(Reading time: 10 - 20 minutes)

“உங்களுக்கு நெருங்கின  வட்டாரத்துலையே இத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க.... அப்பறம் எப்படி விஷயம் உங்களுக்குத் தெரியாம இருந்திருக்கு...”

“என்கிட்டே இந்த மாதிரி யாரும் வந்து சொன்னதே இல்லை யுவர் ஹானர்... இந்த நரேஷ் உடம்பு மொத்தமும் கிரிமினல் மூளைதான் இருந்திருக்கு... கூட இருந்த என்னாலேயே கண்டு பிடிக்க முடியாதபடிக்கு தப்பு பண்ணி இருக்கான்... அவன் தேர்ந்தெடுக்கறதும் அந்த மாதிரி ஆளுங்களைத்தான்.... எங்க சொந்தக்காரங்கள்ல யார் ரொம்ப பயந்த சுபாவமா, பண வசதி இல்லாம  இருக்காங்களோ அவங்களைத்தான் மிரட்டி இருக்கான்.... இதுக்கூட அவன் உள்ள இருக்கான்... என்கிட்டே விஷயத்தை சொல்லி ஏதானும் நடவடிக்கை எடுக்க வைக்கலாம் அப்படிங்கற நினைப்புலதான்....”

“அதையே இத்தனை நாள் அவங்க பண்ணி இருக்கலாமே...”

“யுவர் ஹானர்.... நாம எல்லாருமே ஏதோ ஒரு விதத்துல இந்த சமுதாயத்துக்கு பயந்துதான் வாழறோம்... நம்மளோட எண்ணம் என்னங்கறத விட சுத்தி இருக்கறவன் நம்மை பத்தி என்ன நினைக்கறான் அப்படின்னுதான் கவலைப்படறோம்... ஒரு பெண்ணோ, பையனோ தவறான வழில போனா, உன் வாழ்க்கையை இப்படி கெடுத்துக்கிட்டயேன்னு சொல்றதுக்கு முன்னாடி, இப்படி பண்ணிட்டு வந்து நிக்கறியா, மத்தவங்க முகத்துல நான் எப்படி முழிப்பேன் அப்படின்னுதான் கவலைப்படறோம்... இந்த பயம்தான் நரேஷ் மாதிரி ஆளுங்களுக்கு சாதகமா இருக்கு.... வெளிய சொன்னா குடும்ப மானம் போய்டும் அப்படின்னு மிரட்டியே சாதிச்சுக்கறாங்க....”

“நீங்க சொல்றது சரிதான்... அதுக்காக நீங்க சட்டத்தை உங்க கைல எடுக்கறது எந்த விதத்துல நியாயம்....”

“இப்படி பாலியல் குற்றங்கள்ள ஈடுபடறவங்களுக்கு இதுதான் சரியான தண்டனை நீதிபதி அவர்களே.... அதுவும் அவனோட மனைவியோ, இல்லை தாயோ இந்த தண்டனையை தரணும்... ஒரு ரெண்டு இடத்துல இப்படி நடக்கட்டும்.... அப்பறம் எப்படி பாலியல் குற்றங்கள் குறையுதுன்னு பாருங்க... அதுவும் நரேஷ் பண்ணினதை இன்னும் என்னால ஜீரணிக்க முடியலை... எங்களுக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க.... மற்ற பெண்களுக்கு அநீதி இழைக்கும்போது எப்படி அவங்க முகம் அவன் கண் முன்னால வராம இருந்தது.... இவன் இத்தனை பெண்களுக்கு செய்த அநீதி நாளைக்கு எங்க பெண்கள் தலையில் வந்து விழாதுன்னு என்ன நிச்சயம்.... என் மனசு இன்னும் ஆற மாட்டேங்குது.... இன்னும் இன்னும் அவன் துடி துடிச்சு செத்திருக்கணும்... ஆனா அவன் உயிர் போகாம பிழைச்சிருந்தான்னா  அவங்கிட்ட இருக்கற பணத்தை வச்சு எப்படியாச்சும் இந்தக் கேஸ்ல இருந்து வெளிய வந்திருப்பான்.... அது நடக்கக் கூடாதுன்னுதான் ரெண்டு இடத்துல சுட்டேன்... நான் காலேஜ் டேஸ்ல கத்துக்கிட்ட ஷூட்டிங் இப்போ உதவி செய்தது....”

“நீங்க செய்த குற்றத்திற்கு என்ன தண்டனைன்னு தெரியுமா....”

“எனக்கு தூக்கு தண்டனையே கொடுத்தாக்கூட நான் கவலைப்பட மாட்டேன் யுவர் ஹானர்.... என்னால இந்த சமூகத்துக்கு முடிஞ்ச நல்லதா ஒரு அசுரனை அழிச்சுட்டேன்னு  சந்தோஷமா தூக்கு மேடைக்கு போவேன்....”, நீதிபதி வழக்கின் வழக்கின் தீர்ப்பை மறு வாரத்திற்கு ஒத்தி வைத்து அதுவரை நரேஷின் மனைவியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.... காவலர்கள் நரேஷின் மனைவியை நீதிமன்ற காவலில் வைக்க அழைத்து சென்றார்கள்....

ந்த வழக்குல இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கலை.... “, பாரதி சொல்ல சாரங்கன் அதை ஆமோதித்தான்....

“ஆமாம் பாரதி... இன்னைக்கு உன்னோட வாதத்திற்கு அப்பறமா தீர்ப்பு ஓரளவிற்கு நமக்கு சாதமாகத்தான் வரும்ன்னு நினைச்சேன்.... ஆனா அதுக்குள்ளே அந்தம்மா வேற தீர்ப்பை எழுதிட்டாங்க...’

“ஹ்ம்ம் ஆனா ஒரு விதத்துல அவங்க கொடுத்த தண்டனை சரியோன்னு தோணுது சாரங்கா... வீட்டுல இருக்கற குப்பையை அழிச்சுட்டாலே சமுதாயம் தூய்மையாகிடும்..... ஆனா முக்கால்வாசிப் பேர் தப்பு செய்யற மகனையோ, மகளையோ, துணையையோ காப்பாத்தத்தான் போராடறாங்க.... அதுனால சமுதாயத்துக்கு எத்தனை பாதிப்புன்னு யோசிக்க மாட்டேங்கறாங்க....”

“ரொம்ப சரி பாரதி, south side எவ்வளவோ பரவாயில்லை.... north படு மோசம்.... பஞ்சாயத்துங்கற பேருல அவங்களே பாலியல் வன்முறையை தூண்டறாங்க.... கீழ் ஜாதி பெண்களை உயர்ந்த ஜாதி ஆண்கள் கூட்டு பாலியல் வன்முறை செய்வதெல்லாம் அங்க சர்வ சாதாரண தீர்ப்பா போச்சு....”

“ஹ்ம்ம் மொத்தத்துல இன்னும் கொஞ்ச நாள்ல இரவு பன்னிரெண்டு மணி இல்லை, பகல் பன்னிரெண்டு மணிக்கே பெண்கள் தனியா நடமாட முடியாம போய்டும் போல.... எழுபதாண்டு கால சுதந்திர இந்தியாவின் சாதனையா இதை சொல்லலாம்....”

“ஹ்ம்ம் கலாச்சாரம், நாகரீகத்துல உயர்ந்தவங்க நாமன்னு பெருமையா பேசின காலம் எல்லாம் மலை ஏறிப் போச்சு.... AIDS, பெண்களுக்கு பாதுக்காப்பின்மை அப்படின்னுதான் நம்ம முன்னேற்றம் போகுது.... வரும் அடுத்த தலைமுறையை நினைச்ச ஒரு பக்கம் பயமாவும், இன்னொரு பக்கம் பரிதாபமாவும் இருக்குது... இப்போலாம் ஏதானும் பெண் குழந்தை சிரிக்கறதை பார்த்தாக்கூட அச்சோ எத்தனை நாளைக்கு இந்த சிரிப்போன்னு தோணுது....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.