(Reading time: 28 - 55 minutes)

அது மட்டும் போதுமா?

அந்தக் கிருஷ்ணவேணியை என்ன செய்வது?

அவள் வீட்டிலேயே இருந்தால் தான் நினைக்கிறது எப்படி நடக்கும்?

அவள் மீது ஏற்கனவே மகேந்திரன் நல்ல அபிப்ராயம் வைத்திருக்கவில்லை.

இப்போது அவளால்தான் யுகேந்திரன் இறந்துபோய்விட்டான் என்று அவன் நம்பும்படி செய்துவிட்டால் அவன் அவளை வீட்டை விட்டு விரட்டிவிடுவான்.

யுகேந்திரனை சாகடித்தே ஆகவேண்டும் என்ற தீவிரம் மனதிற்குள் நேரம் ஆக ஆக அதிகமாகியது.

அதுவும் அன்றே அதைச் செய்யவேண்டும். ஏனென்றால் வீட்டிற்கு வந்த கிருஷ்ணவேணி மனம் மாறி தன் சம்மதத்தைச் சொல்லிவிட்டால் அப்போதே வீட்டினரிடம் சொல்லிவிடுவான்.

இப்போது மட்டும் என்ன? அந்த அத்தைக் கிழவிக்குதான் உண்மை தெரியுமே?

யுகேந்திரனுக்கு ஏதாவது ஆனாலும் கிருஷ்ணவேணியால் உண்மை சொல

...
This story is now available on Chillzee KiMo.
...

ளியேறுகிறோமே என்று. விசிலடித்தபடியே சென்றான்.

அவன் வெளியேறிவிட்டான் என்று தெரிந்த பிறகு சாருலதா நிம்மதியாக மூச்சுவிட்டாள்.

அதன்பிறகு வனிதாமணியிடம் போய் அமர்ந்துகொண்டாள்.

தனக்கும் யுகேந்திரன் மரணம் மிகவும் துக்கமாக இருக்கிறது என்பதுபோல் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.