(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 05 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

ன்றத் தாயின் முகம் கலங்குவதை கவனித்த ஆகாஷ் நொடியில் செயல்பட்டான். குழந்தை ஹரியை லலிதா அறையில் பொத்னெ படுக்க வைத்தான். குழந்தை  மெல்ல சிணுங்கியது  “சாரி கண்ணா மாமாவ கோச்சிகாதடா . . மாமாக்காக இன்னும் சத்தமா அழுடா” என்று கொஞ்சியவனை குழந்தை ஒன்றும் புரியாவிட்டாலும் தன் குண்டு குண்டு விழிகளால் அவனை உர்ர்ர் என முறைத்தது. அதன் பட்டுப் போன்ற நெற்றியில் முத்தமிட்டு வெளியே வந்தான்.

“அம்மா ஹரி அழறான் . . உள்ள போய் பாருங்க” என்றான்

இன்னமும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராத பத்மாவதி “அந்த பொண்ணு . .” என ஆரம்பித்தவரை

“நான் எல்லாம் பாத்துக்கிறேன் . . நீங்க உள்ள போங்க” என கையை பிடித்து ஹரியுடன் அம்மாவை அறையில்விட்டு கதவை சாத்தினான்.

இவற்றை எல்லாம் கடுகளவும் சீற்றம் குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சாரு.

அவள் அருகில் வந்தவன் “ யேர் கேம் இஸ் ஓவர் டிராமா குயின் . . கெட் த ஹெல் அவுட் ஆப் ஹியர்” என துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாவைப் போல சரசரவென வெடித்தான். அவன் குரலில் ஆத்திரம் இருந்தது ஆனால் அவன் முகத்தில் பிரதிபலிக்கவில்லை.

தன்னை சமாதானம் செய்துக் கொண்டவள் “ ரொம்பவே பயந்துட்டியா ஆகாஷ் . . அதான் போட்டோவ சுருடிட்ட . . அப்போ நான் சொன்னது உண்மைனு நீயே நம்புற . .குட்” என அவனுக்கு நிகராய் ஆத்திரத்தை உமிழ்ந்தாள்

“கெட் அவுட் சாரு . . என்னால டிரெஸ்பாசிங்னு உன் மேல் ஸ்யூ செய்ய முடியும் . . வெளில போ” என அவளுக்கு மட்டும் கேட்கும்வகையில் சத்தம் போட்டான்.

“போறேன் . .ஆனா என் அம்மா எனக்கு கிடைச்சே ஆகணும்”

“பாக்கலாம் பாக்கலாம் . . முதல்ல வீட்டவிட்டு போ”

“ஒரு போட்டவ மட்டும் நம்பி நான் வரல  . . சட்டம் இருக்கு” என்றாள். அவனை ஒரு முறை தன் ஜென்ம்ம பகையாளியாய் ஆசைதீர முறைத்து வெளியேறினாள்.

வெளியேறிக் கொண்டிருந்தவளை விரல்களால் சொடுக்கி நிறுத்தியவன் “நீ எந்த கோர்ட்டுக்கு வேணா போ . .உன்னால ஒண்ணும் செய்யமுடியாது” என முடித்தவனை “முடிஞ்சா மோதி பார்” என அழுத்தம் திருத்தமாக சொல்லி வெளியேறினாள்.

ஆகாஷ் தன் வாழ்க்கையில் சாட்சியங்கள் எதிர்கட்சி காரர்கள் என எத்தனையோ பேரிடம் பேசியிருக்கிறான். ஆனால் இத்தனை கடுமையாக யாரிடமும் பேசியதில்லை அவனுக்கே தான் ஏன் சாருவிடம் இப்படி பேசுகிறோம் என தோன்றியது.

தன் அம்மாவை எப்படியும் சாருவிடமிருந்து காப்பாற்றவிட வேண்டும் என்ற எண்ணம்தான் தன்னை இப்படியெல்லாம் நடக்கவைக்கிறது என தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டான். இனி மற்றவர் மனம் நோகும்படி யாரிடமும் பேசக் கூடாது என  சங்கல்பம் எடுத்துக் கொண்டான். சாருவை தவிர என மனம் கோடிட்டது.

எப்பொழுதும் தன் எதிராளிகளிடம் பயம் கோபம் குழப்பம் போன்ற உணர்வுகளை ஆகாஷ் வெளிப்படுத்த மாட்டான். புன்னகையும் தன்னம்பிக்கையான பார்வை மற்றும் பேச்சுதான் அவனின் மிகப் பெரிய ஆயுதம்.

உளவியல் ரீதியாக கையாளுவான். தான் சொல்வது மட்டும்தான் சரி என்பதைப் போல நம்பவைத்துவிடுவான். எதிரி குழம்பின நிலையில் ஒரு நொடி வீசும் சந்தேகப் பார்வையோ அல்லது தட்டுதடுமாறின பேச்சோ போதும். வெற்றி அவன் பக்கம் கைக் கட்டி சேவகம் செய்ய நின்றிருக்கும்.  

பத்மாவதி அறையிலிருந்து வெளி வந்தவர் “என்னடா அந்த பொண்ணு . .” என பதட்டமாக பேச துவங்கியவரை கைபிடித்து சோப்பாவில் அமர வைத்து அவள் முன்னே கீழே முட்டி போட்டு அமர்ந்தவன்.  “அம்மா அந்த பொண்ணுக்கு எதோ சைக்லாஜிகல் பிராப்ளம் இருக்கு . . யாரை பாத்தாலும் இப்படிதான் உளறும் அதையெல்லாம் நம்பாதீங்க குழப்பிகாதீங்க சரியா. நீங்களும் அப்பாவும் இன்னும் நியூ யார்க் சுத்தி பாக்கவேயில்ல. இந்த வீக் எண்ட் எங்க போலானு லலிதாவோட டிஸ்கஸ் பண்ணுங்க . . ஹரிக்கு என்ன கிப்ட் வாங்காலாம்? லலிதா ராகவையும் நம்மோட டெக்சாஸ் கூடிட்டு போலாமா? அவங்களும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகணும் இல்லயா?” என பேச்சை திசைதிருப்பினான்.

இறுதியாக தாயை கவிழ்க்கும் அஸ்திரத்தை பிரயோகித்தான் “பசிக்குதுமா” என்ற சொல்லை கேட்டதும் உடனே எழுந்து சமையலறை பக்கம் போனார் பத்மாவதி. “சாப்பிடவா கண்ணா . . பசிதாங்க மாட்டே”

“அப்பாடா அம்மா அந்த டெவில் பேச்சை நம்பவில்ல” என ஆறுதல் அடைந்தான்.

சாரு உடலால் அங்கு இல்லாமல் போனாலும் அவள் ஏற்படுத்திய அதிர்வலைகள் மூலம் தன் இருப்பை நிலைநாட்டிக் கொண்டுதான் இருந்தாள். ஆகாஷ் சகஜமாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அவனால் சாருவை மறக்க இயலவில்லை.

ஆகாஷ் தன் ஜீனியர் லாயர் லியாவிற்கு போன் செய்தான். “ கிரேட் ஜாப் லியா . .” என சில நொடி பேசிவிட்டு “அம்மா நான் வெளிய போயிட்டு வரேன் . . அந்த சாரு திரும்ப வந்தா உள்ளவிடாதீங்க ” என்றான் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.