(Reading time: 10 - 20 minutes)

“பாரதி, சாரங்கன் ரெண்டு பெரும் எப்போலேர்ந்து இப்படி எதிர்மறையா யோசிக்க ஆரம்பிச்சீங்க.... உலகம் முழுக்க ஒரு ஒரு இடத்திலும் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துட்டுதான் இருக்கு... நம்ம இந்தியால பெண்களுக்கு பாதுகாப்பு குறைஞ்சு போச்சுன்னா உங்களை மாதிரி இளைஞர்கள் அதை எந்த விதமா முன்னேற்றலாம் அப்படின்னு பார்க்கணும்... அதை விட்டுட்டு நாட்டை குறை சொல்லிட்டு இருக்கக்கூடாது.... இந்த மாதிரி பாலியல் குற்றங்கள் தனிமனித ஒழுக்கம் சம்மந்தப்பட்டது... அதுக்கு நாடு என்ன செய்யும்...”

“மதி சார் இந்த மாதிரி குற்றங்களை தடுக்க அப்படின்னுதான் அரசாங்கம்ன்னு ஒண்ணை தேர்ந்தெடுத்து ஆள அனுப்பி இருக்கோம்....”

“அவங்களால மட்டும் எல்லாத்தையும் கட்டுப்படுத்த முடியுமா சாரங்கா.... தமிழ்நாட்டை ஜஸ்ட் சென்னையை மட்டும் எடுத்துக்கோ.... கிட்டத்தட்ட 50 லட்சம் மக்கள் வசிக்கறாங்க.... இதுக்கு இருக்க போலீஸ் force வெறும் பதினாலாராயிரம்தான்... எப்படி குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்ன்னு நினைக்கற... இதுலயும் நிறைய பேர் VIPக்களுக்கு பாதுக்காப்பு கொடுக்க, பொதுக்கூட்டங்கள், விழாக்களுக்கு பாதுக்காப்பு கொடுக்கன்னு போயிடறாங்க... மிஞ்சி இருக்கறவங்களை வச்சுத்தான் இந்த அளவு law and order maintain பண்ணிட்டு வர்றோம்.... இது தமிழ்நாட்டுல மட்டும் இல்லை, இந்தியா பூராவுமே இப்படித்தான் இருக்கு... அண்ட் போலீஸ் மட்டும் இல்லை ஒரு ஒரு துறையுமே இப்படித்தான் போதிய வேலையாட்கள் இல்லாம நடந்துட்டு இருக்கு....”

“புரியுது மதி சார்... இந்த மாதிரி தவறுகள் நடக்கும்போது அதை தடுக்க முடியலையேன்னு ஆதங்கம்... அதுதான் பேசிட்டோம்....”

“ஹ்ம்ம் தவறு நடக்கும்போது அதை போலீஸ்தான் வந்து தடுக்கணும்ன்னு இல்லை பாரதி... ஒரு ஒரு தனி மனிதனுமே அதை செய்யலாம்... உதாரணமா இந்த நரேஷ் விஷயத்தையே எடுத்துக்கோ.... இவன் மட்டும் இதுல இன்வால்வ் ஆகலை... எத்தனையோ பேர் இவன் பின்னாடி இருந்து இருக்காங்க.... அவங்கள்ள யாரானும் ஒருத்தர் கம்ப்ளைன்ட் பண்ணி இருந்தா கூட எத்தனையோ பேரை அவங்கிட்டயிருந்து காப்பாத்தி இருக்கலாம்....”

“மதி சார் நம்ம நாட்டுல மனுஷனை விட மணிக்குதான் மதிப்பு ஜாஸ்தி... கடவுள் நுழைய முடியாத இடத்துல கூட காசு நுழையும்.... கம்ப்ளைன்ட் பண்ணினா நரேஷ் அவன் உயிரை எடுப்பான்... அதைவிட அவனுக்கு சாதகமா இருந்து நம்ம வாழ்க்கையை உயர்த்திக்கலாமேன்னுதான் யாரா இருந்தாலும் யோசிப்பாங்க...”

“ஹ்ம்ம் கரெக்ட் பாரதி... நம்ம பேச்சு பாரு... எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போய்டுச்சு.... இன்னும் ரெண்டு நாள்ல அந்த நாராயணன் கேஸ் ஹியரிங் வருது இல்லை... அதுக்குள்ள சந்திரன் வீட்டுக்கு வந்துடுவாரா....”

“நாளைக்கு காலைல சீனியரை டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க மதி சார்... அவரே அனேகமா வழக்கு நடக்கற அன்னிக்கு கோர்ட்க்கு வந்துடுவாருன்னு நினைக்கறேன்....”

“சரி பாரதி... நீங்க ரெண்டு பேரும் இந்த வழக்கு எல்லாம் முடியறவரை கொஞ்சம் கவனமாவே இருங்க....”, சொல்லியபடி மதி விடைபெற, பாரதியும், சாரங்கனும் சந்திரனை பார்க்க சென்றார்கள்....

தொடரும்

Episode 34

Episode 36

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.