(Reading time: 31 - 62 minutes)

ந்த நேரம் பார்த்து மகி, அறிவு, இலக்கியா மூவரும் வீட்டுக்கு வர,

“அவங்களை நல்லப்படியா கொண்டு போய் ஹோட்டலில் விட்டுட்டீங்களாப்பா..” என்று பாட்டி விசாரித்துக் கொண்டிருந்தார்.

“ம்ம் எல்லாம் நல்லப்படியா முடிச்சாச்சு பாட்டி.. அதுக்குப்பிறகு நடக்க வேண்டியதெல்லாம் அவங்க பொறுப்பு..” என்று சொல்லிவிட்டு கண்ணடித்து புன்னகைக்க, அதைப்பார்த்து சுடருக்கு பற்றிக் கொண்டு வந்தது. உள்ளுக்குள்ளே குமுறிக் கொண்டிருந்தவள் வெளியே வெடிக்க தயாராகிக் கொண்டிருந்தாள்.

“டேய் என்ன பேச்சு பேசறதுன்னு இல்லையா.. இப்படியெல்லாமா பேசுவாங்க.. போடா..” என்று பாட்டி சிரித்தார்.

“சமையல் ரெடியா இருக்கு எல்லாம் சாப்பிட வர்றீங்களா” என்று பூங்கொடி வந்து அந்த நேரம் பார்த்துக் கேட்க,

“அம்மா போய் குளிச்சிட்டு வந்துட்றேன் ம்மா..” என்றப்படி மகி அவனது அறைக்குள் சென்றான்.

மற்றவர்கள் சாப்பிடுவதற்காக எழுந்து செல்லவும், அதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட சுடர் மகியின் அறைக்குச் சென்றாள்.

அவள் உள்ளே வரும்போது அவன் சட்டையை கழட்டிவிட்டு உள்ளாடையோடு நின்றிருந்தான். திடீரென கதவை திறந்தவளை பார்த்து,

“ஹே கதவை தட்டிட்டு உள்ள வர மாட்டீயா?” என்று அவன் கேட்க,

“எதுக்குடா கேட்டுட்டு வரணும்.. எனக்கு உன்னோட ரூம்க்கு வர உரிமை இல்லையா? நான் உன்னோட பொண்டாட்டி அது உனக்கு ஞாபகம் இருக்கா.. இல்லையா?” என்று கோபமாக கேட்டாள்.

“பொண்டாட்டியா அப்படின்னு யாரு சொன்னது.. நமக்கு தான் இன்னும் முறைப்படி கல்யாணம் நடக்கலையே.. அப்படி ஒரு கல்யாணம் வேண்டாம்னு சொன்னது கூட நீதானே.. அப்புறம் எப்படி நீ என்னோட பொண்டாடியா ஆவ..”

“நான் வேண்டாம்னு சொன்னதும் அப்படியே விட்டுடுவியா? அப்புறம் எதுக்குடா நான் லண்டன் போறேன்னு சொன்னதும் பின்னாடியே வந்து இந்த மஞ்சள் கயிறை கட்டுன..” என்று தன் தாலியை எடுத்துக் காட்டியவள்,

“எதுக்கு தனிக்குடித்தனம் கூட்ட்டிட்டு போன.. நான் எப்படியாவது போறேன்னு விட்டுட்டு போக வேண்டியது தானே.. நமக்கு நடந்ததை உண்மையான கல்யாணமா தான் நினைக்கிறேன்னு சீன் போட்ட.. இப்போ அதெல்லாம் உனக்கு மறந்துப் போச்சாடா..

நான் எப்போ உன்னை வேண்டாம்னு சொல்லுவேன்னு காத்துக்கிட்டு இருந்தல்ல.. உனக்கு வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணப் போறாங்கன்னதும் ஒத்துக்கிட்டல்ல.. அப்போ நான் நினைச்சது போல உனக்கு என்மேல இருந்தது வெறும் இரக்கம் தான் இல்ல.. என்னை காதலிக்கவே இல்லல்ல..” என்று அவன் உள்ளாடையை பிடித்தப்படி அவனைப் பார்த்து கோபமாக கேட்க,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவளை அப்படியே தன்னோடு இறுக்கி அணைத்தவன், “என்ன கேட்ட காதல் இல்லையா? உன்மேல நான் வச்சது வெறும் இரக்கம்னு நீ நினைக்கிற இல்ல..” என்று கோபமாக கேட்டான்.

அவன் இப்படி தன்னோடு சேர்த்து அணைப்பான் என்று எதிர்பார்க்காதவள், அவன் கோபமாக கேட்கவும் மிரண்டு விழித்தாள்.

அவளின் அந்த பாவனையில் கோபத்தை விடுத்து புன்னகைத்தப்படியே, “வாயால உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா மட்டும் தான் நான் உன்னை காதலிக்கிறதா அர்த்தமா சுடர்.. அப்படி நான் சொல்லாததால நான் உன்கிட்ட நடந்துக்கிட்டதுக்கெல்லாம் இரக்கத்தால செஞ்சதுன்னு சொல்வீயா?

அந்த தீம் பார்க்ல உன்கிட்ட நடந்துக்கிட்டது தப்புன்னு தெரிஞ்சதும் தான் உன்கிட்ட நல்லப்படியா பேசி பழகணும்னு நினைச்சேன்.. அப்போ உன்னை பார்க்க பாவமா தான் இருந்துச்சு.. அதால உனக்கு நல்ல ஒரு ப்ரண்டா இருக்கணும்னு நினைச்சேன்.. அப்போ உன்மேல வந்தது இரக்கம்னு சொல்லலாம்..

ஆனா அதுக்குப்பிறகு உன்மேல எனக்கு வந்தது இரக்கம் இல்ல.. காதல் தான், உன்னோட டைரியை படிச்சதும் எப்படி உன்மேல இரக்கம் வராம இருக்கும்னு நீ நினைக்கலாம்..

அப்படி உன்மேல இரக்கம் வந்திருந்தா என்ன செஞ்சிருப்பேன்.. மாமா உன்னோட பேசாம இருக்கிறதை பார்த்துட்டு, அவரோட உன்னை சேர்த்து வைக்க முயற்சி செஞ்சிருப்பேன்.. ஆனா அது எனக்கு தோனல.. அதுக்குப்பதிலா  மாமாவோட நீ சந்தோஷமா இருந்ததை விட அதிகப்படியா உன்னை சந்தோஷமா வச்சிக்கணும்னு நினைச்சேன்.. அது உன் மேல வச்சிருக்க இரக்கத்தாலேயா சொல்லு..

நீ லண்டன்க்கு போக நினைச்சதுக்கு காரணம் நான் தானே.. என்னால நீ திரும்பவும் உன்னோட குடும்பத்தை விட்டுட்டு லண்டக்கு போகணுமா? அப்படின்னு உன்மேல இரக்கப்பட்டிருந்தா உன்னை எப்படியாவது போராடி கூட்டிக்கிட்டு வர முயற்சியை மட்டும் தான் செஞ்சிருப்பேன்.. ஆனா நான் இல்லாம நீ இருக்கமாட்ட.. உன்னை விட்டு என்னாலேயும் இருக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான், என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை பார்த்துக்கலாம்னு நினைச்சு உன்னோட கழுத்தில் தாலி கட்டினேன்.. அது பேர் காதல் கிடையாதில்ல..

என்னோட காதலை உன்கிட்ட சொல்றதுக்கான சரியான சந்தர்ப்பம் கிடைக்கல.. அதனால் நான் உன்னை காதலிக்கவே இல்லைன்னு முடிவு செஞ்சுட்ட இல்ல..”

“அப்படியில்ல மகிழ்.. நீ எனக்கு தான்னு என்னோட மனசுக்கு புரிஞ்சாலும், நீ அதை செயலில் காட்டினாலும், என்னவோ தெரியல நீ என்னை காதலிக்கிறேன்னு சொல்றதை என்னோட காதால கேட்கணும்னு நான் ரொம்பவே எதிர்பார்க்கிறேன் டா.. அப்படி இதுவரைக்கும் சொல்லததால தான் அன்னைக்கு அருள் பேசவும் உன்னோட மனசுல நான் இல்லையோன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டேன்..

அதுக்கேத்தது போல அன்னைக்கு நீ பாட்டுக்கு என்னை விட்டுட்டு நிச்சயதார்த்த வேலையில் கலந்துக்கிட்டியா.. எல்லோருமே என்னை ஒதுக்கி வச்சது போல தோனுச்சு.. அதெல்லாம் சேர்த்து தான் நான் இப்படியெல்லாம் நடந்துக்கிட்டேன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.