(Reading time: 20 - 40 minutes)

வெகு நேரமாக பழைய விஷயங்களை யோசித்தப்படி விழித்திருந்ததில் காலை மகி நல்ல உறக்கத்தில் இருக்க, இரவு தந்தையின் அருகில் இருப்பதாக நினைத்து அவனை நெருங்கி படுத்திருந்த சுடர் தான் முதலில் கண் விழித்தாள்.

மகியின் மார்பை தலையணையாக்கி அவள் இவ்வளவு நேரம் உறங்கிக் கொண்டிருக்க, மகி அவளை ஒரு கையால் அணைத்தப்படி இன்னொரு கையை தலைக்கு முட்டுக் கொடுத்தப்படி  உறங்கிக் கொண்டிருந்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனது சட்டையை பார்த்து முதலில் கண் விழித்தவள், முதலில் எங்கே உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது புரியாமல் பார்த்தவள், பின் தலையை நிமிர்த்து பார்க்க, மகி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனது கைகள் அவளை அணைத்திருப்பதை உணர்ந்தவள், பதறி அடித்து எழுந்தாள். அவளது அசைவில் அவனும் உறக்கத்திலிருந்து எழுந்திருக்க,

“என்னடா இங்க படுத்திருக்க, வெளிய தானே படுப்ப.. இப்போ ஏன் கட்டிலில் படுத்திருக்க, அதுவும் நெருக்கமா.. அருள் கல்யாணம் நடந்தப்பிறகு, நம்ம கல்யாணமும் நடந்த பின்னால தானே எல்லாம்னு சொன்ன.. இப்போ அந்த பேச்செல்லாம் எங்கடா போச்சு..” என்று பேசியப்படி அவனை தலையணையில் அடிக்க ஆரம்பிக்க,

அவள் கையிலிருந்த தலையணையை பிடுங்கி எறிந்தவன், அவள் எதிர்பார்க்காத சமயம் அவளை இழுத்து தன் மீது படுக்க வைத்தான். அவன் அப்படி செய்வான் என்று நினைக்காத அவளும் அவன் மீது வந்து விழுந்தாள்.

“இப்போ என்ன நடந்துச்சுன்னு இப்படி பதறுர.. எப்போ பார்த்தாலும் கல்யாணம் கல்யாணம்னு சொல்ற.. அப்போ உன்னோட கழுத்துல இருக்கிறதுக்கு பேர் என்ன?” என்று கையில் அவளது தாலியை எடுத்துக் காட்டினான்.

“இதை உன்னோட கழுத்தில் கட்டினதுமே நம்ம கல்யாணம் முடிஞ்சாச்சு.. ஊரறியன்னு சொல்றதெல்லாம் மத்தவங்களுக்காக.. வீட்ல விலகி இருக்கோம்னு சொல்லிட்டு வந்தா, அதுக்காக ஒன்னா படுக்கக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா.. இல்லை உன்னை தொடக் கூடாதா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பார்க்க அம்பி மாதிரி இருக்க, ஆனா எப்போ அந்நியனா மாறுனன்னு தெரியல. சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் என்னை அடிக்கிற.. ஆனா கிட்ட வரும்போதெல்லாம் ரெமோ மாதிரி ரொமாண்டிக் மூடுக்கு என்னை கொண்டு வர..” என்று சொல்லி அவளைப் பார்த்து அவன் கண்ணடிக்க,

அவனது இந்த பரிணாமத்தை இதுவரை பார்த்திருக்காதவளுக்கு அது அதிசயமாக தெரிய, அவனை ரசனையோடு பார்த்திருந்தாள். ஆனாலும் அவன் அவளை காதலிக்கவில்லை என்று சொன்னானே, எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்திருந்தாலும் இதுதான் அவளது மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அது இப்போது அவளுக்கு ஞாபகம் வரவே, அவனோடு ஒன்ற முடியாமல், “உன்னோட குடும்பத்து முன்ன நம்ம கல்யாணம் நடக்கணும்.. அவங்க என்னை ஏத்துகணும்.. அப்புறம் தான் நீ என்னை தொட்டு பேசக் கூட அனுமதி..” என்றவள், அவனது கை அணைப்பில் இருந்து விலகிச் சென்றாள்.

ஆனால் அவள் பேசியதெல்லாம் அவனை எந்தவிதத்திலும் கஷ்டப்படுத்தவில்லை. அருள் திருமணம் முடிந்து தான் அவர்கள் வாழ்க்கை ஆரம்பிக்கும் என்று சொன்னதை அவன் மீறப் போவதில்லை. இருந்தும் அவளை தனியாக விட்டால் ஏதாவது ஒன்றை நினைத்து வேதனைப்படுவாள் என்பதால், அவளோடு கொஞ்சம் இணங்கி நெருங்கி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டான்.

அதற்கும் முன்பு முதலில் கலை அத்தையிடம் பேச வேண்டும், அவர் சமாதானம் ஆகிவிட்டால் போதும் மற்றவர்களும் சுடர் மீதுள்ள கோபத்தை குறைத்துக் கொள்வர் என்று நினைத்தவன், அவரை நேரில் சென்று பார்க்கும் முடிவில் இருந்தான்.

உறவு வளரும்...

Episode # 47

Episode # 49

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.