Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 05 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

”யோசனை பலமா இருக்கே”

”ஆமாம் முக்கியமான விசயத்தை பத்தி யோசிக்கிறேன்”

”என்ன விசயம் சொல்லு, நானும் சேர்ந்து யோசிக்கிறேன்”

“உங்களை பத்தின விசயம்தான்”

“அப்படியா என்ன விசயம்”

“எனக்கு யாராவது கோபப்பட்டாலே பிடிக்காது, கோபமா திட்டினாலோ, பேசினாலோ ஏன் சும்மா முறைச்சா கூட நான் பயந்துடுவேன், நீங்க அதிகமா கோபப்படறீங்க, உண்மையை தெரிஞ்சிக்காம திட்டறீங்க, என்னை பார்த்து முறைச்சீங்க, அதனால எனக்கு பிடிக்காத விசயங்களை செய்ற உங்களோட எப்படி நான் நட்பா பழகறதுன்னு யோசிக்கிறேன்” என அவள் சொல்ல முராரிக்கு மண்டையில் சுருக்கென வலித்தது.

”ஓ அப்ப உனக்கு கோபமா இருக்கறது பிடிக்காதா”

”சுத்தமா பிடிக்காது, எனக்கும் கோபம் வராது, என் வீட்ல யாரும் என் மேல கோபப்படமாட்டாங்க” என சொல்லிவிட்டு அவனைப் பார்க்க  முராரியோ அவள் சொன்னதைக் கேட்டு கலங்கியே போனான்.

”என்னோட குணமே கோபம்தான், அதுவே உனக்கு பிடிக்கலைங்கற”

”உங்க குணத்தை மாத்திக்கலாமே”

”அது ரொம்ப கஷ்டம் ராதா”

“ஏன் முயற்சி செஞ்சா கண்டிப்பா மாத்திக்கலாம்”

”இல்லை எப்படி உனக்கு அடிக்கடி பயம் வருதோ, அதுபோல எனக்கு முன்கோபம் அதிகமா வருமே”

“அப்படின்னா என்னோட நட்பு உங்களுக்கு கிடைக்காது” என ராதா சொல்லவே அவனுக்கு அப்போது சட்டென கோபம் வந்து அவளிடம் வந்து அவளை கோபமாக பார்த்தான் முராரி

அவனின் கோபத்தைக் கண்ட ராதாவோ பயந்து ஊஞ்சலை விட்டு எழுந்து விலகி நின்றாள்

”ஏன் இப்படி கோபமா பாரக்கறீங்க, எனக்கு பயமா இருக்கு” என சொல்ல அவனோ அவளது பயத்தைக் கண்டு நொந்து போனவன் அவளிடம் பேச ஆரம்பிக்கையில் தேவி அறைக்குள் வந்தாள் மாதுளம் பழ ஜுசுடன்

”ராதா ஜூஸ் ரெடி இந்தா சாப்பிடு” என சொல்லிக் கொண்டே அவளிடம் வர முராரியோ ராதாவால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக தேவி கொண்டு வந்த ஜூஸ் டம்ளரை எடுத்து கடகடவென குடித்து காலி டம்ளரை அவளிடம் தந்தவன்

”அவளுக்கு இன்னொரு ஜூஸ் கொண்டா”

“என்ன அண்ணா நீ, எவ்ளோ ஆசையா அவளுக்காக நான் ஜூஸ் போட்டுக் கொண்டுவந்தா நீயே மொத்தமா குடிச்சிட்டியே”

“காலையில இருந்து ஒரே வேலை, டயர்டா இருந்துச்சி அதான் குடிச்சேன், ஏன் நான் ஜூஸ் குடிக்க கூடாதா, ராதா வரவும் என்னை நீ மறந்துட்டியா நான் உனக்கு வேணாமா” என தங்கையிடம் முராரி முறையிட தேவியோ

”அப்படியெல்லாம் இல்லண்ணா சரி நான் போய் ஜூஸ் கொண்டு வரேன்” என சொல்ல ராதாவோ உடனே அவளைத் தடுத்தாள்

”தேவி எனக்கு இப்ப ஜூஸ் வேணாம், பாதாம் பால் இருந்தா கொண்டா, பால் சாப்பிட்டா டக்குன்னு நான் தூங்கிடுவேன்” என சொல்ல தேவியும் சரியென சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேற முராரியோ இரு கையையும் இடுப்பில் வைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டபடியே ராதாவைப் பார்த்தான்

”உன்கூட பேசனும்னு அவளை நான் அனுப்பிவிட்டேன். ஜூஸ்னா லேட்டா வருவா, பால்னா சீக்கிரமா வந்துடுவா, நீ ஏன் இப்படி செய்ற ராதா உனக்கு எதுவும் புரியலையா” என கேட்க அவளோ

”புரியலையே” என அவள் வெகுளியாக சொல்ல அவனோ

”சரி நீ டயர்டா இருப்ப, நீ போய் ரெஸ்ட் எடு, நான் அப்புறமா வந்து உன்னைப் பார்க்கறேன், அந்த புடவையை பத்திரமா அலமாரியில வைச்சிக்க, ஒரு நாள் எனக்கு நீ அதை கட்டிக்காட்டு” என சொல்ல அவளோ

”எனக்கு புடவைகட்ட தெரியாதே”

“அம்மாகிட்ட கத்துக்க” என சொல்ல அவளோ

”சரி” என சொல்லவும்

”சரி நான் கிளம்பறேன்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "காயத்ரி மந்திரத்தை" - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“சரி”

“நான் கிளம்பறேன்னு சொன்னா சரிங்கற”

“வேற என்ன சொல்லனும்”

“சந்தோஷம் நான் இருக்கறது உனக்குப் பிடிக்கலையா”

“நான் டயர்டா இருக்கேனே, என்ன செய்றது, எனக்கு தூக்கம் வருது, நைட்டெல்லாம் கார்ல ட்ராவல் பண்ணப்ப நான் தூங்கவேயில்லை”

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# Kalaaba kathalaa-05-sasirekaரேணுகா சிவா 2019-02-08 19:08
Nice mam.devi pavam mam.2 annakuta piranthathu ava patra kashtam irukke facepalm.wait for next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 05 - சசிரேகாvijayalakshmi 2019-02-08 17:23
nice epi :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 05 - சசிரேகாmahinagaraj 2019-02-08 17:10
அம்மாடியோ... என்னடா இது செம.. :clap: :clap:
இந்த ரெண்டு அண்ணன் தம்பிகளை சமாளிக்கரது பயங்கரமான வேளை போலவே.. சசி மேம் நீங்க தான் இவங்கள வெச்சு எப்படி ஓட்ட போறீங்களோ.. ரொம்ப கஷ்டம் மேம்... facepalm :sad: :P
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 05 - சசிரேகாராணி 2019-02-08 17:10
அருமையான கதை முராரி மற்றும் கோவிந்தனின் செயல்களால் பாவம் ராதாவும் தேவியும் கஷ்டப்படுகிறார்களே அடுத்து என்ன நடக்குமோ அடுத்த எபிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 05 - சசிரேகாmadhumathi9 2019-02-08 12:48
facepalm ippadi nadanthu kolgiraargale? :no: devi nilai romba parithaabam thaan. :thnkx: 4 this epi.waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top