(Reading time: 33 - 65 minutes)

வாணி இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு மொட்டை மாடிக்கு சென்றிருக்க, துஷ்யந்த் கங்காவின் அறையில் இருந்தான். கணவன் என்ற உரிமையோடு, அவள் உள்ளே வரும் போது அவளை அப்படியே பார்த்தப்படி அம்ர்ந்திருந்தான். அவள் மனைவி என்று தெரிந்த பின்னும் அவளை கட்டியணைக்க வேண்டும், முத்தமிட வேண்டும்.. அவளோடு இந்த இரவை கழிக்க வேண்டும் என்றெல்லாம் அவனுக்கு தோன்றவில்லை. அவள் அவனுக்கு மனைவி என்பதே அவனுக்கு நிறைவை கொடுத்திருந்தது.

“பால் கொண்டு வரட்டுமா?”

“வேண்டாம் வீட்டுக்கு போய் குடிச்சிக்கிறேன்..”

“நீங்க போகும் நேரம் அங்க எல்லோரும் தூங்கிக்கிட்டு இருப்பாங்க..”

“சரி கிளம்பும் போது குடிச்சிட்டு போறேன்..”

“நான் நமக்கு திரும்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னது உங்களுக்கு வருத்தமா இருக்கா..”

“நான் தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் இல்ல.. எனக்கு உன்கூட இருக்கணும்.. அதை யாரும் தப்பா பேசிடக் கூடாது.. அதுக்கு நமக்கு கல்யாணம் ஆகணும்னு நினைச்சேன்.. நமக்குள்ள ஏத்கனவே அந்த பந்தம் இருக்கும் போது திரும்ப எதுக்கு கல்யாணம்..?? “

“சரி இத்தனை நாள் உங்கக்கிட்ட இந்த உண்மையை மறைச்சு வச்சதுல உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா?”

“இல்லை.. என்னால உன்னை புரிஞ்சிக்க முடிஞ்சுது.. ஒரு உறவை சொல்லி தெரியறது வேற, அதை உணர்ந்து புரிஞ்சிக்கிறது வேற.. எனக்கு நமக்கு நடந்த கல்யாணம் ஞாபகத்தில இல்லை. இதில் மாமா சொன்னதையும் கேட்டுக்கிட்டு, நீ சொன்னதையும் கேட்டுக்கிட்டு இருக்க நான் திரும்ப மாறிடுவேனோன்னு தானே உன்னோட பயம்.. அதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது..” என்று அவள் மனதில் இருந்த உறுத்தலை அப்படியே கூறினான்.

“இன்னைக்கு வாணி அக்கா சொன்னதில இருந்து யோசிக்கிறேன்.. ஆனா நம்ம கல்யாணம் எனக்கு ஞாபகத்துக்கே வரல.. ஆனா நமக்கு கல்யாணம் ஆனதா தான் நான் முதலில் ஃபீல் பண்ணேன். ஆனா அதைப்பத்தி மாமாக்கிட்ட கேட்டப்போ எதெதுவோ சொன்னார். அதெல்லாம் என்னை குழப்பினாலும் எதையும் நான் முழுசா நம்பல.. இதுல நீ வேற ஒரு கதை சொன்ன..

ஆமாம் கதை தான்.. என்னை உன்னோட வாழ்க்கையில் இருந்து விலக்கி நிறுத்த தான் இந்த கதையை நீ சொன்னன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்.. மத்தப்படி உன்னோட வாழ்க்கையில் எனக்கு முன்ன ஒருத்தர் வந்திருக்க முடியாதுன்னு நான் மனப்பூர்வமா நம்பினேன்.. ஏன்னா எப்போ மானத்தை காத்துக்க உயிரை போக்கிக்க நினைச்சியோ, அப்பவே உன்னோட தங்கச்சி உயிருக்காக இருந்தாலும் சரி, நீ ஒருத்தரோட மனைவின்னா என்னோட 3 மாசம் இருக்க சம்மதிச்சிருக்கவே மாட்டேன்னு நல்லாவே புரிஞ்சுது. உன்னோட கழுத்தில் இருக்கும் தாலிக்கும், நீ என்னை விட்டு விலகிப் போறதுக்கும் வேற ஏதாவது காரணம் இருக்கும்னு நினைச்சேன்.. ஆனா நமக்கு கல்யாணம் ஆகியிருக்கும்னு நினைக்க தோனல.. நீ சொன்னதை நம்பினது போல காட்டிக்கிட்டேன்..  இத்தனை வருஷம் உன்னோட மனசு மாற நேரம் வேண்டும்னு நினைச்சு காத்திருந்தேன்.. அப்ப கூட, நம்ம பந்தம் ஜென்மம் ஜென்மமா தொடருது.. அதான் இந்த ஜென்மத்திலும் நாம கண்டிப்பா சேருவோம்னு நம்பிக்கையில் இருந்தேன்.. இப்போ சொல்லு இந்த உணர்வுக்கு பேர் என்ன? நடுவுல உன்னோட மனசு மாறாதான்னு தான் சோர்ந்து போனேனே தவிர, உன்னை விட்டு என்னால எப்பவும் விலக முடிஞ்சதில்ல..

இங்கப்பாரு கங்கா..  இனி நாம வாழப் போற வாழ்க்கை நிறைய காலம் இருக்கு.. அதுல நான் கொடுக்கக் கூடிய உறுதி ஒன்னு தான்.. உனக்கு உங்க அப்பா,அம்மா எதுக்காக கங்கான்னு பேர் வச்சாங்கன்னு தெரியாது.. அந்த கங்கை நதியில் எத்தனை பாவங்கள் குவிந்தாலும் அதில் இருக்கும் புனித சக்தி அந்த பாவத்தையெல்லாம் உள்ள இழுத்துக்குமாம்.. அதேபோல தான் நீயும், ஆரம்பத்தில் உன்னை எத்தனை விதத்திலும் கலங்கப்படுத்த முயற்சித்தாலும் சரி, நீ புனிதமானவ, உன்னோட வாழ்க்கையில் என் ஒருத்தனுக்கு மட்டும் தான் நீ உன்னோட மனசையும் உடலையும் தந்திருக்கன்னு நான் நம்பறேன்.. எப்பவும், காலம் முழுசும் நம்புவேன். அது என்னைக்கும் மாறாது.” என்றதில் அவள் முகத்தில் பெருமிதம்.

“உங்களை மாதிரி ஒரு கணவன் கிடைச்சும் சந்தோஷமா குடும்பம் நடத்த குடுப்பணை இல்லாத துரதிர்ஷ்டசாலின்னு என்னை நான் நினைச்சிருந்தேன்.. ஆனா இப்போ சொல்றேன் உங்களுக்கு மனைவியா ஆனதே என்னோட அதிர்ஷ்டம் தான்.. அதோட பலனை கொஞ்சம் தாமதமா அனுபவிக்க வேண்டியிருக்கு..” என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

அணைப்பில் இருந்தப்படியே அவளது முகத்தை நிமிர்த்தியவன், “நீ தான் என் வாழ்வில் கிடைச்ச மிகப் பெரிய வரம்.. நான் தான் அதிர்ஷ்டசாலி.” என்று உருக்கமாக பேச,

“ரெண்டுப்பேருமே அதிர்ஷ்டம் பண்ணவங்க தான்.அதை நாம இனி வாழப் போகும் வாழ்க்கையிலும் காட்டணும்..” என்றவள், அவனது உதடுகளை தன் இதழ் கொண்டு சிறை செய்தாள்.

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்

உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்

நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

ப்ர்ஃண்ட்ஸ் அடுத்த எப்பி பைனல் எப்பி, அது எப்படியோ கொஞ்சம் நிறைய பக்கங்கள் இருக்கும்னு நினைக்கிறேன்.. அதை ஒரே எப்பியா கொடுக்க முடியாட்டியும் ரெண்டா பிரிச்சி உடனே உடனே கொடுக்கிறேன். ஒரே எப்பியா கொடுத்தாலும் கொடுப்பேன். அதனால இதை penultimate epi வச்சுப்போம்.. அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும். நன்றி.

 

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 41

Episode # 43

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.