"உளறாத பாரதி... என்ன பிடிச்சது?? இதுனால உன் எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியுமா?? இது மற்ற தானம் மாதிரி இல்லை பாரதி.. ஒரு குழந்தையை சுமக்கனும்.. அதை சுமக்கும் பொழுது உன் உடலிலும் மனதிலும் என்னென்ன மாற்றங்கள் ஆகும் னு தெரியுமா உனக்கு?? “
“தெரியும் டாக்டர்.. நானும் இதை பற்றி படிச்சிருக்கேன்”
“தெரிந்துமா இதுக்கு சம்மதிக்கிற??? இதனால உன்னோட எதிர்காலம் பாதிக்கபடும் பாரதி”
“இனிமேல் என்னோட எதிர்காலமே என் குடும்பம்தான் டாக்டர்.. அப்பாவால முன்ன மாதிரி இனிமேல் முடியாது.. மஹா, என் தம்பி, தங்கச்சி எல்லாரையும் முன்னேற்றது தான் என் எதிர்காலம்.. இதில எனக்குனு என்ன இருக்க போகுது.. ஏதோ என்னால ஒரு குடும்பம் நிம்மதியா சந்தோஷமா இருக்கும்னா அதுக்காக இத செய்யறது தப்பே இல்லை... “ என்று தன் பக்கத்து விளக்கத்தை ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆதிக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுத்தது..
அவரின் இந்த மகிழ்ச்சி நிலைக்க எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கலாம் என்று எண்ணியவாறு கீழே வந்தான்..
அவன் சாப்பிட அமர்ந்ததும் ஜானகி அவனுக்கு சாப்பிட எடுத்து வைத்தார்... அன்று எல்லாம் அவனுக்கு பிடித்ததாக அவரே சமைத்து இருந்தார்..