Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

ன்று 1999

டுத்து வந்த நாட்களில் சித்தார்த் உற்சாகமாக இருந்தான். திலோ அவனை வேணும் என சொன்னதும் பழைய சித்தார்த்தாக இன்னும் பொறுப்பான பையனாக மாறினான்.

அவளுக்கான அனைத்து வேலைகளையும் அவனே செய்ய ஆரம்பித்தான்.

அவன் அவளுக்காக டைம் டேபிள் சார்ட்டை ஒன்றை உருவாக்கினான். எதெதற்கு எவ்வளவு நேரம் என்பதை பட்டியிலிட்டான்.

அதன்படி அவள் காலையில் எழுந்து குளித்து ரெடியானதும் சித்தார்த்துக்கு தகவல் தர வேண்டும்.

தகவலுக்காக அவன் கூர்க்காவை இரு வீட்டிற்கும் வேலையாளாக மாற்றினான்.

திலோ ரெடியாகி வந்ததும் அவளை அழைத்து வந்து சித்தார்த்திடம் ஒப்படைக்க வேண்டிய முக்கியமான வேலை கூர்க்காவுடையது.

அதன் பிறகு அவளுக்கு சத்தான உணவை சமைப்பது சித்தார்த் வீட்டிலிருந்த சமையல்காரரின் பொறுப்பு.

அவர் அன்றாடம் அவளுக்காக முந்திரி, பாதாம், பிஸ்தா என ஏதாவது ஒன்றை அரைத்த பேஸ்ட்டை பாலில் சேர்த்து சுண்ட காய்ச்சி தர வேண்டும்.

அது அவளுக்கு மட்டும்தான். வீட்டில் உள்ள வேறு யாருக்குமல்ல.

அதன் பின் டிபன் அதுவும் ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளாக இருக்க வேண்டும்.

காய்கறிகள், பழங்கள் ஏன் அசைவம் கூட இருக்க வேண்டும். காலையில் அவள் ப்ளேட்டில்               4 இட்லியோடு சேர்த்து அதற்காக வைக்கப்படும் சைட்டிஷ்களின் எண்ணிக்கையே 8 ஆகும்.

சட்னி, சாம்பார், காய்கறிகள் சாலட். பழங்களின் சாலட், கட்டாயம் முட்டை அல்லது ஏதாவது அசைவ கறி குழம்பு அல்லது வறுக்கப்பட்ட கறி பீஸ் என இருந்தது திலோவின் காலை உணவு

மதியம் சாதம் அதற்கு ஏற்ப காய்கறி குழம்புகள் அதுவும் நெய்யில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும், கீரை கூட்டு என எல்லாமே ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

ஊட்டி என்பதால் பச்சை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ் மற்றும் கீரை வகைகள் என அனைத்தும் தினமும் பிரஷ்ஷாக சமைக்க ஆர்டர் செய்தான் சித்தார்த்

மாலையில் சின்னதாக ஒரு டிபன் ஐட்டம் அதாவது வெண்ணெய் தடவிய பிரட் டோஸ்ட் கூடவே பழங்களின் ஜூஸ் கட்டாயம் இருக்கும்.

எந்த டிஷ்ஷாக இருந்தாலும் நெய் அல்லது முந்திரி பாதாம் அரைத்த விழுது இருக்க வேண்டும்.

நைட் டிபன் சப்பாத்தி வெண்ணையில் கலந்து செய்த சப்பாத்தி மறுபடியும் பால்.

தினமும் இம்முறையில் மெனுவை தயாரித்து வைத்திருந்தான். சரியாக நடக்கிறதா என பார்க்க பாட்டியை வேறு நியமனம் செய்தான்.

அவரும் இளமையில் சாப்பிடாத உணவுகளை திலோவின் பெயரை சொல்லி செய்து உண்டு மகிழ்ந்தார்.

தாத்தாவுக்கு ஷூகர் என்பதால் அவரால் பாட்டி செய்யும் லீலைகளை கண்டு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

திலோ என்ன சாப்பிடுகிறாளோ அதையே அவனும் சாப்பிட்டான்.

மற்றவர்கள் தங்களுக்கேற்ப எதை வேண்டுமானாலும் செய்து கொள்ள பர்மிஷன் கொடுத்திருந்தான்.

நல்ல ஆரோக்கியமான சாப்பாடு உணவு முறைகளால் ஏற்கனவே ஏழ்மை நிலையிலும் வெண்ணைய் நிறத்தில் பால் போன்று இருந்தவள் இப்பொழுது 6 மாதத்தில் அவள் இன்னும்  கொழு கொழுவென உருண்டையாக வெண்ணையாகவே மாறிவிட்டாள்.

அவளின் அழகு மெருகேற மெருகேற அவளின் தாய்க்கு மகிழ்ச்சியாக இருந்தது. தந்தைக்கோ பயமாக இருந்தது.

மாதாமாதம் டாலின் செக்கப்புக்கு டாலும், சித்து, தாத்தா, பாட்டி என 4 பேரும் சென்று விடுவார்கள். சித்தார்த்தின் புண்ணியத்தில் தாத்தாவும் பாட்டியும் கூட செக்கப் செய்து தங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டார்கள்.

மாதாமாதம் டாலின் உடல் எடையைப் பரிசோதனை செய்வதும், ஹீமோகுளோபின் அளவு இரத்தத்தில் எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதனை செய்வதும் அதற்கேற்ப உணவு பட்டியலையும் அடிக்கடி மாற்றி மாற்றி அமைத்தான் சித்தார்த்.

சித்தார்த் செய்யும் செயல்களைக் கண்ட திலோவின் தந்தை மகாதேவனுக்கு அச்சம் ஏற்பட்டது. அவர் தன்னைத்தானே தாழ்வாக மனதுக்குள் நினைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.

பெரிய இடத்து சம்பந்தம் என்பது பூமிக்கும் ஆகாயத்திற்கும் இருக்கும் தூரம்.

தான் சாதாரண போஸ்ட்மேன், சித்தார்த்தின் தந்தையோ பெரிய கோடீஸ்வரர், புகழ்பெற்ற பிசினஸ்மேன். தன் பெண்ணை சித்தார்த்திற்கு கல்யாணம் செய்ய எப்படி சம்மதிப்பார்.

தன் மகளுக்கு இப்படி ஆசை காட்டி கடைசியில் எதுவுமில்லை என தெரிந்தால் அவள் மனம் புண்படுமே என ஒரு சாதாரண அப்பாவாக யோசித்தார் மகாதேவன்.

ஆனால் பார்வதியோ அவளின் வளர்ச்சியைக் கண்டுப் பெரிதும் மகிழ்ந்து போனாள்.

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகாsaaru 2018-07-17 14:23
Nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகாThenmozhi 2018-06-26 21:36
nice update Sasirekha 👍👍

Thilo kobama poyitangale, Sid avangalai poi samathanapaduthurathuku munadi avanga yarunu therinchupara?

Company-la iruka thapana activities-ai stop seivara?

Waiting to read ji.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகாmahinagaraj 2018-06-22 12:24
super...... :clap: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகாராஜேந்திரன் 2018-06-21 23:10
ஒரே சமயத்தில குட்டி டால் அன்றுல பிரிஞ்சாங்க இன்றுலயும் பிரிஞ்சாங்க இது என்ன இது இந்த எபி சோகமா முடிஞ்சிடுச்சி 3:) :angry: அடுத்த எபியை ஹாப்பியா காட்டுங்க :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகாராணி 2018-06-21 23:09
திலோ சித்துவிடம் கோச்சிக்கிட்டு போகாம இருந்து ஆபிஸ்ல நடக்கற தில்லுமுல்லுகளை பற்றி சொல்லியிருக்கனும் 3:)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகாvijayalakshmi 2018-06-21 23:07
குட்டி சித் பாவம் facepalm பெரிய சித் திலோ சொன்னதை நம்புவானா :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகாAdharvJo 2018-06-21 21:48
wow awesome rendu series-um eppadi ungalala timely update adhuvum ippadi lengthy updates kodukamudiyudhu really appreciate your effort and dedication sasi ma'am :hatsoff: special thanks for the long fb sequence :dance: expected sid would get wild towards mahadevan but sid purindhu kondu vitu koduthu kathirpadhu azhagu... (y)

Mahadevan oda part in today's epi is very much justifiable :clap: irukuradhai vaithu avanga daughter-i valaka ninaipadhu pirkalathil thilo emaramal irupadharkagavum as a dad avanga yosipadhu really awesome :hatsoff: happiness doesn't rest on royal leaving lone. (y)

Ouch coming to present doll ena ippadi sodhapitinga ponadhum ponanga avanga thaan sid oda delicate darling-n sollittu poirukalame facepalm :cool: ninga ena zoom pottu katala
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகாAdharvJo 2018-06-21 21:52
Anyway sid-k ippovadhu office scam patri theinjadhey adhu podhu :cool: wat would be the next act?? Will sid try to approach thilo?? Will thilo continue working in Sid's office?? Doll n sid eppadi pirinjanga?? Therindhu kola look forward for next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகாmadhumathi9 2018-06-21 18:43
:Q: ippadi aayiduche? Poga poga romba viruviruppa poguthu.nice epi.adutha epiyai eppo padippom endru miga aarvama irukku. (y) :thnkx: :GL: :clap:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top