(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ

Partha muthal naale

நமக்கு பிடிச்சவங்களை பத்தி நம்ம மனசு சொல்ற விஷயத்தை அவங்க கிட்ட சொல்றதுக்கு ஏன் தயங்கனும் அது சரியா தப்பான்னு அவங்க அலசி ஆராய்ந்துக்குவாங்க.அதை விட்டுட்டு அதை சொல்லாம இருக்கலாமா? மனசு விட்டு பேசுனா பெருசா நினைக்குற பிரச்சனை கூட சிறுசாகும்.சிறுசா நினைக்குற விஷயம் பெரிய பெரிய சந்தோஷத்துக்கு விதை ஆகும்.

வளை பார்த்து இன்னும் ஒரு நாள் கூட முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை சரவணனுக்கு. மீண்டும் மீண்டும் அவள் ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் கடைக்கண்ணால் பார்த்து சிரித்ததே நினைவில் ஆடியது.சிரிப்பு என்று கூட சொல்ல முடியாது.சிறியதொரு மின்னல் கீற்று போல் புன்னகை.

என்னதான் லஷ்மியுடன் பேசினாலும் மனமும் கண்களும் நேர் எதிரில் இருந்தவனை கவனிக்க தவற வில்லை.ஏனோ இனம் புரியாத ஒரு உணர்வு.கொஞ்சம் முன்னாடி வரை தான் இருந்த மன நிலை எங்கு சென்றது என்று தெரியவில்லை.நிஜமாவே எனக்கு இவனை பிடிச்சிருக்கா? என்ற கேள்விக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல மனம் வர வில்லை .

சரி சம்பந்தி.அப்போ ஒரு நல்ல நாளை பார்த்துட்டு நிச்சயம் வச்சுப்போம். நான் ரெம்ப சந்தோசமா இருக்கேன் சம்மந்தி என்று மித்ரனும் நாராயணனும் கை கோர்த்து கொண்டனர்.

 என் மருமகளை பத்திரமா பார்த்துக்கோங்க சம்பந்தி மா என்று லக்ஷ்மியும் வசந்தியும் உரிமையோடு பேசிக்கொண்டனர்.

 சரி ஷக்தி பாக்கலாம் பாய்.சி யூ மஹி என்று சக்தியும் மஹியும் நட்பு பாராட்டிக்கொண்டனர்.

 சரவணன் எல்லாரிடமும் மரியாதை நிமித்தமாக விடை பெற்று கிளம்பினான். கேட் அருகில் சென்றதும் ஏனோ அவன் மனது திரும்பி பார்க்க சொல்லியது.திரும்பியவன் மனதிற்குள் 1000 முறையாவது நன்றி சொல்லி இருப்பான்.ஆம் சஹி ஜன்னலில் சாய்ந்தவாறு அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். இவன் பார்ப்பான் என்று ஏனோ அவளுக்கும் தோன்றியது. சிரித்தவாறே அருகில் வந்தவன் . திரும்பவும் என்னை பிடிச்சிருக்கா செம்பருத்தி பூ என்று கேட்டான் .அதற்கு தான் அந்த மின்னல் கீற்று புன்னகை.

சஹி உனக்கு சரவணன் மாமாவை பிடிச்சிருக்கா.?

என்னடி மக்கு மாமாவா ?இது எப்போதிருந்து யென்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.

ம்ம்ம்ம்ம் நீ எப்போதிருந்து இப்படி மந்திரிச்சு விட்ட மாதிரி அலையுரியோ அப்போதிருந்து.என்று சொல்லி ஒரு முறைப்பை பெற்று கொண்டாள் மஹி.

 என்ன முறைப்பு வேண்டிருக்கு .உண்மைய சொன்னா இப்படி கோவம் வருமாம் சிஸ்டர்.உனக்கு தெரியாதா ?என்றாள் மஹி.ஏன் சக்கு அப்போ தான டி அவ்ளோ டயலாக் அடிச்ச.அப்புறம் எப்படி இந்த பல்டி அடிச்ச ?

 ம்ம்ம் இப்போ உன்ன அடிச்சா நீ பல்டி அடிக்குறியா இல்லை குட்டிக்கரணம் அடிக்குறியான்னு தெரியும்.மக்கு ஓடிரு.

 நீ சொல்லாம நான் போக மாட்டேன் . இங்கயே போராட்டம் பண்ணுவேன் .

என்னது பரோட்டா பண்ண போறியா ? சரி எனக்கும் ரெண்டு எடுத்துட்டு வா.மஹி

எனக்குனு அக்காவா வந்து பிறந்துருக்க பாரு என்று தலையில் அடித்து கொண்டாள் மஹி.அவளை மேலும் சோதிக்காமல் மனதை திறந்தாள் சஹி.

 நீங்க கார்டன் போக சொன்னிங்களா .நான் போனேனா .அவரை தேடிட்டே. அப்போ அங்க இருந்த மரத்துல ஸ்டைல் ஆ சாஞ்சுட்டு கைல மொபைலை பிடிச்சுட்டு நம்ம செம்பருத்தி செடியை அப்படி ரசிச்சுட்டு இருந்தாரு ஒரு குட்டி சிரிப்போடு.எனக்கு அப்படியே பாத்துட்டே இருக்கலாம்னு தோணுச்சு அவரை.ஒரு மாதிரி சந்தோசமா தேடுனது கிடைத்த மாதிரி இருந்துச்சு.நம்ம பேசி வச்ச ஏதும் பேசணும்னு தோணலை.இப்போவும் மனசு பூராம் என்னமோ பீலிங் இருக்கு சொல்ல தெரில. என்று முடித்தாள் சஹி

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வாவ் சஹி உனக்கு லவ் வந்துருச்சு என்று கட்டி கொண்டாள் மஹி .

நீ நிஜமாவா சொல்ற எனக்கு லவ் வந்துருச்சா என்று யோசனையாகவே கேட்டாள் சஹி

தலை எழுத்து இத கூட நான் சொல்லி கன்போர்ம் பண்ண வேண்டி இருக்கு என்று தங்கையவள் தலையில் அடித்து கொண்டாள்.அவளை முறைத்தவள் மக்கு மஹி அதெல்லாம் உனக்கு புரியாது இப்போ என்ன செய்றது இது தான் காதலா நு புரிஞ்சுக்க முடியாத மன நிலை ல இருக்கேன்.ஆனா ஒண்ணு மட்டும் உறுதி இவரை தவிர வேறு யாரும் வந்த இப்படி இருக்குறது டவுட் தான் நு தோணுது

சஹி உனக்கு பிடிச்சுருக்கு தான என்று ஆயிரமாவது முறையாக கேட்ட தந்தையை வாஞ்சையோடு பார்த்தாள். ஆம் அப்பா தான் எல்லாமே அவளுக்கு. அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல அது அவளை பொறுத்த வரை அவளின் வெற்றியின் ரகசியம்.இன்று வரை அவரை எதிர்த்து விளையாட்டாக ஒரு பார்வை கூட பார்த்ததில்லை.அவரும் தன்னுடைய பெண்களை இரு கண்களாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.வசந்தி க்கும் மகள்கள் மீது உயிர்.

இருவரும் சஹியின் பதிலுக்கு காத்து கொண்டிருப்பது தெரிந்தது.அம்மா அப்பா நீங்கள் பார்த்த மாப்பிள்ளை என்பதற்காக நான் சரி சொல்ல வில்லை .எனக்கு பிடிச்சுருக்கு போதுமா.இப்போ போய் நான் சென்னை கிளம்புறதுக்கு பேக்கப் பண்ணுங்க .அப்பா எப்போவும் போல ஸ்னாக்ஸ் வாங்கிருங்க அம்மா நீ தோசை பொடி எடுத்து வை போ .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.