரைத்துவிடும். அதற்கு ராஜசேகர் மட்டும் என்ன விதி விலகா.

“பெத்தவங்கள விட, கதலிச்சவன் தான் முக்கியம் நு போர இந்த காலத்துல, இவ்வளவு அசையையும், வலியையும் மனசுல வெச்சிக்கிட்டு, எப்படி டா, எனக்காகவா” என்று இன்னமும் அனுவின் அன்பு புரியாமல் கேட்டார் ராஜசேகர்.

“அப்பா, எனக்கு உங்களை விட, உங்க பாசம், நம்பிக்கையை விட இந்த உலகில் எதுவும் பெருசு இல்ல பா. எனக்கு நீங்க மட்டும்தான் பா முக்கியம்” என்று கூறிவிட்டு தன் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள் அனு. அவளின் கண்ணீர் துளிகள் அவரின் தோளில் படர்ந்தது.

ராஜசேகரின் மனது முழுதும் பூரிப்பும், தன் மகளை நினைத்து பெருமிதமும்தான் இருந்தது.

“அனு, அப்பா ஒரு கேள்வி கேக்குறேன், உன் மனசில் இருக்குறத மறைக்காமல் சொல்லனும்” என்றார் ராஜசேகர்.

என்ன கேட்க போகிறார் என்பது போல் அனுவும் திவ்யாவும் அவரைப் பார்க்க, “திவ்யா சொன்னது போல், நீ இன்னுமும் விஷ்ணுவை லவ் பன்றியா?” என்றார்.

பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் அனு.

“அனு தைரியமா சொல்லு” என்றார் ராஜசேகர்.

தந்தையே கேட்பதால், பதில் எதுவும் பேசாமல் “ஆம்” என்பது போல் தலையை மட்டும் ஆட்டினாள் அனு.

“நாளைக்கு இந்தக் கல்யாணம் நடக்கலன, தீபக் குடும்பமும், இந்த ஊர் உலகமும் என்ன பேசும் நு உனக்கும் தெரியும்” என்றார் ராஜசேகர்.

“நல்லா தெரியும் பா. என்னால அந்த கெட்ட பேரு உங்களுக்கு வராது. நாளைக்கு முகுர்த்த நேரத்தில், நான் மணவறையில் இருப்பேன்” என்றாள் தன் அழுகை அனைத்தையும் மறைத்துக் கொண்டு.

அதைக் கேட்டு ராஜசேகரின் மனம் நிறைந்தது. ஆனால் திவ்யாவோ தன் தோழியின் நிலையைக் கண்டு வருந்தினாள்.

“இந்த ஒரு வார்த்த போதும் அனு. இந்த ஒரு வார்த்தை போதும் மா, நாளைக்குக் குறித்த நேரத்தில் உனக்கும் விஷ்ணுவுக்கும் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்” என்றார் ராஜசேகர்.

அவர் கூறியதை அவர்களால் நம்பமுடியவில்லை.

“அப்பா என்ன சொல்றீங்க” என்றாள் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு அனு கேட்,. தீபக் நு சொல்றதுக்கு பதில் மாற்றிச் சொல்லிவிட்டார் என்று கூட இருவரும் நினைத்தனர்.

“ஆமான்டா செல்லம், உன்னோட சந்தோஷத்துக்கு முன்னாடி இந்த உலகத்தில் எனக்கு எதுவும் முக்கியமில்லை. யார் என்ன பேசுவாங்க னு எனக்குக் கவல இல்லை. உன்னை, உன் விஷ்ணு கூட சேர்த்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்பே “தேங்ஸ் பா” என்று அவரை அனைத்துக் கொண்டு அழுதாள் அனு. இந்த முறை அவள் கண்ணீரில் ஆனந்தம் மட்டுமே இருந்தது.

திவ்யாவிற்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. அவளும் ராஜ சேகரை அனைத்துக் கொண்டு “தேங்ஸ் பா, அனுவின் காதலை புரிஞ்சிக்கிட்டதற்கு” என்று கூறியவளின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

“என்னடா இது, சின்ன குழந்தை மாதிரி. அழதீங்க” என்று இருவருக்கும் கண்களை துடைத்துவிட்டு “ எங்க அந்தப் படவா ராஸ்கல், என் குழந்தைகளை அழ வெச்சிட்டு எங்க போய்ட்டான்” என்று ஒரு பொய் கோபத்தோடு விஷ்ணுவைத் தேடினார் ராஜசேகர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.