“ஆமாம்.. நீங்க பெரிய மன்மதன்.. நான் ரதி.. உஙளை மயக்கறேனாக்கும்” என்று முகத்தை நொடித்தவள் அவனை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றாள்.. கிச்சனுக்குள் சென்று அவள் செய்து வைத்திருந்த சிற்றுண்டியை எடுத்து வந்து டைனிங் டேபிலில் வைத்து விட்டு
“சீக்கிரம் போய் ரிப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. இதை சாப்பிட்டுட்டு கிளம்பலாம்” என்று அவனை பார்த்து நேராக சொன்னவள் பின் ஷோபாவில் அமர்ந்து தன் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்......
அவளின் இந்த செயலை கண்டு அசந்து நின்றான் சில விநாடிகள்...காலையில் கத்திவிட்டு சென்றதுக்கு அவள் பயந்து கொண்டு இருப்பாள் என்று நினைத்தவனுக்கு அவள் கொஞ்சம் கூட அலட்டிக்காமல் இருந்தது அவனை கொஞ்சம் அசைத்தது... அதற்குள் சுதாரித்துக் கொண்டு
“ஏய்.. நீ என்ன எனக்கு ஆர்டர் போடற?? என் வேலையை பார்க்க எனக
...
This story is now available on Chillzee KiMo.
...
தான்..
“ஹலோ!! எங்க ஊர் ஒன்னும் பட்டிக்காடு இல்லை.. “
“பின்ன என்ன மெட்ரோ பொலிடன் சிட்டியா?? ஆமா எத்தன மால் இருக்கு உங்க ஊர்ல?? “
“மால் னா ?? “என்று புரியாமல் அவனை பார்த்தாள்..
“என்னது ?? மால் னா தெரியாதா?? சுத்தம் “என்றவன் அருகில் தெரிந்த ஒரு மால் ஐ காட்டி