இரும்பு பீரோ இருக்கும் அறையின் பூட்டை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்த ஆதியின் பாட்டியும் யாமினியும் அங்கு அறைக்குள் எதிரே நின்று கொண்டிருந்த ஆதித்யவர்மனை கண்டு திகைத்தனர். சில நொடிகள் யாரும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு தன்னிலை பெற்றவர்களில் முதலில் யாமினிதான் ஆதியிடம் பேசினாள்
”ஆதி எப்படி இந்த ரூம்க்குள்ள வந்தீங்க” என வியப்பாக கேட்க அவன் திரும்பி ஜன்னலை கைகாட்டினான்.
அவளும் பாட்டியும் சென்று ஜன்னலைப் பார்த்தனர். அவளது அறையில் இருப்பதைப் போன்றே அங்கும் மரப்பலகைகளான ஜன்னல் இருக்கவே யாமினி புரிந்துக் கொண்டாள். ஒன்றும் புரியாமல் குழம்பியபடியிருந்த பாட்டிக்கு யாமினி விளக்கம் அளித்தாள்
”பாட்டி என் ரூம்ல கூட இப்படிதான் இருந்திச்சி ஆமா இப்படியா ஜன்னல்கள் வைப்பீங்க இது வழியா ஈசியா திருடன் வந்து போயிருக்கலாம் பாட்டி பாவம் ஆதி மேல பழி விழுந்திடுச்சி” என்றாள் கோபமாக யாமினி
”இந்த மரப்பலகைகளை எப்படி சுளுவா எடுக்க முடியும் என் ரூம்ல எடுக்க முடியாமதானே இருந்திச்சி ஆணியால பலகைகளை அடிச்சில்ல வைச்சிருப்பாங்க இது என்ன புதுசா இருக்கு” என பாட்டி அதிர்ச்சியாகச் சொல்ல அதற்கு யாமினியோ
”அப்படின்னா இதே மாதிரி எந்தெந்த ரூம்ல ஜன்னல்கள் இருக்குன்னு கண்டுப்பிடிச்சிட்டா திருடனையும் கண்டுபிடிச்சிடலாம்” என யாமினி உற்சாகமாகச் சொல்லவும் பாட்டியோ சந்தோஷமாக
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
”ஆமா யாமினி நீ சொல்றதும் சரிதான் சரி நான் இப்பவே மத்தவங்க அறைகளுக்கு போய் அவங்க ரூம்ல இருக்கற ஜன்னலும் இப்படித்தான் மரப்பலகைகளை எடுக்கற மாதிரி இருக்கான்னு சோதனை போடறேன் நீயும் வா” என யாமினியை அழைக்க யாமினியோ பாட்டியிடம்
”ரெண்டு பேரும் ஒண்ணா போனா பார்க்கறவங்களுக்கு சந்தேகம் வரும் இங்க இன்னும் வேலைக்காரங்க வேலையில இருக்காங்க பாட்டி, நான், நீங்க, ஆதி 3 பேரும் தனித்தனியா போய் தேடலாம். யாராவது கேட்டாலும் ஆளுக்கொருத்தரை தேடி வந்ததா சொல்லலாம்” என அவள் ஒரு யோசனை சொல்ல அதை பாட்டியும் ஆதியும் ஏற்றுக் கொண்டனர் உடனே
”சரிம்மா எனக்கு முட்டிவலி இருக்கு நான் கீழே உள்ள அறைகளை பார்க்கிறேன் நீ மேல போ ஆதி நீயும்தான் சீக்கிரமா போய் பாரு ஆளுங்க திரும்பி வர்றதுக்குள்ள ஏதாவது நமக்கு பயனுள்ளதா ஆதாரம் கிடைக்கும் போங்க” என பாட்டி சொன்னார்.
உடனே மூவரும் அறையை விட்டு வெளியே வந்தவுடன் மறக்காமல் யாமினி கதவை சாத்தி அந்த இரும்பு பீரோவை பூட்டிவிட்டு மாடிபக்கமாக இருந்த படிக்கட்டு வழியாக ஏறி மாடியில் உள்ள அறைகளை தேடிச் சென்றாள்.
ஆதியும் வேறு பக்கம் செல்ல பாட்டி கீழே இருந்த ஒவ்வொரு அறைகளுக்குள் சென்றுப் பார்த்தார்.
மேல் மாடியில் உள்ள அனைத்து அறைகளின் ஜன்னல்களையும் சோதனையிட அரை மணி நேரமானது பிறகு அவள் எதிர்பார்த்தது கிடைக்காமல் போகவே நொந்துப் போன யாமினி அப்படியே மொட்டை மாடிக்கு சென்று நின்றாள்.
சுற்றி முற்றி மொட்டைமாடி முழுவதும் அப்படியே அக்கம் பக்கம் இருக்கும் இடங்களையும் ஒரு ரவுண்டு கவனமாகப் பார்த்துவிட்டு கால் வலி எடுக்க சோர்வு அதிகமாகி அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பலமாக யோசிக்கலானாள்.
ஆதியோ பல அறைகளை சோதித்து முடித்த உடன்
”எல்லா ரூம்லயும் ஜன்னல்கள் மரப்பலகைகளை எடுக்கற மாதிரிதான் இருக்கு பாட்டி வேற மரப்பலகையை ஆணியை வைச்சி அடிச்சி வைச்சிருக்கறதா சொன்னாங்க ஆனா இங்க அப்படி இல்லையே என்ன செய்றது இப்ப” என நினைத்துக் கொண்டே நடந்தவனுக்கு யாமினி தனியாக மொட்டை மாடிக்கு செல்வதைக்கண்டு வியந்தான்
”எதுக்கு இப்ப மொட்டை மாடிக்கு போறா ஒருவேளை அங்க ஏதாவது தடயம் இருக்குமான்னு பார்க்கப் போறாளா சரி அவளுக்கு உதவியாவது செய்யலாம்” என மனதில் நினைத்துக் கொண்டே மொட்டை மாடிக்கு சென்றான். அங்கு ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்த யாமினியைக்கண்டு திகைத்தான்
”என்னாச்சி இவளுக்கு பகல் வேளையில அடிக்கற வெயில்ல இங்க வந்து உட்கார்ந்திருக்கா பித்து பிடிச்சிடுச்சா” என மனதிற்குள் சொல்லியபடியே அவள் இருக்கும் இடம் சென்று நின்றான்.
பலமாக யோசித்துக் கொண்டிருந்தவளைக்கண்ட ஆதி சுற்றி முற்றி பார்த்துவிட்டு மீண்டும் அவளையே பார்த்தான்.
”இங்க என்ன செய்றா நான் கொடுத்த சாவியை வைச்சிக்கிட்டு அதையே பார்த்துக்கிட்டு என்னத்த யோசிக்கறா எல்லா இடத்திலயும் தேடிட்டாளோ இவள் அமைதியா இருக்கறதைப் பார்த்தா நம்மளை மாதிரியே இவளுக்கும் எந்த க்ளூவும் கிடைக்கல போல அதான் சோகமாக உட்கார்ந்திருக்கா பாவம் 5 வருஷமா நான் தேடியே எதுவும் கிடைக்கலை இவளுக்கு எப்படி உடனே கிடைச்சிடும் ஏதோ எனக்காக இவ்ளோ முயற்சி செய்றாளே அவளுக்கு ஆறுதலாவது செய்வோம்” என மனதில் நினைத்துக் கொண்டான்
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
சோ கியூட் ஆதி... யாமினி சோ ஸ்வீட்..
ரொம்ப பெரிய குடும்பம் தான் போல.. செம