(Reading time: 13 - 26 minutes)

ள்ளே அருள் கொஞ்சம் குழப்பத்துடனே அமர்ந்திருந்தாள். கலையரசி கோபமாக கட்டளை போல் சொன்னாலே, அதை அவள் அப்படியே எற்றுக் கொள்பவள் தான், அப்படியிருக்க இப்போது கலை நிறுத்தி நிதானாமாக சொன்ன விஷயத்தை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும், என்னத்தான் நீதான் முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னாலும், அவள் சம்மதிக்க வேண்டுமென்பது தான் கலையின் வேண்டுதலாக இருக்கும். ஏன் ஆனந்தியும் அதை தான் எதிர்பார்ப்பார். இப்படி இருவரின் எதிர்பார்ப்பையும் அவள் பதிலால் உடைக்க விரும்பவில்லை. ஆனால் அதற்காக அமுதனை திருமணம் செய்வதா? அவன் அவளை வேண்டாமென்று நிராகரித்த விஷயம் இன்னும் அப்படியே அவள் நெஞ்சில் பதிந்திருக்க, அவனை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? குழப்பத்துடனே சில நிமிடங்கள் அவள் அமர்ந்திருக்க,

அங்கே ஆனந்தியும் கலையும் அவள் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தனர். அவர்களது வேண்டுதலை பொய்யாக்காமல் அருள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.

ஆனந்தி உடனே அவளை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தான் சொன்னதை புரிந்துக் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்ததில் கலை மகள் மீது பெருமிதம் கொண்டு அவள் கைகளை பிடித்தப்படி தன் மகிழ்ச்சியை காட்டினார்.

அங்கிருந்த மற்றவர்களுக்குமே அருளின் திருமணம் நல்லப்படியாக முடிய வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் அனைவருமே தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

“உன்னோட முழு சம்மத்ததோட தானம்மா இதுக்கு நீ சம்மதிச்ச..” என்று அப்போதும் புகழேந்தி கேட்க தவறவில்லை.

அருளின் சம்மதம் கிடைத்ததும், “எனக்கு ஆபரேஷன் நடக்குறதுக்குள்ள அமுதன், அருள் கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்றேன்.. ஏன்னா ஒருவேளை ஆபரேஷன்ல எனக்கு ஏதாவது ஆனா கூட என்னோட பையனுக்கு என்னோட விருப்பப்படி கல்யாணம் முடிச்சு வச்சிருக்கேன், அவனுக்கு நல்ல வாழக்கையை ஏற்படுத்தி கொடுத்திருக்கேங்கிற சந்தோஷத்தோட கண்ணை மூடுவேன்..” என்று ஆனந்தி உணர்ச்சிவசப்பட்டு பேச,

“நல்ல காரியம் நடக்கறப்போ எதற்கு இந்த பேச்சு..” என்பது தான்  அனைவரின் எண்ணமாக இருக்க, அதை ஆனந்தியிடமும் கூறினர். பின் ஆனந்தியின் ஆசைப்படி உடனடியாக திருமணத்தை நடத்த முடிவு செய்து முதலில் இந்த வாரத்திலேயே ஒருநாள் நிச்சயத்தை வைத்துக் கொள்ளவும் அடுத்த மாதம் திருமணத்தை நடத்தவும் திட்டமிட்டு, நிச்சயத்துக்கான நாளையும் நேரத்தையும் தினசரி காலண்டரில் பார்த்து முடிவு செய்தனர்.

என்னதான் இப்போது நிதானமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாலும் மகளின் திருமணம் முடிவானதும் தான் கலையரசி நிம்மதியாக உணர்ந்தார். அடுத்து மகி விஷயத்தையும் பார்க்க வேண்டும் என்பதை உணர்ந்தவராக,

“அண்ணா.. அதான் அருள் கல்யாண விஷயம் நல்லப்படியா முடிஞ்சிடுச்சே, இப்போ மகி, சுடர் கல்யாணத்தையும் அப்படியே முடிவு செஞ்சுடலாமே..” என்று கலை கூற, எழில் தன் சகோதரியை வியப்பாக பார்த்தாள்.

“ஆமாங்க அடுத்து நான் பேச நினைச்ச விஷயமும் இதுதான்.. சுடர் தெரிஞ்சே தப்பு செஞ்சிருக்க மாட்டா.. அதனால அவ தப்பையும் மன்னிச்சு அவங்க கல்யாணத்தையும் உடனே நடத்த ஏற்பாடு செய்யணும்..” என்று ஆனந்தியும் கூறினார்.

“முதலில் அருள் கல்யாணம் நல்லப்படியா முடியட்டும்.. அப்புறம் இதைப்பத்தி யோசிக்கலாம்..” என்று புகழேந்தி அதே பல்லவியையே பாட, கலை, எழில், பூங்கொடி அனைவருக்கும் அது சலிப்பை ஏற்படுத்தியது.

“சரி அருள் நிச்சயதார்த்தத்துக்கு அவங்க ரெண்டுப்பேரையும் கூப்பிடலாமில்ல..” என்று கலை கேட்க,

“நான் அவங்களை ஒதுக்கி வைக்கல.. இப்பவும் அருள் கல்யாணம் முடியற வரை மகி மட்டும் இங்க வந்து இருக்கட்டும், சுடர் அவங்க வீட்ல இருக்கட்டும், அருள் கல்யாணம் முடியட்டும் அதுக்குப்பிறகு இவங்க கல்யாணப்பேச்சை ஆரம்பிக்கலாம்.. இது நான் ஏற்கனவே சொன்னது தானே, அதனால அவங்க இந்த விசேஷத்தில் கலந்துக்கிறதை நான் ஏன் வேண்டாம்னு சொல்லப்போறேன்..” என்று புகழேந்தி கூறினார்.

“சரி அருள் நிச்சயம் அன்னைக்கு மகிக்கிட்ட இதைப்பத்தி பேசுவோம்..” என்று கலை கூறினார்.

“சுடர் இதுக்கு ஒத்துக்குவாளான்னு தெரியலையே, அவ வீட்டுக்கே வர மாட்டேன்னு சொல்லிக்கிட்டு இருக்காளே..” என்று எழில் கவலையாக கூற,

“நீதான் தன்மையா பேசி புரிய வைக்கணும் எழில்..” என்று கலை கூறினார்.

“ம்ம் பேசறேன் க்கா..” என்றவள், “அக்கா என்மேல உங்களுக்கு கோபம் ஒன்னும் இல்லையே..” என்று கேட்டாள்.

“இப்போ யார் மேலேயும் எனக்கு கோபமில்லை..” என்று கலை கூற, எழிலும் நிம்மதியடைந்தாள்.

மகிழ்வேந்தன் அப்போது ரெஸ்ட்டாரண்டில் வேலையாக இருக்க, அறிவழகனும் அவனுடன் தான் இருந்தான் அந்த நேரம் வீட்டிலிருந்து அழைத்து அருள் திருமணம் முடிவான விஷயத்தை மூன்று பெண்களும் விலாவரியாக நடந்தவற்றை சேர்த்து கூறினர். அவனும் சுடரும் வரவேண்டும் என்று அழைத்தனர்.

ஆனால் மகியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அருள் திருமணம் முடிந்தால் தான் அவனது திருமணமும் நடக்கும், அதற்காக அருள் யாரையோ திருமணம் செய்துக் கொள்ளட்டும் என்று அவனால் எப்படி நினைக்க முடியும்? அதுவும் அது அமுதனாக இருக்கும் பட்சத்தில் அதை அவனால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நடந்து முடிந்த விஷயத்தில் அவனுக்கு அப்போது சுடரொளி மீது இருந்த கோபத்தை விட, அமுதன் மீது தான் அதிக கோபம் இருந்தது. இரண்டு பெண்களின் மனதை சங்கடப்படுத்திவிட்டு சென்றவனாயிற்றே, அதனால் அவன் மீது கோபத்தில் இருப்பவனால், அருளோடு அவனுக்கு திருமணம் பேசியிருப்பதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.