Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 05 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes

”நீயெல்லாம் என் புருஷனா அந்த 5 பொண்ணுங்களும் உங்க கிட்ட இவ்ளோ மோசமா நடந்துக்கிறாங்க எப்படி உங்களால இப்படி அமைதியா இருக்க முடியுது. அடிமையாயிருங்க வேணாம்ன்னு சொல்லலை அதுக்குன்னு இப்படி இருக்கனுமா இதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்னத்த தண்டனையோ அதுல என்னத்த வீராப்போ உங்களுக்கு சே” என முகத்தை திருப்பிக்கொண்டு கையில் இருந்த கேமிராவில் இருந்த பதிவுகளை மீண்டும் முழுதாகப் பார்த்தாள்.

அதில் அவர்கள் 15 நிமிடங்களாக என்னென்ன செய்து கொண்டிருந்தார்கள் என பார்த்தாள் அதில் சில காட்சிகளில் அந்த பெண்கள் அவனை தொடுவதும் அடிப்பதும் என இருக்கவே அதைக்கண்டு நொந்துபோனவள் நிமிர்ந்து ஆதியை கோபமாகப் பார்த்தாள். அவனோ அவள் முன் பரிதாபமாக நின்றான்

”பாரு எப்படி அவங்க உன்கிட்ட நடந்துக்கிட்டு இருக்காங்கன்னு எனக்கு கஷ்டமாயிருக்கு ஆதி ஓகே ஒத்துக்கறேன் வேற வழியில்லாம என்னை காப்பாத்தனும்னுதான் நீ தாலியை கட்டின ஒத்துக்கறேன் ஆனா அந்த தாலியை நான் புனிதமா பார்க்கறேன் உன்னை என் புருஷனா பார்க்கறேன். நீ என்னை உன் பொண்டாட்டியா பார்க்கலைன்னு தெரியுது ஆனாலும் என்னால உன் கூட உருவான இந்த உறவை தூக்கியெறிய முடியலை ஆதி.

அந்த காரணத்தாலதான் நான் உன்னை தேடி இங்க வந்திருக்கேன். உன்னை கூட்டிட்டு போய் எங்கப்பாகிட்ட காட்டனும்னு வந்தேன். அதுக்கு உன்மேல இருக்கற பழியை போக்கனும்னு நீ சொன்னதால உனக்கு உதவி செய்யலாம்னு நினைச்சேன் ஆனா இப்படி என் மனசை கஷ்டப்படுத்தற மாதிரி வேலையெல்லாம் செஞ்சி என்னை இங்கிருந்து ஓட ஓட விரட்ட பார்க்கறியா சந்தோஷம் உன் இஷ்டம் போ அந்த அகிலாகிட்டயே போய் விழுந்து எழு உன்னையே சுத்தி சுத்தி வந்தா நான் உனக்கு இளப்பமாதான் தெரிவேன் நான் உன்னைத் தேடி வந்ததே தப்புன்னு நினைக்க வைச்சிட்ட ஆதி” என கோபமாக கத்திவிட்டு  அந்த கேமிராவை அவனிடமே தந்துவிட்டு அந்த அறையை விட்டு சென்றே விட்டாள்.

கையில் கேமிராவைப் பார்த்தவன் உடனே அதிலிருந்து வீடியோவை டெலிட் செய்துவிட்டு யாமினியின் கோபத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்தான்.

”என் மேல ஏன் கோபப்படற அகிலாவும் அவள் பிரெண்ட்சும் என்னை தொட்டாங்கன்னா நீயும் தொடு நானா வேணாம்னு சொல்றேன் என்னவோ நானே பிரியப்பட்டு அவளுங்க முன்னாடி நின்ன மாதிரி பேசற. உனக்கு உரிமை இருக்கறப்ப மத்தவங்க மேல ஏன் பொறாமைப்படற பொண்டாட்டியா நீ என்கிட்ட எப்படி நடந்துக்கிட்டாலும் நான் தடுக்கவே மாட்டேன். என் மேல இவ்ளோ அக்கறையா உனக்கு, நான் கஷ்டப்படறத பார்த்துட்டு கவலைப்படற உன்னைப் போல ஒருத்தி கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கனும் அகிலாவுக்கு அடிமையா இருக்க நான் நினைக்கலை யாமினி

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நானும் இன்னிக்கு செம கோபத்தில இருந்தேன். அவளை அடிக்கற அடியில அவள் என்கிட்ட வரவே கூடாதுன்னு நினைச்சேன் அதுக்குள்ள நீ வந்துட்ட நான் ஒண்ணும் மானம்கெட்டவன் இல்லை அதனாலதான் இவ்ளோ அவமானத்தையும் தாத்தாவுக்காக பொறுத்துக்கறேன். எல்லாமே ஒரு எல்லை வரைக்கும்தான். நீ வராம இருந்து அகிலா இன்னும் என்கிட்ட மோசமா நடந்துக்கிட்டு இருந்திருந்தா நிச்சயமா இன்னிக்கு அவளுக்கும் அவள் கூட வந்த பொண்ணுங்களுக்கும் அறையை விட்டு அவங்க கன்னம் பழுக்க வைச்சிருப்பேன். பரவாயில்லை அடுத்த முறை கண்டிப்பா நான் செய்வேன் என்னை நம்பு யாமினி

நான் உன் கழுத்தில தாலி கட்டிட்டேன்னுதானே நீ என் மேல இவ்வளவு உரிமை எடுத்துக்கற. நான் எங்க உன்னை விரட்டறேன் மத்தவங்க செய்றத பார்த்து என் மேல தேவையில்லாம கோபப்படாத. எனக்கும் அகிலா மேல கோபம்தான் உண்மை சொல்லி நான் நிரபராதின்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் அவளை நானே ஒருவழி பண்ணனும்னுதான் பல நாளா நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா இன்னிக்கு அகிலா சொல்றதப் பார்த்தா நான் என்னிக்குமே அவளோட அப்பாவை அவமானப்படுத்தவேயில்லையே.

அதோட மாமாவை பத்தி நான் என்ன சொன்னேன் என்னிக்கு அவமானப்படுத்தினேன். அவர் இந்த வீட்டோட மாப்பிள்ளைன்னு நான் என்னிக்குமே தப்பா நினைச்சி பேசினதில்லையே எதை வெச்சி மாமா அப்படி நினைச்சாரு அகிலா ஏன் இப்படி பேசறா என்ன நடக்குது என்னை சுத்தி யாரோ என்னைப் பத்தி தப்பான விசயங்களை மாமாகிட்ட சொல்லி வைச்சிருக்காங்க எதுக்கு அப்படி செய்யனும் யார் அவங்கன்னு எப்படி தெரிஞ்சிக்கறது.

யாமினி வேற கோபமா போயிருக்காளே இப்ப அவள்ட்ட போனா வேலைக்கு ஆகாது. இப்ப இந்த மாமா பத்தின விசயத்தை பத்தி அவள்ட்ட சொன்னாலும் வேஸ்ட்தான் காதுல கூட வாங்கமாட்டா ஆனாலும் என்னால அவள் மனசு உடைஞ்சி போயிருக்கு நான் மாமாவை பத்தி அப்புறமா யோசிக்கறான் முதல்ல என் பொண்டாட்டியை நான் சமாதானம் செய்யனும்” என நினைத்துக் கொண்டே அவள் அறைக்குச் சென்றான். கதவு மூடியிருக்கவும் கதவை தட்டினான். அது திறக்கவேயில்லை.

”ஏன் தொறக்கமாட்டேங்கறா உள்ள என்ன செய்றா” என குழப்பமாக நினைத்தவன் வீட்டை சுற்றிவந்து அவள் அறையின் பக்க சுவர் ஜன்னலை திறந்தவன் அங்கு அவள் தன் உடைமைகளை பெட்டியில் அடுக்குவதைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

அவளோ

”இனி நான் ஏன் இங்க இருக்கனும் ஆதியை ஒரு மனுசனா நினைச்சேன் புருஷனா நேசிச்சேன் ஆனா இன்னிக்கு அந்த அகிலா செய்றதை தடுக்காம இருக்கார் நாளைக்கு அவள் வேற ஏதாவது செஞ்சா என்னாகும் ஒருவேளை நகைகள் கிடைச்ச பின்னாடி தாத்தா தன் தப்பை உணர்ந்து பிராயசித்தம் செய்றேன்னு அகிலாவை ஆதிக்கு கல்யாணம் கூட செஞ்சி வைச்சிடுவாங்க ஆதிக்கென்ன எப்படியோ குடும்பம் ஒண்ணாயிருக்கனும் தாத்தா சொன்னதுதான் வேதவாக்குன்னு என்னை விட்டாலும் விட்டுடுவான்.

அவனுக்கு என் மேல சுத்தமா அன்பே இல்லை அவன் கட்டின தாலி மேல மதிப்பே இல்லை. அவன் கட்டின தாலியை மதிக்காம கழட்ட வந்தவன்தானே ஆக அவனுக்கு என்னை பிடிக்கலை நான்தான் ஆதி வேணும்னு இங்க வந்தேன். இப்பதான் எனக்கு எல்லாம் புரியுது நான் மட்டும்தான் அவனை புருஷனா நினைச்சேன் ஆனா அவன் என்னை பொண்டாட்டியா கூட நினைக்கலை இனிமேல நான் ஏன் இங்க இருக்கனும் நான் இப்பவே சென்னைக்கு கிளம்பறேன்” என அவள் புலம்பியபடியே பெட்டியை அடுக்குவதைக்கண்டு அதிர்ந்தே விட்டான் ஆதித்யவர்மன்    

தொடரும்...

Episode # 04

Episode # 06

Go to En vazhvu unnodu thaan story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 05 - சசிரேகாSindhu ramesh 2018-12-03 22:19
Hey.... Namma adhik :cool: u venum antha pulla vanthu help pannum pothellam moonjiya kamicha illa... Nalla anubavikkatum..... :grin: acho....Yamini Kutty romba feel pannathinga Namma Mangoss mamavuku purinchudichi so I'm romance start :clap:
Reply | Reply with quote | Quote
# AadhiPriyadharsini 2018-12-03 20:49
Nice episode. Next week oru romance scene edhir pakalam polave. Eppadiyo sekaram Andha thirudana kandu pidicha nalla irukum. Indha pirachanaiya mudichu yamini veetu pirachanaiyavera solve pannanum. Waiting for next episode sasireka.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 05 - சசிரேகாAdharvJo 2018-12-03 15:14
Achacho sasi ma'am velaikaranai pulinji edungan sonna avara ippadi komali-a aati padikiringale ma facepalm Sema dhadhi-a irakaru but Yamini super fast aga move panuranga :clap: avangalukku thonuradhu indha Bheem boy-k yen puriyamatangdhu :sad: Ivarai yam's kapathuradhukla sabbba, phone kuda reach panamatrame :eek: :eek: Nondhu noodles aiduvinga :D Interesting update ma'am :clap: :clap: thank you for clearing my sandhegams (y) ella room layum indha window ippadi thaan so how does this matter idhula ena clue kedaikum :Q: looks like some pazhivangum padalam waiting to see what happens next :yes: Yam's rombha feel panavaikadhinga aadhi thanga mataru ;-) thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 05 - சசிரேகாsaaru 2018-12-03 14:37
Nalla paduvu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 05 - சசிரேகாmahinagaraj 2018-12-03 14:23
அச்சோ செமையா இருக்கு மேம்.. :clap: :clap:
சோ கியூட் ஆதி... யாமினி சோ ஸ்வீட்..
ரொம்ப பெரிய குடும்பம் தான் போல.. செம
:thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 18 Mar 2019 03:50
கடலூர்

மாலை 6 மணிக்கு ஆதியின் வீட்டை அடைந்த 10 கார்களும் வரிசையாக வீட்டின் போர்டிகோவில் நின்றன. வீட்டில் வேலை செய்பவர்கள் அவசரமாக அந்த கார்களிடம் சென்றனர். கார்களை விட்டு இறங்கிய இரண்டு குடும்பமும் தங்களின் லக்கேஜ்கள் கூட எடுக்காமல் வீட்டுக்குள் தடாலாடியாக நுழைந்தனர்.

ஆதியோ முற்றத்தில் அமர்ந்துக் கொண்டு வெறும் வேட்டியுடன் பனியன் சட்டையில்லாமல் நிம்மதியாக காத்து வாங்கிக் கொண்டிருந்தான்.

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...thaan-sasirekha-20_1
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 11 Mar 2019 05:46
ஆதித்யவர்மன் வீட்டை விட்டு சென்ற ஒரு வாரம் கழித்து சோமசுந்தரம் வீட்டிற்கு ஒருவன் வந்தான் கையில் பெரிய பையுடன், வீட்டு வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்த சந்திரன் கோபத்துடன் அவனிடம் சென்று கத்தினான்

”டேய் நீயாடா பாவி உன்னை நான் எவ்ளோ நம்பினேன், என்னை மோசம் பண்ணிட்டியே, நம்ப வைச்சி கழுத்தை அறுத்திட்டியேடா பாவி, இங்க எதுக்கு வந்த இன்னும் எதையாவது பேசி என்னை ஏமாத்தலாம்னா போடா வெளிய” என அவன் பாட்டுக்கு கத்தவும் சோமசுந்தரம் சந்திரனைத் தடுத்தார்

*****

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-19
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 04 Mar 2019 06:57
தனலட்சுமியின் மனதை நன்றாக குழப்பிவிட்ட சந்தோஷத்தில் மகாவின் அறை கதவைத் தட்டினான் ஆதி. அதைக் கேட்டு மகா கதவு திறக்க வெளியில் இருந்த ஆதி உள்ளே வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அவன் முகம் வெறுப்புடன் இருப்பதைக் கண்டு அதிர்ந்த மகாவோ அவனிடம்

”ஆதி” என பாசமாக அழைக்க அவனோ

“நீ எப்ப வீட்டைவிட்டு போற” என கோபமாக கேட்க அவள் அதிர்ந்தாள்.

******
படிக்கத் தவறாதீர்கள்!!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-18
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 25 Feb 2019 05:33
காலையில் அவசரமாக யாமினி உறங்கிக் கொண்டிருந்த ஆதித்யவர்மனை எழுப்பினாள்.

”ஆதி எழு ஆதி” என கத்த அவனும் உறக்கம் கலைந்து மெல்ல கண்களை கசக்கிக் கொண்டு எழுந்த ஆதி தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து

”என்ன இங்க உட்கார்ந்திருக்க”

”ஏன் நான் உன் கூட இருக்க கூடாதா” என ஆசையாக பேசியபடியே அவனது தோளில் சாய்ந்துக் கொண்ட யாமினியைக் கண்ட ஆதியோ

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-17
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 18 Feb 2019 07:03
கஜலட்சுமியை அனுப்பிவிட்ட சந்தோஷத்தில் குஷியாக வீட்டுக்குள் வந்த ஆதித்யவர்மனிடம் முதல் ஆளாக எதிர்பட்டு பேசினாள் மகாலட்சுமி

”என்ன ஆதி நீ வந்தது எதுக்கு, உன் கல்யாணத்துக்கா இல்லை இங்கிருக்கற பிரச்சனைகளை சரிசெஞ்சி எல்லாரையும் அனுப்பி வைக்கிறதுக்கா” என மகா சந்தேகமாக கேட்க அதற்கு ஆதி

“ரெண்டும்தான்” என சிரிப்புடன் சொன்னவனை சந்தேகமாகப் பார்த்தவள் அவனிடம் அதிகாரமாக

”எப்படி” என கேட்டதும் ஆதி அவளை கலாய்க்கலானான்.

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...u-thaan-sasirekha-16

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top