Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஞ்சை

”உங்கண்ணனுக்கு என்னாச்சி அத்தான், ஏன் இப்படி பைத்தியம் பிடிச்ச மாதிரி நடந்துக்கறாரு” என மீனாட்சி நிரஞ்சனிடம் கேட்க

”தெரியலை மீனா ஆனா என் அண்ணா ஒண்ணும் பைத்தியம் இல்லை” என்றான் கவலையுடன்.

”இந்த பொம்மையெல்லாம் தயார் பண்ண நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா, இதை வித்தா பணம் வரும் அதை வைச்சி இந்த வீட்டுக்கு அட்வான்ஸ் தரலாம்னு இருந்தேன், இப்படி மொத்தமா உடைச்சிட்டாரே, நான் நல்லாயிருந்தாலே அவருக்கு பிடிக்காதா அத்தான், எதுக்கு என்னை இப்படி டார்ச்சர் பண்றாரு” என அவள் கத்த நிரஞ்சனோ

”மீனு அப்படியில்லைம்மா அண்ணா இந்த உலகத்திலயே இல்லை ஏதோ கனவு கண்டு இப்படி நடந்துக்கறாரு”

“பொய் மிஸ்டர் ஈஸ்வரனுக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு, எங்க அது தெரிஞ்சிடக்கூடாதுன்னு கனவு கினவுன்னு சொல்லி ஏமாத்தறீங்க, லண்டன்ல இருக்கிற எல்லாருக்கும் இந்த விசயம் தெரிஞ்சதாலதான் யாரும் பொண்ணு தரலைன்னதும் என் அக்காவை கல்யாணம் பண்ணிக்க இங்க வந்திருக்கீங்க பாவம் என் அக்கா அவள் எந்த பாவமும் பண்ணாதவ ஏன் அவளை ஏமாத்தறீங்க அத்தான்”  

”போதும் மீனா வாய்க்கு வந்ததை பேசாத, நான்தான் சொல்றேன்ல அண்ணாவுக்கு பைத்தியம்லாம் எதுவும் கிடையாது, நான் ஒரு டாக்டர் நான் சொல்றதை நீ நம்ப மாட்டியா”

”உங்க அண்ணாவுக்காக நீங்க உண்மையை மறைக்கலாம் அத்தான் ஆனா, இங்க நடக்கறத பார்த்தாலே எல்லாரும் சொல்லிடுவாங்களே அவருக்கு என்ன வியாதி இருக்குன்னு” என அவள் கோபமாகச் சொல்ல அதற்கு நிரஞ்சன்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”கமான் மீனா ப்ளீஸ் அண்ணாவோட நிலைமையை புரிஞ்சிக்க, நான்தான் உன்கிட்ட சொன்னேனே அண்ணாவுக்கு அடிக்கடி கனவு வரும் அதோட ரியாக்ஷன்தான் இது, ப்ளீஸ் தப்பா பேசாத, உனக்கென்ன இந்த வீட்டுக்கு அட்வான்ஸ் தரனும், இந்த பொம்மைகள் உடைஞ்சதுக்கு நான் நஷ்டஈடா பணம் தரேன், அப்படியே இந்த வீட்டுக்கு அட்வான்ஸ் எதுக்கு இந்த வீட்டையே உன் பேருக்கு மாத்திடறேன் அதுக்கு தேவையான பணத்தை நான் கொடுக்கிறேன், என் அண்ணாவை பத்தி தப்பா பேசாத” என நிரஞ்சன் கோபமாக பேச மீனாவோ அவ்வளவு நேரம் ஈஸ்வரன் மீது இருந்த கோபத்தில் கத்தியவள் இப்போது  நிரஞ்சனிடம் கோபமாக

”சே உங்க பணக்கார புத்தியை காட்டிட்டீங்கள்ல, நான் இதை உங்க கிட்ட எதிர்பார்க்கலை, உங்கண்ணன்தான் பணம் இருக்கற திமிர்ல ஜம்பம் பண்ணிக்கிட்டு திரியறாருன்னு நினைச்சேன் ஆனா, அவரோட தம்பி இதுல நீங்க ஒரு டாக்டர் வேற, ஒரு உயிரோட மதிப்பு தெரிஞ்சவரு, அதே சமயம் ஒரு மனுசனுக்கு தர வேண்டிய மதிப்பு, மரியாதை கூட தெரிஞ்சி வைச்சிருக்கறவருன்னு நினைச்சேன் ஆனா இல்லை உங்களை பொறுத்தவரைக்கும் பணத்தை கொடுத்துட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும் அப்படித்தானே

உங்க பணத்தை நீங்களே வைச்சிக்குங்க, உங்ககிட்ட நான் ஒரு பைசா கூட வாங்க மாட்டேன், இதுக்கு முன்னாடி நான் எப்படியிருந்தேனோ அதே போல இருப்பேன், ஒண்ணு மட்டும் தெரிஞ்சிக்குங்க பணத்தால எதை வேணும்னாலும் வாங்கிடலாம் ஆனா, என்னையில்லை. உங்களை போய் நல்லவர்ன்னு நினைச்சேனே, என்னை சொல்லனும், உங்கண்ணனாவது அவரோட குணத்தை வெளிப்படையா காட்டிட்டாரு ஆனா, நீங்க உள்ளுக்குள்ள ஒரு வேஷம் வெளிய ஒரு வேஷம் போட்டுக்கிட்டு சுத்தறீங்க

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "என் மடியில் பூத்த மலரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இப்பதான் உங்களோட உண்மையான குணமே எனக்குத் தெரியுது, நீங்களும் உங்க அண்ணனை போல திமிர்பிடிச்ச, அகங்காரமான, பணக்கார டாக்டர்தான், உங்க கிட்ட நல்லதை எதிர்பார்க்கறது என்னோட தப்பு, ஏதோ டைம் பாஸ் பண்றதுக்குத்தான் இத்தனை நாளா என்கூட நீங்க பழகினீங்க அதை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன், இனிமேல நான் ஏமாற மாட்டேன், போங்க வெளிய போங்க இனி என் முகத்திலயே விழிக்காதீங்க, உங்க பைத்தியக்கார அண்ணனை கூட்டிட்டு இப்பவே இங்கிருந்து போயிடுங்க, உங்ககிட்ட இருக்கற பணத்தை வைச்சி முடிஞ்சா உங்க அண்ணனை காப்பாத்திக்குங்க, என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும் போங்க வெளிய” என கத்தவும் நிரஞ்சனுக்கு திக்கென்றது

”மீனு ப்ளீஸ் நான் ஒரு டென்ஷன்ல அப்படி பேசிட்டேன் ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு”

“போதும் இந்த பசப்பு பேச்சுக்கு இனிமேல நான் மயங்கவே மாட்டேன், ஆனந்தி அக்கா பாவம் உங்க அண்ணனை கட்டிவைச்சி அவளை சாகடிச்சிடாதீங்க, இங்கிருந்து லண்டனுக்கே போயிடுங்க போங்க” என அவள் விரட்ட மேகலாவோ மீனாவிடம்

”போதும் மீனா எதுக்கு அவரை இப்படி விரட்டற”

“அம்மா இவங்க எல்லாரும் மோசமானவங்க, பணக்கார திமிர் பிடிச்சவங்க, இவங்க நினைச்சா நம்மளை நடுரோட்டுக்கு கூட கொண்டாந்துடுவாங்க, இவங்களாலதானே அந்த வீட்டை விட்டு இங்க வந்தோம், இப்ப இங்க வந்தும் நம்மளை நடுத்தெருவுல தள்ளாம விட மாட்டாங்க போல இருக்கு, இவங்க போகட்டும் விடும்மா” என ஆத்திரத்தில் கத்திய தன் மகளை சமாதானம் செய்வது எப்படி என யோசித்த மேகலா

”சரி நான் அவங்களை அனுப்பறேன், இதப்பாரு லஷ்மி காவேரி கத்தறாங்க பாரு போ என்ன ஏதுன்னு பாரு போ”

Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகாsasi 2019-02-02 15:49
:hatsoff: கமெண்ட் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. தாங்கள் குறிப்பிட்ட குறைகளை மனதில் நிறுத்தி அதற்கேற்ப அடுத்த வார எபியை உருவாக்குகிறேன். :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகாAdharvJo 2019-01-31 15:39
Pch indha scene sinappa kanava arakurai ya sollinirukaru parunga..ippo oralavukku we r able to link the dream sequence sasi ma'am 👌 kandipa idhu munjanmam than ippo ethukku esh-a ivalo disturb panudhu Oru velai madhavan, dhana and padmavathi-i ethavdhu seithu vitro 😝 something like pazhivangum padalam :Q: indha life la madhavan n padu yaraga irupananga 😂 ore suspense sasi ma'am but meenu esh-a rombha thituranga parthukonga naladhukilai :yes: niru Vera meenu mele Oru interest Oda suthuraru idhu ellan enga poi mudiyimn?? Interesting flow ma'am 👏👏👏👏 look forward to read the next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகாmahinagaraj 2019-01-31 13:44
வாவ் சூப்பர்... :clap: :clap:
எவ்வளவு அழகான ஆழமான கதை... :GL:
எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு மேம்.. :lol: இப்போ ஓரளவுக்கு கதை புரிஞ்சது மேம்.. :GL:
ஆனா மீனுகுட்டி ஏன் ஈஸ்கிட்ட அப்படி நடந்துக்கனும்... :sad:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகாViji. P 2019-01-31 13:29
கலக்குறீங்க சசி.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகாராஜேந்திரன் 2019-01-31 11:34
interesting dreams padmavathi chapter is good. what next? dharnendhiran sounds good nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகாராணி 2019-01-31 11:31
நல்ல கனவு கதை விருவிருப்பு அதிகரிக்கிறது. நன்று பத்மாவதியை பற்றின உண்மைகள் வெளிவருகிறது முழுதாக தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளது
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகாvijayalakshmi 2019-01-31 11:23
nice update eshwaroda dream supera irukku :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகாmadhumathi9 2019-01-31 06:08
wow nice epi.ippothaan thodarchiyaa kanavu kathai varugirathu.padippatharkku aarvamaaga kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL: meena appa idheypol baatqhikka pattu irukkirare.irandu perukkum enna sammantham irukkum :Q: waiting to read more. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகாmadhumathi9 2019-01-30 22:19
wow nice epi.ippothaan thodarchiyaa kanavu kathai varugirathu.padippatharkku aarvamaaga kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL: meena appa idheypol baathikka pattu irukkirare.irandu perukkum enna sammantham irukkum :Q: waiting to read more.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகாmadhumathi9 2019-01-30 22:16
wow nice epi.ippothaan thodarchiyaa kanavu kathai varugirathu.padippatharkku aarvamaaga kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# KINAruna 2019-01-30 20:04
Sooper.... Kadhai ippo thaan start aayirkku pola :clap: meenu appakum eswarankum same dreams thaano :Q: nice update mam.... Waiting for the next update (y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top