(Reading time: 9 - 17 minutes)

“என் கிளைண்ட் டாட்டர் சேரணுமா?” ரீல் ஆரம்பித்தது

“எனக்கு தெரியாதுடா” வாலட்டிலிலேயே குறியாக இருந்தாள் “அவங்க பி.ஏ.தான் இதெல்லாம் பாத்துக்கறாங்க? அப்புறமா நம்பர் தரேன்”

“அன்னிக்கு பார்டில காஞ்சனா மேடம் கூடவே  மண்டையில ஒரு கொண்டையோட சைட் லாக் போட்டுகிட்டு சுத்திச்சே  அதுதான் டீச்சரா?” சாருவை தெரியாதது போலவே கேட்டான்

“யாராட சொல்றே?” பத்மாவதி யோசித்தவண்ணம் கேட்க

“அதாம்மா பேரு என்ன சா .. சா” ஆகாஷ் திணறலாக நடிக்க

“சாருலதாவ சொல்றான்மா . . அது கொண்ட இல்லடா போனிடைல் . . ஹேர் கிளப் உனக்கு சைட் லாக்கா . . எல்லாம் கொழுப்பு” லலிதா கண் இன்னமும் வேலட் மேலேயே இருந்தது.

“அப்படியெல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது ஆகாஷ்” இது அம்மா

“இல்லமா அந்த பொண்ணு உர்ர்ர்ர்னு இருந்திச்சா” என பேச முற்பட்டவனை மீண்டும் முறைக்க ஆப் ஆனான்.

“சாருதான் கிளாஸ் எடுப்பா” கேட்காமலேயே லலிதா ஆலாபணையை ஆரம்பித்தாள்

“ரொம்ப நல்ல பொண்ணுமா . .  கஷ்டப்பட்டு முன்னேறின பொண்ணு  . . சின்ன வயசில இருந்தே சாரு காஞ்சனாகிட்ட டான்ஸ் கத்துகிட்ட அப்புறம் படிபடியா அதே ஸ்கூல்ல டீச்சர் ஆயிட்டா.”

“ஐயோ பாவம் பொண்ணு . .”  பத்மாவதி குரலில் வருத்தம் தெரிந்தது

சாருவிற்காக அம்மா வருந்துவது  ஆகாஷிற்கு கோபமாக வந்தது. இருந்தும் ஒன்றும் செய்ய இயலவில்லை.

“சாரு ரொம்ப திறமைசாலி அதனாலதான் இங்கயும் அவளை அழைச்சிகிட்டா காஞ்சனா . .” என முடித்தாள் லலிதா

சில பெண்களுக்குள் போலீஸ் வக்கீல் சிஐடி இப்படி பல அவதாரங்கள் அடங்கி இருக்கும் அப்படிபட்டவர்களில் லலிதாவும் ஒருத்தி என ஆகாஷிற்கு தோன்றும். இன்னமும் லலிதா சாருவிடம் சரியாக பேசக் கூட இல்லை. ஆனால் சாருவின் ஜாதகத்தையே சொல்கிறாள்.

ஆகாஷ் லலிதாவிற்க்கு வேலட்டை கேட்காமலேயே கொடுத்தான். “அந்த பயம் இருக்கட்டும்” என சொல்லி வாங்கியவள் அதை திறக்க உள்ளே முருகன் டாலர்தான் இருந்தது பணம் இல்லை. இத்தனை நேரமும் தன் கண்முன்னால் இருந்த வேலட்டில்  எப்படி டாலர்  மாறியது என குழப்பமாக அவனை பார்த்து முறைக்க . . புன்னகையுடன் “மேஜிக்” என்றான்.

”டேய் எப்படி . . அம்மா இதுல” என திணறியவளை அவள் குழந்தை ஹரியின் அழுகை சத்தம் அழைக்க . . அந்த வேலட்டை அவன்மேல் எரிந்தாள். இதை எதிர்பார்த்தவன் கேட்ச் பிடித்து அதை திறக்க உள்ளே பணம் வந்தது. அதை பிடுங்கி வேகமாக லலிதா ஒடிவிட்டாள். “இன்னும் ரெண்டு பேரும் குழந்தை மாதிரியே இருக்கீங்க . . கடவுளே” என பத்மாவதி முணுமுணுத்தார்.   

காஷ் சாப்பிட்டு முடித்ததும் பத்மாவதியும் சென்றுவிட  மீண்டும் குழப்பங்கள் பேக் டு த பெவிலியனாய் அவன் மனதை ஆக்கிரமித்த்து.

மனித உறவுகள் ஒருவனுக்கு துன்பத்தை மறந்து இன்னல்களில் இருந்து காப்பாற்ற முடியாவிட்டாலும் இதமான சூழ்நிலையை தர வேண்டும். அந்த வகையில் பத்மாவதியும் லலிதாவும் ஆகாஷிற்க்கு எப்பொழுதுமே பக்க பலமாக இருக்கிறார்கள்.

பத்மாவதி மகனுக்கு உணவு ஊட்ட யத்தனிக்கும் சமயங்களில்  “நான் என்ன சின்ன குழந்தையா வேண்டாம்மா” என  மறுத்துவிடுவான். ஆனால் மனம் தளர்ந்த நிலைகளில் பத்மாவதி அவனின் உடல் மொழிகளைக் கொண்டே அறிந்துவிடுவார். சோர்ந்த நிலையில் சாப்பிட மாட்டான்.

இன்றும் அவனை புரிந்து அவரே வலிய வந்து ஊட்டினார். அவனால் மறுக்கவும் தடுக்கவும் மனம் வரவில்லை.  மனதின் ஒரத்தில் அன்னை தன்னை பிரிந்துவிடுவாளோ என கலங்கியது. பத்மாவதிக்கும் ஆகாஷ் எதோ பெரிய சிக்கலில் இருப்பதை உணர்ந்தார். என்னவென்று கேட்டால் நிச்சயம் சொல்லமாட்டான்.

தன் ஜீனியர் லியாவிற்கு போன் செய்தான். பின் மற்றொரு ஜீனியர்க்கு  தான் டெக்சாஸ் வர இன்னும் ஒரிரு வாரம் ஆகும் அதுவரை சில கேஸ் மற்றும் அதன் விவரங்களை கூறினான்.

சாருவை பற்றி கூறி அவளைப் பற்றிய முழுவிவரமும் சேகரித்து கொடுக்குமாறு கூறினான்.

மற்ற கேஸ் விவரங்களை பார்த்துவிட்டு  இரவு படுக்கவே வெகு நேரம் ஆகிவிட்டது. காலையில் ராகவ் லலிதா சீக்கிரமே அலுவலகம் கிளம்பிவிட்டனர். பத்து மணி அளவில் ராமமூர்த்தி தனக்கு இங்கு பரிட்சையமான சிலரை காண சென்றுவிட்டார்.

பத்மாவதி குழந்தை ஹரிக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார். ஆகாஷ் நிதானமாக எழுந்து வந்தான். அவனிடம் குழந்தையை கொடுத்துவிட்டு காபி கொண்டுவந்து கொடுத்தார்.

சோம்பல் முறித்து காபி குடித்தான். மீண்டும் குழந்தையோடு விளையாட ஆறு மாத குழந்தை இன்னமும் அகராதியில் சேர்க்கப்படாத வார்த்தைகளை  “ஞே ஞே” “முமு” என சொல்லியவாரு கெக்கே பிக்க என சிரித்தது.

“குளிச்சிட்டுவாடா டிபன் சாப்பிடணும்”

“நாளைக்கு சேர்த்து குளிச்சிக்கிறேன்மா” என்றவனை

“சோம்பேறி . .போ குளிடா” என செல்லமாக அதட்டினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.