Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]

Vaanum mannum katti kondathe

க்ஷரா குழம்பி போயிருந்தாள்!

அவளுக்கு அகிலாவின் நண்பன் என்ற முறையில் அறிமுகமானவன் கணேஷ். மூன்று ஆண்டுகளில் அவளுக்கும் நல்ல நண்பனாகி போயிருந்தான்.

அகிலா போலவே தான் அவளுக்கு அவனும்... ஒரு நல்ல நண்பன்...

திடீரென அகிலா கணேஷ் அவளை காதலிப்பதாக சொல்லவும் அவளுக்கு அதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை.

கோபம் + வருத்தம் சேர்ந்து வர, கணேஷை சந்திக்காமலேயே வீட்டிற்கு சென்றாள்.

ஆனாலும் மனம் குழப்பத்தில் இருந்து வெளி வராமலேயே இருக்கவும், நேராக ஆகாஷை தேடி வந்தாள்.

எப்போதுமே அவளுக்கு ஆகாஷ் தான் நல்ல வழிகாட்டி!

சின்ன விஷயம், பெரிய விஷயம் என்றில்லாமல் எல்லா விதத்திலும் எப்போதுமே அவளுக்கு நல்ல முடிவை எடுக்க உதவுபவன்...

அதனால் தான் இப்போதும் ஆகாஷை தேடி வந்தாள்...

திடீரென அவன் முன் அவள் வந்து நின்றதாலோ என்னவோ ஆகாஷின் முகத்தில் தடுமாற்றம் தெரிந்தது!

“என்ன அஷ்? உன்னை டிஸ்டர்ப் செய்துட்டேனா??? சாரி டா...” என்றவள் விழிகளை சுற்றி பார்த்தாள்.

அங்கே சினேகா பிரின்ட்டர் பக்கத்தில் நின்றபடி இவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தானாக அக்ஷராவின் முகத்தில் நட்பு மின்னும் புன்னகை ஒன்று தோன்றியது.

ஆச்சர்யத்துடன் பதிலுக்கு புன்னகைத்தாள் சினேகா.

“டிஸ்டர்ப் பண்ணலை அக்ஷரா. திடீர்னுன்னு உன்னை பார்க்கவும் சர்ப்ரைஸா இருந்தது” என்றான் ஆகாஷ்.

மீண்டும் ஆகாஷ் பக்கம் பார்வையை திருப்பிய அக்ஷ்ரா,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“போன் பண்ணிட்டு வரலாமான்னு யோசிச்சேன்... நீ தானேன்னு... வேண்டாம்னு அப்படியே கிளம்பி வந்துட்டேன்...” என்றாள்.

தன் சுழல் நாற்காலியை விட்டு எழுந்த ஆகாஷ், தன்னுடைய கோட்டை எடுத்து அணிந்த படி,

“அக்ஷரா, அப்படி கிளம்பி வந்தா, ஷீ வாண்ட்ஸ் டு டாக்ன்னு அர்த்தம். வா சும்மா ஒரு டிரைவ் போயிட்டு வரலாம்...” என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தான்.

அறையை விட்டு செல்லும் முன் எவ்வளவு முயன்றும் சினேகா பக்கம் அவன் பார்வை செல்வதை அவனால் தடுக்க முடியவில்லை...

சினேகாவோ அக்ஷ்ரா இருந்த திசையில் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

என்னடா நடக்கிறது என்று அக்ஷ்ரா பக்கம் பார்த்தால், அவளோ சினேகாவிற்கு கை அசைத்து பை சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஒருவேளை இருவருக்கும் ஏற்கனவே பரிச்சயம் இருக்குமோ என்ற கேள்வி வந்த போதும், அவனின் மனதில் இதம் பரவுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

அக்ஷ்ரா, சினேகா இருவருமே நல்ல பெண்கள்... அ...

கம்பேர் & கான்ட்ராஸ்ட் செய்யாமல் மனதை சட்டென்று அடக்கினான்.

“தனியா வந்திருக்க அக்ஷு? உனக்காக நான் வச்ச பாடிகார்ட் எங்கே?”

“ரிசப்ஷன்ல இருக்கான் அஷ். இது உன் கம்பெனின்னு தெரிஞ்சு தனியா விட்டான்... மத்தபடி ஒரே இம்சை...”

“அவர், அவர் வேலையை செய்றார்... அவரை அனுப்பிட்டு நாம போவோம்... ஒரு நாளாவது அவர் உன் இம்சை இல்லாம இருக்கட்டும்...”

“நான் இம்சையா?? இரு இரு என் ஸ்வீட் ஹார்ட் கிட்ட கம்ப்ளெயின்ட் ஃபைல் செய்றேன்....” என்று பொய்யாக சண்டை போட்டுக் கொண்டு அவனுடன் சென்றாள் அக்ஷரா.

பிரின்ட் செய்த பேப்பர்களை கையில் எடுத்துக் கொண்டு ஆகாஷின் அறையை விட்டு வெளியே வந்த சினேகா நேராக அவளுடைய இடத்திற்கு செல்லாமல், ஆகாஷின் செக்ரட்டரி ஐஸ்வர்யாவை தேடி சென்றாள்.

“ஆகாஷ் சார் வெளில கிளம்பி போனார் ஐஸ்வர்யா மேம்... அவர் ரூம் ஓபனா இருக்கு....”

“தேங்க்ஸ் சினேகா... ஆகாஷும், அக்ஷராவும் போனதை நானும் பார்த்தேன். நான் லாக் செய்திடுறேன்...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அவங்க பேரு அக்ஷ்ராவா?”

“ஆமா சினேகா... இரண்டு பேரோட பேரண்ட்ஸும் ரொம்ப வருஷமா பிரென்ட்ஸ்... அதனால தான்....”

அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்வது என்று முடிவு செய்து, நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது...’ என்று சொல்ல வந்த ஐஸ்வர்யாவின் பேச்சை அத்த இடத்தில் இடை வெட்டி அவளின் போன் ஓசை எழுப்பியது...

ஒருவேளை ஐஸ்வர்யா வழியாக ஆகாஷ் – அக்ஷ்ரா திருமண ஏற்பாடுகள் பற்றி இப்போதே சினேகா தெரிந்துக் கொண்டிருந்தால் பிற்காலத்தில் அவள் மனம் வருத்த படாமலே இருந்திருக்கலாம்...

ஆனால் அதை அவள் தெரிந்துக் கொள்ள வழி இல்லாமல் போனதை விதியின் சதி என்று சொல்வதா? இல்லை, இது தான் வாழ்க்கை என்று சொல்வதா...????!!!!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]saaru 2019-02-01 14:10
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-03-07 20:20
Thanks Saaru :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Thenmozhi 2019-02-01 02:40
Nice ud Binds.

Akshara is sweet. Sneha parthu smile seira part nice.

Akash Akshara engagement pathi theriyama Sneha aasai padalam, what abt Akash?

Ithu varaikum yaraiyum pin point seithu thapunu solla mudiyalai. That is a compliment for you ;-) :-) :-)

Kanesh manasila ena irukunu terinjuka waiting.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-03-07 20:20
Thanks Thens :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]AdharvJo 2019-01-31 16:08
Bindu ma'am Oda sadhi-n sollalam ma'am :D :lol: Rambo pattri akshara solladhadhum ninga seitha sadhithaan facepalm how will she handle Ganesh?? cute And interesting update ma'am 👏 👏👏 👏 Akash sema aalu than 😝 Sneha kaga motha comapny-k martial arts classes launch seithutare :D :cool: look forward to see what happens next. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-03-07 20:20
Thanks Adharv :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]madhumathi9 2019-01-31 07:35
:clap: nice epi mam.interesting aaga poguthu. Waiting to read more. :thnkx: 4 this epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-03-07 20:19
Thanks Madhumathi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Sahithyaraj 2019-01-31 07:16
:cool: :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-03-07 20:19
Thanks Sahithya :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]rspreethi 2019-01-31 05:52
Super update... Waiting for next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-03-07 20:19
Thanks Preethi :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top