(Reading time: 10 - 19 minutes)

“ஆகாஷ் இந்த ஆறு மாசத்துக்குள்ள உனக்கு ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் முடிச்சிடணும்.” ராமமூர்த்தி மேட்ரிமோனியல் வெப்சைட்டை பார்த்தவாரு சொன்னார்.

“நீ எந்த பொண்ணயாவது லவ் பண்றியா?” ராகவ் கேட்க. அங்கிருந்த லலிதா பத்மாவதி ராமமூர்த்தி மூவரும் எதோ முக்கியமான தேர்தல் முடிவை அறிவதைப் போல ஆர்வமாய் பார்க்க . . ஆகாஷ் இதையெல்லாம் கவனிக்காமல் தன் ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாக நோண்டியபடி “இல்லை” என தலையசைத்தான்.

அவர்கள் கட்சி தோல்வியுற்றது. ”அவனவன் காதலிச்சி இதுதான் பொண்ணு இவளதான் கட்டிப்பேன்னு நிக்கறான். நம்ம வீட்லயும் ஒண்ணு இருக்கே” லலிதா சஹஸ்ரநாமத்தை ஆரம்பிக்க

“நாங்களே படிச்சி . . நல்ல வேலைக்கு போயி . . பொண்ண பாத்து . . சைட் அடிச்சி அது செட் ஆனா லவ் பண்ணி . . உங்க கிட்ட வந்து கல்யாணத்துக்கு நிக்கணுமா? ஒரு மனுஷ எத்தன வேலதான் பாக்குறது? .. வீட்ல உங்க எல்லாருக்கும் என்ன வேல? எனக்கு பொண்ண தேடுங்க” என நக்கலாக ஆகாஷ் பதிலளித்தான்.

இந்த பதிலை கேட்டு ராகவ் “இவன எந்த லிஸ்ட்ல சேக்கறது?” யோசிக்க

“உன் டிசைன் மட்டும் ஏண்டா இப்படி இருக்கு” என லலிதா கிண்டல் செய்தாள்.

ஆகாஷ் சராசரி ஆசைகள் நிறைந்த இளைஞன்தான். மனைவி குழந்தை ரொமன்ஸ் போன்ற எதிர்பார்புகளுடன் இருப்பவன்தான். இந்த ஆசைகளோடு தனக்கு மனைவியாகிறவள் தன் பெற்றோருக்கு நல்ல மருமகளாக தன் அக்காவிறகு நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும்.

அதோடு வருகிற பெண்ணுக்கும்  மாமியார் மாமனாராக இல்லாமல் தன் பெற்றோர் அவளுக்கும் பெற்றோராக இருக்க வேண்டும். அவளுக்கும் ஆசை கனவு லட்சியம் இருக்கும். அவை பாதிக்கப்படக் கூடாது. லலிதா பற்றி கவலை இல்லை அவள் பேசியே மடக்கிவிடுவாள்.  இப்படி பல எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆசைகள் கொண்டவன்

குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதல் இருக்க வேண்டும்  என நினைப்பவன். இதையெல்லாம் சொன்னால் லலிதா “உன்ன சைக்காலஜி படிக்க வெச்சது தப்பா போச்சு” என வருத்தெடுப்பாள். அதனால் இந்த கேட்டும் மில்க் குடிக்குமா என சும்மா இருக்கிறான்.  

அவன் போன் சிணுங்க “ஆகாஷ் ஹியர்” என ஆராம்பித்தான்

மறுமுனையில் “சாரு பேசறேன் . .” காஞ்சனாவுடன் அன்று வந்ததை சுருக்கமாக சொன்னாள்

முதலில் அவனுக்கு சாரு யாரென தெரியவில்லை. காஞ்சனா பற்றி சொன்னதும் நினைவுக்கு வந்தது. “யெஸ் சொல்லுங்க சாரு”

“நீங்க டெக்சாஸ்க்கு திரும்ப?” என தயங்க

“இங்கதான் இருக்கேன் . . ரெண்டு நாள் ஆகும் கிளம்ப”

“ ஒ.கே. எனக்கு ஒரு லீகல் பிராப்ளம் இருக்கு . . நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா?”

“கண்டிப்பா ஹெல்ப் பண்றேன். என்ன பிரச்சன?”

“நேர்ல பேசலாமா? உங்களுக்கு ஆட்சைபனை இல்லனா . . இன்னிக்கு ராத்திரி ஏழு மணிக்கு எங்க வீட்டுக்கு வர முடியுமா?”

“வரேன் அட்ரஸ் மெசேஜ் பண்ணுங்க”

“தேங்க்ஸ் ஆகாஷ் பீஸ் எவ்வளோ ஆனாலும் பரவாயில்ல”

சிரித்தபடி “பாத்துக்கலாம் பை”

சாரு போனை வைத்துவிட . . . இந்த உரையாடலை முழுவதுமாக சற்று தள்ளி இருந்த சூர்யா கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் வெளியே எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

சாரு சூர்யா மற்றவர்களும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை நாட்டியத்தை பயிற்சியை முடித்து அமர்ந்தனர். டான்ஸ் ஸ்கூலில் வழக்கமாக நடனத்தை மட்டுமே முழுமையாக பயிலும் மாணவர்கள் இருந்தனர். மற்ற பள்ளி படிப்பை படிக்கும் மாணவர்கள் சனிக்கிழமைகளில்தான் பெரும்பாலும் வருவார்கள். பள்ளி நாள் என்பதால் அன்று மாணவர்கள் குறைவாக இருந்தனர்.  

“சாரு எதோ லீகல் பிராப்ளம் சொன்னியே . . நான் கூட வரட்டுமா?” சூர்யா கவலையோடு கேட்டான்.

“தேங்க்ஸ் சூர்யா நானே ஹேண்ட்ல் பண்ணிப்பேன்” மெல்லிய புன்னகையோடு மறுத்தாள்.

சூர்யாவிற்கு அவள் தன்னை புரிந்துக் கொண்டும் இப்படி செய்வது வருத்தமாக இருந்தது. அவளிடம் நேரிடையாக “ஐ லவ் யூ” சொல்லும் தைரியம் அவனுக்கு இல்லை. அவள் முடியாது என சொல்லிவிட்டாள். நிச்சயமாக அவன் இதயத்திற்கு அதை தாங்கிக் கொள்ளும் வலிமை இல்லை.

ரவு ஏழு மணி ஆகாஷ் சாரு வீட்டிற்கு வந்தான்.

“உட்காருங்க . . தேங்க்ஸ் பார் கம்மிங் ஆகாஷ்”

“நோ மோர் பார்மாலிடிஸ் சாரு”

“காபி ஆர் டீ?” அவள் கேட்க

“காபி ரெண்டு ஸ்பூன் சுகர்.” உரிமையோடு கேட்டான்.

அவள் காபி எடுத்து வர சமையலறை செல்ல . . ஆகாஷ் ஹாலில் அவள் வாங்கிய மெடல்கள் மற்றும் புகைப்படங்களை நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.