(Reading time: 33 - 65 minutes)

வீட்டிற்கு வந்ததும் பெரியவர்கள் இருவருக்கும் இரவு உணவு தயாரித்து கொடுத்தவள், பின் அவர்கள் படுக்க போகும் முன் அவர்களுக்கு அருந்துவதற்கு பாலும் கொடுத்துவிட்டு, செல்வாவிற்கு டம்ளரில் பால் எடுத்துக் கொண்டு நர்மதா அறைக்குள் வந்தாள். காலையிலிருந்து கோபமாக இருந்தவள் இன்னும் கூட அவனோடு பேசவில்லை. அவளுடனான தனிமைக்கு அவன் காத்திருக்க, உள்ளே வந்தவள் அவனிடம் பேசாமல் பாலை கட்டிலுக்கு அருகே இருந்த மேசை மீது வைத்துவிட்டு, கட்டிலின் மறுப்பக்கத்திற்கு செல்ல அவள் முயற்சிக்க, செல்வா அவளது கையை பிடித்து நிறுத்தினான்.

“என்மேல இன்னும் கோபமா? என்னை மன்னிக்க மாட்டியா?”

“நான் ஏன் உங்களை மன்னிக்கணும்.. கங்கா அக்கா தான் உங்களை மன்னிக்கணும்.. அவங்க தான் மன்னிச்சிட்டாங்கல்ல.. அப்புறம் என்ன?”

“நான் மன்னிப்பு கேட்டது அண்ணி விஷயத்துக்கு இல்ல.. நம்ம விஷயத்துக்கு.. ஆரம்பத்துல காலேஜ் படிக்கிற காலத்திலேயே நான் செஞ்ச தப்பு.. அதாவது உன்னை ரொம்ப காதலிச்சும், அதை மறைச்சு, மறந்து, அண்ணாவோட வாழ்க்கையில நடந்ததை மனசுல வச்சு, போலியா உன்னை காதலிக்கிலன்னு பொய் சொன்னதுக்காக.. என்னென்னமோ தப்பு தப்பா பேசி உன்னை காயப்படுத்தினதுக்காக.. உன் மேல ரொம்ப காதல் இருந்தும் திரும்ப ஆறு வருஷம் கழிச்சு பார்த்த பிறகும் அதே பணம் விஷயத்தை சொல்லி உன்னை காயப்படுத்தினதுக்காக..  ஆனா அது தெரிஞ்சே உன்னை காயப்படுத்தினது. காதலிச்ச பொண்ணு அண்ணனுக்காக பார்த்து இருக்காங்களே அப்படிங்கிற விரக்தில நீ என்னை தப்பா புரிஞ்சிக்கணும்னு வேணும்னே தான் அப்படி பேசினேன்.

“இது எல்லாம் நிஜமா.. நீங்க என்னை காதலிக்கிறது உண்மையா?”

“சத்தியமா உண்மை தான்.. அந்த நேரம் அந்த சாரு எங்க குடும்பத்துக்கு கொடுத்த ஏமாற்றத்துல நான் எல்லாமே தப்பா புரிஞ்சிக்கிட்டு உன்னை காயப்படுத்தியிருக்கேன்.. ஆனா நம்ம கல்யாணத்துக்கு முன்னமே நான் உன்கிட்ட அப்படி பேசினதுக்கு எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா? அதுக்குப் பிறகும் உன்னை காயப்படுத்தியிருக்கேன்னா அது கண்டிப்பா என்னோட மனசு அறிஞ்சு பேசினதில்ல.. அந்த நேரம் கூட என் மனசுல எல்லாம் மனுஷங்களும் பணத்தை தான் பெருசா நினைக்கிறாங்கன்னு இருந்த நினைப்பு மாறலன்னாலும், உன்னோட விஷயத்துல அப்படி எப்பவும் நினைச்சது கிடையாது மது..”

“ஒரு பொண்ணு தானா தைரியத்தோட ஒரு பையன்கிட்ட போய் காதல் சொல்றான்னா அவ அந்த காதலில் எவ்வளவு ஸ்டாராங்கா இருப்பா தெரியுமா? அந்த காதல் தரும் தைரியம் தான் துணிஞ்சு தன்னோட மனசுல இருக்கிறத சொல்ல வைக்கும்.. அப்படி தைரியத்தோட வந்து உங்கக்கிட்ட சொன்னப்போ அதை நீங்க அலட்சிய படுத்தினதும் இல்லாம அப்படி நீங்க பேசினது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா ரிஷப்.. இன்னும் கூட நீங்க பேசின வார்த்தை என்னோட மனசை அறுக்குது.. உங்க மனைவியா நான் எல்லாமே மறக்கணும்னு நினைச்சாலும் அப்பப்போ உங்க செயல் அதை எனக்கு ஞாபகப்படுத்திடுது. அதான் கங்கா அக்கா, யமுனா பத்தியெல்லாம் நீங்க தப்பா பேசினதும் நான் அப்படி கோபப்பட்டேன்..

“எனக்கு புரியுதுடா.. ஆனா இப்போ எல்லாமே நான் புரிஞ்சிக்கிட்டேன்.. எல்லோருமே பணத்துக்காக பார்க்க மாட்டாங்கன்னு கங்கா அண்ணியோட இத்தனை வருஷ வாழ்க்கை எனக்கு புரிய வச்சிடுச்சு.. அதுக்கும் முன்னமே என்னொட மதுவோட காதலும் எனக்கு அதை புரிய வச்சிருக்கு.. ஆனா அதை தெளிவா உன்கிட்ட சொல்லாம விட்டுட்டேன்.. ஆனா இனி உன்னோட காயப்பட்ட மனசுக்கு என்னோட காதல் தான் மருந்து.. என்னை மன்னிப்பல்ல..”

“இதுக்கும் மேல உங்களை மன்னிக்காம இருப்பேனா ரிஷப்.. அதெல்லாம் எப்பவோ மன்னிச்சாச்சு.. ஆனா தண்டனையும் உண்டு.. உப்பு போட்ட காப்பி..” என்று அவள் சொன்ன நொடி, “மது.. ஊ..ஊ..” என்று அவளை அணைத்துக் கொண்டவன், என்னோட மதுக்காக என்ன தண்டனை வேணும்னாலும் ஏத்துப்பேன்..” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.