(Reading time: 28 - 55 minutes)

அவன் கூறிய அந்த மூன்றெழுத்து மந்திரம் அவள் காதில் தேனாய் பாய்ந்தது. ஒரு கனம் அவள் மனம் அவள் இருக்கும் சூழலை மறந்து வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தது. அடுத்த நெடியே அவள் சுய நிலைக்கு வந்தாள். அவள் நாளை வேறு ஒருவனுடைய மனைவி ஆகப் போகிறாள் என்பதை உணர்ந்த மறு நிமிடம் அவள் மனம் கல்லாய் மாறியது. மனம் மட்டும் அல்ல அவளும்தான்.

தன் கூறியதை கேட்டு மௌனமாய் நின்றவளைப் பார்த்தான். அதற்கு மேல் ஒரு வார்த்தையும் கூறாமல் அங்கிருந்து திரும்பி நடந்தான்.  யாரை தன் ஆயில் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தானோ அவளை இன்னும் ஒரு நொடி கூட பார்க்க முடியாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தான் விஷ்ணு. அவனுக்கு மரண வேதனை.

இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தன்னிடம் அவன் அந்த வார்த்தையைக் கூற மாட்டானா என்று ஏங்கியவளால், இன்று அந்த வார்த்தையைக் கேட்டும் மனம் கல்லாய் மாறி நின்று கொண்டிருந்தாள். போகிறவனைப் போகாதே என்று கூற வாய் வறவில்லை அவளுக்கு மாறாகக் கண்களில் கண்ணீர்தான் வந்தது.

அவன் உருவம் மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டு அழுது கொண்டிருந்தவள் அவன் உருவம் கண்களில் இருந்து மறையவே முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் எங்கு இருக்கிறோம், எந்தச் சூழ்நிலையில் இருக்கிறோம் என்று எதையும் உணரவில்லை. முகத்தை மூடியவாரே அழுத்துக் கொண்டிருந்தாள், அந்த அறை முழுதும் அவள் அழு குறள் மட்டும்தான்.

விஷ்ணு அழுது கொண்டே போவதைப் பார்த்த திவ்யா, அனு இருக்கும் அறை ஓடி வந்தாள். வந்தவளுக்கு அதிர்ச்சி, இங்கு அனுவும் அழுத்துக் கொண்டாள். என் செய்வது என்று தெரியாமல், அனுவின் அருகில் அமர்ந்த அவள் தோளை தட்ட, சின்ன பிள்ளைப் போல் திவ்யாவை அனைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள் அனு.

அவன் அழுவது, இவள் அழுவது என்று எல்லாம் ஒன்று சேர்த்து என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு திவ்யாவிற்கு புரிந்தது. இருந்தாளும் எதுவும் தெரியாதது போல் “என்ன டி நடந்துச்சு, ஏன் அழற.  அழுறத நிறுத்து, யாரவது பார்த்த பிரச்சனையாயிடும்” என்று அவளை அனைத்துக் கொண்டு கூற அதை எதையும் அனு கேட்பதாக தெரியவில்லை. குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.

“வேண்டாம் டி அழாத, பிளிஸ். யாராவது பார்க்க போறாங்க” என்று எவ்வளவோ கூறிப் பார்த்தாள், கொஞ்சி கூட பார்த்தாள் அனு கேட்பதாக தெரியவில்லை. வேறு வழி இன்றி ஒரு அதட்டு அதட்டினாள் “ஏய் நிறுத்து டி, இப்போ நிருத்தல ஒரே அரத் தான்”. அவள் அதட்டலில் அதிர்ந்து அழுகையை நிறுத்தினாள் அனு. ஆனாலும் விசும்பல் நிற்கவில்லை.

“இப்போ சொல்லு என்ன ஆச்சி” என்றாள் கோபமாக. அனு எதோ கூற அது அவளின் அழுகையோடு சேர்ந்து கொள்ள திவ்யாவிற்கு எதுவும் புரியவில்லை. “இங்க பாரு, ஃபர்ஸ்டு அழுகுரத நிப்பாட்டு, நி சொல்றது எனக்குப் புரிய மாட்டெங்குது” என்றாள் திவ்யா.

அனுவிற்கு, எப்படிக் கூறுவது, எப்படி தன் நிலையைப் புரியவைப்பது என்று ஒன்றும் புரியவில்லை. “விஷ்ணு போயிட்டான் டீ” என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் திவ்யாவை கட்டிப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“அதுக்கு நீ ஏன் டி அழற. அவன் காலையில் கல்யாணத்திற்கு வரப் போரான்” என்று புரியாதவள் போல் கேட்டால் திவ்யா.

“இல்ல டீ அவன் வர மாட்டான்.” என்று மீண்டும் அழுது கொண்டே பதில் கூறினாள் அனு.

“சரி அவன் வரலான என்ன இப்போ நீ அழரத நிறுத்து. யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க” என்று அவள் அழுகையை நிறுத்துவதில் குறியாக இருந்தாள் திவ்யா.

“இல்ல டீ போகும் போது, என்ன காதலிக்கிறேன் நு சொல்லீட்டு போனான் டி” என்று கூறிவிட்டு திவ்யாவின் தோளில் சாய்ந்து அழுதாள் அனு.

கடைசியாக சொல்லீட்டானா என்று மனதில் நினைத்துக் கொண்டு , “சரி அவன் சொன்னது இருக்கட்டும். நீயும் அவன் லவ் பண்ற னு சொன்னியா இல்லையா” என்றாள் திவ்யா.

உனக்கு எப்படித் தெரியும் என்பது போல் திவ்யாவை அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் பார்த்தாள் அனு.

ஆமா இது பெரிய ராகேட் சயன்ஸ் என்று மனதில் நினைத்துக் கொண்டு “ என்ன பார்க்குற, உன் மனசுல காதல் இல்லனா, அவன் சொன்னதை கேட்டு உனக்கு கோவம் தான் வந்திருக்கும் இப்படி அழுகை வந்திருக்காது. சரி சொல்லு சொன்னியா இல்லையா” என்று மீண்டும் கேட்டாள் திவ்யா.

இல்லை என்பது போல் தலை ஆட்டினாள் அனு.

“ஏன் டி நீ சொல்லாம அவனுக்கு எப்படித் தெரியும் உன் காதல்” என்றாள் திவ்யா.

“எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு நீயே இப்படி பேசுற. விடிஞ்ச எனக்குக் கல்யாணம். இப்போ போய் ஏன் காதல சொல்லலனு கேக்குற” என்றாள் அனு.

“மனசில் விஷ்ணுவ நெனச்சிக்கிட்டு, நீ திபக் கூட எப்படி வாழமுடியும்” என்றாள் திவ்யா.

“இந்தக் கல்யாணம் எங்க அப்பாவோட கனவு டி. எனக்கு என் காதலை விட, அப்பா என் மேலே வெச்சிருக்குற நம்பிக்கையும், அவரோட கவரவத்தை காப்பாத்துறது தான் முக்கியம்” என்று கண்களை துடைத்துக் கொண்டே கூறினாள் அனு.

“அப்போ உன்னோட காதல்” என்றாள் திவ்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.