Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 05 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

“அப்படிப் பார்த்தா நானும்தான் தூங்கலை”

“ஏன்”

“உன்னை நினைச்சி, நீ வரப்போறதை நினைச்சி, துளி தூக்கம் கூட எனக்கு வரலை”

என முராரி சொல்ல ராதாவோ

”எனக்கும் உங்களை நினைச்சி உங்களை பார்க்கப்போறதை நினைச்சி தூக்கமே வரலை, நமக்குள்ள என்ன ஒரு ஒற்றுமை” என மனதில் நினைத்துக் கொண்டவள்

”ஓ சாரி இப்ப போய் தூங்குங்க, அதான் ஜூஸ் குடிச்சிட்டீங்கள்ல நல்லா தூக்கம் வரும்”

“தூக்கம் வரலை டென்ஷன்தான் வருது” என சொல்ல

”அது தூங்காததால வர்ற பிரச்சனை, நல்லா தூங்கிட்டா டென்ஷன், கோபம் எல்லாம் ஓடிப்போயிடும்”

“அதுக்கு நான் தூங்கனுமே”

என கோபமாக சொல்ல அந்நேரம் தேவி உள்ளே வந்தாள்

”ஓ அண்ணா தூக்கம் வந்தா போய் தூங்குங்கண்ணா, நான் ராதாவை பார்த்துக்கறேன்” என சொல்லியபடியே ராதாவிடம் பால் டம்ளரை நீட்ட அதை வாங்கி முராரியை பார்த்தபடியே குடித்துவிட்டு

”சரி நான் போய் தூங்கறேன்” என சொல்லிய ராதா முராரியைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு கட்டிலுக்கு சென்று அங்கிருந்த புடவையை அலமாரியில் வைத்துவிட்டு மெத்தையில் ஏறி அமர்ந்துக் கொள்ள தேவியோ முராரியிடம்

”அண்ணா இன்னிக்கு நீ நிறைய வேலை பார்த்துட்ட, போண்ணா போய் தூங்கு” என சொல்ல அவனோ

”எனக்கு  தூக்கம் வரலை” என சத்தமாக கத்திவிட்டு வெளியே  செல்ல முனைய ராதாவோ

”தூக்கம் வரலைன்னா தாலாட்டு பாட்டு கேட்டா தூக்கம் வரும்” என சொல்ல அதைக் கேட்டதும் ஆர்வமான முராரியோ திரும்பி ராதாவைப் பார்த்தான். அவளோ கண்கள் மூடி படுத்திருக்கவும் அதிர்ந்தான்

”இப்ப இவள்தானே பேசினா, அதுக்குள்ள எப்படி தூங்கிட்டா”

”ரொம்ப டயர்டா இருந்தா போல, அதான் பேசிக்கிட்டே இருக்கறப்ப தூங்கிட்டா அண்ணா, நீங்க போங்க நான் அவள் கூட இங்கயே இருந்துக்கறேன்” என சொல்ல அவனும் ஏக்கமாக பெருமூச்சுவிட்டபடியே அந்த அறையை விட்டு வெளியேறினான். தேவியோ ராதாவிடம் வந்தவள் அவள் அயர்ந்து உறங்குவதைக் கண்டு சிரித்தபடியே அவள் பக்கத்தில் படுத்து உறங்கலானாள்.

மறுபக்கம் தாரா தனது ஓட்டல் அறையில் தன் எதிரில் அமர்ந்திருந்த கோவிந்திடம் என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக இருந்தாள். கோவிந்தும் தான் செய்த சின்ன தவறால் தாரா தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என அறிந்துக் கொள்ள முடியாமல் தவித்துப் போனான். கோயிலிலேயே தாராவிடம் பேச எண்ணியவன் திடீரென முராரி பாடவும் அதற்கு ராதா பாடவும் என பேச முடியாமல் போனது. அதற்காக தாராவுடன் ஓட்டலுக்கு வந்து 1 மணி நேரம் ஆகியும் ஒரு வார்த்தை பேசாமல் இருந்தான். தாராவோ லக்கேஜ்களை சரியாக அடுக்கிவிட்டு அவன் முன்பு அமர்ந்தாள். அவனாக பேசினால் பேசலாம் என இருந்தாள். ஆயினும் தனக்கு உதவி செய்ய வேண்டாம் ஆனாலும் ஒரு பெண் கஷ்டத்தில் இருக்கிறாள் என நினைத்து தன்னை கிண்டலடித்தவர்களிடம் முறையிட்டு சண்டையிட்டிருக்கலாம் முராரிக்கு தோன்றியது கூட ஏன் கோவிந்துக்கு தோன்றவில்லை என நினைத்துக் கொண்டு அதைப்பற்றி இப்போது கேட்பது வீண், வேறு என்ன பேசலாம் என தாரா யோசிக்கலானாள்.

அமைதியாகவே இருந்து வெறுத்துப் போன கோவிந்தோ தன் மௌனத்தை கலைத்துவிட்டு தாராவிடம்

”தாரா ஐ அம் சாரி, ரியலி சாரி, ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு” என சொல்ல அவளோ அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் கண்கள் உண்மையாகவே மன்னிப்பிற்காக ஏங்குவதைக் கண்டு

”இட்ஸ் ஓகே, நான் உங்களை மன்னிச்சிட்டேன் இப்ப வீட்டுக்கு போலாமா ராதா அங்க எனக்காக காத்திருப்பா” என சொல்ல கோவிந்தோ அவள் தன்னிடம் மன்னித்துவிட்டாள் என்றதுமே நிம்மதியாகி அவளிடம் இயல்பாகப் பேசினான்

”தாரா ப்ளீஸ் என்கிட்ட ஃப்ரீயா பேசலாம்ல, உன்னை பார்க்கனும், உன்கூட பேசனும்னு, நான் எத்தனை நாள் ஆசைப்பட்டிருக்கேன் ஆனா நீ என்னடான்னா பேசவே மாட்டேங்கற”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்" - மர்மமும் காதலும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“தெரியலை கோவிந்த் எல்லாமே சேட்டிங்லயே பேசிட்டதால, இப்ப உன்கிட்ட நேர்ல பேச எதுவும் வரலை” என சொல்ல அவனோ

”நீ வேற ஏதோ மனசுல வைச்சிக்கிட்டு என்னை அவாய்டு பண்ற மாதிரி தெரியுது” என கோவிந்த் கேட்க அதற்கு தாராவோ சிரித்தபடியே

”நான் எதையும் நினைக்கலை கோவிந்த் ரிலாக்ஸ்” என்றாள்

”இல்லை காலையில நான் உன்னை அந்த வெட்டிபயல்ங்க கிட்ட இருந்து காப்பாத்தியிருக்கனும், அதை விட்டுட்டு உனக்கு கஷ்டம் கொடுக்கற மாதிரி பேசிட்டேன் சாரி, அதனாலதான் இப்ப என்கிட்ட பேசவே உனக்கு பிடிக்கலை”

“அப்படியெல்லாம் இல்லை கோவிந்த், நீன்னு இல்லை அந்த இடத்தில வேடிக்கை பார்த்த யாருமே எனக்கு உதவி செய்யலை, உன்னைப் போலதான் சில பேர் என்னையே திட்டினாங்க, அதனால எனக்கு உன்மேல எந்த கோபமும் இல்லை, எனக்கு உன்னை பிடிக்கலைன்னா நான் எப்பவோ இங்கிருந்து என் ஊருக்கு கிளம்பியிருப்பேன்”

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# Kalaaba kathalaa-05-sasirekaரேணுகா சிவா 2019-02-08 19:08
Nice mam.devi pavam mam.2 annakuta piranthathu ava patra kashtam irukke facepalm.wait for next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 05 - சசிரேகாvijayalakshmi 2019-02-08 17:23
nice epi :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 05 - சசிரேகாmahinagaraj 2019-02-08 17:10
அம்மாடியோ... என்னடா இது செம.. :clap: :clap:
இந்த ரெண்டு அண்ணன் தம்பிகளை சமாளிக்கரது பயங்கரமான வேளை போலவே.. சசி மேம் நீங்க தான் இவங்கள வெச்சு எப்படி ஓட்ட போறீங்களோ.. ரொம்ப கஷ்டம் மேம்... facepalm :sad: :P
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 05 - சசிரேகாராணி 2019-02-08 17:10
அருமையான கதை முராரி மற்றும் கோவிந்தனின் செயல்களால் பாவம் ராதாவும் தேவியும் கஷ்டப்படுகிறார்களே அடுத்து என்ன நடக்குமோ அடுத்த எபிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 05 - சசிரேகாmadhumathi9 2019-02-08 12:48
facepalm ippadi nadanthu kolgiraargale? :no: devi nilai romba parithaabam thaan. :thnkx: 4 this epi.waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top