இரண்டு நாட்களாக திருமண கொண்டாட்டத்தில் இருந்ததால் அனைவருக்கும் சரியான உறக்கமில்லாத பொழுதாக அந்த நாட்கள் இருந்ததால், இப்போது அனைவரும் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உறங்கிவிட்டனர்.
ஆனால் மகிழ், சுடருக்கு மட்டும் அத்தனை விரைவாய் உறக்கம் வராமல் விழித்திருந்தனர். மகி ஒரு அறையில் அறிவு, புவி, தமிழ் இவர்களோடு படுத்திருக்க, சுடர் ஒரு அறையில் இலக்கியா, எழில், மங்கை இவர்களோடு படுத்திருந்தாள்.
“தூங்கிட்டியா?” என்று அவளது அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவன் காத்திருக்க,
“தூங்கிட்டேனே..” என்று அவள் பதில் அனுப்பினாள்.
அந்த பதிலைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன், “கொஞ்சம் மொட்டை மாடிக்கு வா.. உன்கிட்ட பேசணும்..” என்று செய்தி அனுப்பினான்.
“முடியாது.. யாருக்காவது தெரிஞ்சா என்ன நினைப்பாங்க.. அதனால் வரமாட்டேன்..” என்று பதில் செய்தி அனுப்பினாள்.
“நாம காதலர்கள் கிடையாது.. கணவன், மனைவி.. நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு உனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு சுடர்..”
“அதானே எனக்கும் பயமா இருக்கு.. கொஞ்ச நேரத்துக்கு முன்ன ரூம்ல வச்சு செஞ்சதை மொட்டை மாடில வச்சு செஞ்சா அப்புறம் யாராவது அதை பார்த்துட்டா அவங்க முகத்தையே என்னால பார்க்க முடியாது..”
“ஜஸ்ட் பேசிக்கிட்டு இருக்க தான் கூப்பிட்றேன் சுடர்.. ப்ளீஸ் வாயேன்..” என்று நிறைய ப்ளிஸ்களை வரிசையாக அனுப்ப, அவளுக்குமே அவனோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியதால் மொட்டை மாடிக்குச் சென்றாள்.
மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டிக்காக போட்டிருந்த மேடையில் அவளோடு அவன் அமர, அவளை தன் தோளோடு சாய்த்துக் கொண்டான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“மகிழ் அன்னைக்கு அப்பா என்கூட பேசறதில்ல.. நீயும் என்னை காதலிக்கவே இல்லைன்னு விரக்தியில் லண்டனுக்கே போக நினைச்சேன்.. அப்போ மட்டும் நீ என்னை போக விட்ருந்தா.. நான் என்னவாகியிருப்பேனோ..
ஆனா என்னை தேடி வந்து என்னோட கழுத்துல நீ தாலி கட்டினதால தான், இப்போ எனக்கு என்னோட அப்பா திரும்ப கிடைச்சாரு.. நீ கிடைச்சிருக்க.. சித்தி, தம்பிங்க அப்புறம் உன்னோட அழகான குடும்பம், நல்ல ப்ரண்ட்ஸா அருள், இலக்கியா எல்லோருமே கிடைச்சிருக்காங்க.. இப்போ நான் எந்த அளவுக்கு சந்தோஷமா ஃபீல் பண்றேன்னு உனக்கு தெரியாது மகிழ்..” என்றவளை தன்புறம் திருப்பி, அவளது கன்னங்களை தன் கைகளால் தாங்கியவன்,
“உண்மையிலேயே அன்னைக்கு நீ லண்டனுக்கு தான் போக நினைச்சீயா சுடர்..” என்றுக் கேட்டதும், அவள் கண்கள் தாழ்ந்தது.
“நீ அன்னைக்கு என்ன முடிவெடுத்திருந்தன்னு எனக்கு தெரியும் சுடர்.. அப்படி மட்டும் நான் அன்னைக்கு வராம போய், நீ இந்த உலகத்தை விட்டு போயிருந்தா, நான் இந்த உலகத்தில் ஒரு நடை பிணமா தான் வாழ்ந்திருப்பேன் சுடர்..”
“என்ன பேசற மகிழ்.. அதான் அப்படி ஏதும் தப்பா நடக்கலையே..”
“இருந்தாலும் இனியும் உன்னோட யோசனை அப்படி போகாதுன்னு என்ன நிச்சயம்? இத்தனை நாள் நீ என் மேல கோபமா இருந்தப்ப.. உன்னை தனியா விட்டுட்டு இருக்க முடியாம தவிச்சேன்..
இனியும் எல்லாமே சரியாப் போச்சுன்னு சொல்ல முடியாது.. ஒரு குடும்பம்னா பிரச்சனைகள் வரத் தான் செய்யும், யாராவது பழச பேசி காயப்படுத்தலாம்.. அப்போல்லாம் நீ இப்படி ஏதாவது செஞ்சுப்பீயோன்னு நான் பயந்துக்கிட்டே இருப்பேன் தெரியுமா?”
“இனி அப்படி பயப்பட வேண்டிய அவசியம் இல்ல மகிழ்.. நீ எனக்கு கிடைக்க மாட்டீயோன்னு தான் இப்படில்லாம் செஞ்சேன்.. ஆனா இனி அப்படியில்லை, நான் இப்போ உன்னோட மனைவி அந்த ஒரு சந்தோஷமே என்னை ரொம்ப நாள் உயிரோட வச்சுருக்கும்.. முன்ன மாதிரி நமக்கு முறைப்படி கல்யாணம் ஆகணும்னு சொல்லிக்கிட்டெல்லாம் இருக்க மாட்டேன்.. ஏன்னா எப்போதும் நீ என்னோட மகிழ் தான்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு.. இப்போ இந்த உலகத்துல சந்தோஷமான ஆள் யாருன்னு கேட்டா நான் தான்னு சொல்லுவேன்..”
“ஆனாலும் உன்னோட மனசுக்கு ஏதாவது கஷ்டம்னா என்னோட பகிர்ந்துக்க சுடர்.. என்னாலேயே ஏதாவது பிரச்சனைன்னா, என்னோட சட்டையைப் பிடிச்சு சண்டை போடு.. நாலு அடி கூட அடி.. ஆனா இப்படி விபரீதமா எதுவும் யோசிக்காத.. அதை என்னால தாங்கிக்கவே முடியாது..” என்றவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
மகிழ்வேந்தன் ஏற்றிய மகிழ்ச்சி எனும் தீபம் இன்று மட்டுமில்லாமல் என்றென்றும் அவன் மனையாளின் வாழ்க்கையை சுடர் விட்டு ஒளிரச் செய்யும் என்ற நம்பிக்கையோடு நாமும் விடைபெறுவோம், சுபம்.
உறவுகளுக்கு என்றுமே முற்றுப் புள்ளி கிடையாது. திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக இன்னும் பல உறவுகள் சேர அது தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும், இது நம் கதைக்கும் பொருந்தும், இங்கே சுடரொளி, அமுதனுக்கு மகி, அருள் மூலமாக அழகான ஒரு குடும்பம் கிடைத்தது போல், நம் அறிவழகனுக்கும் இலக்கியாவிற்கும் இப்படி புது உறவுகள் வந்து சேரப் போவதை நாம் அடுத்த கதையில் பார்க்கப் போகிறோம்.. ஆனால் இப்போது இல்லை, மையலில் மனம் சாய்ந்த வேளை முடிந்ததும் இலக்கியாவின் இளமாறனை சந்திக்கலாம்.. கதையைப் பற்றியும் தலைப்பை பற்றியும் அப்போது கூறுகிறேன்.
இதுவரை மிகவுமே பொறுமையாக இந்த கதையைப் படித்து கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள். இதே ஆதரவை மையலில் மனம் சாய்ந்த வேளைக்கு கொடுக்க வேண்டும், இனி வாரம் ஒரு அத்தியாமாக மையலில் மனம் சாய்ந்த வேளையை இதே ஸ்லாட்டில் தொடர இருக்கிறேன். அதேபோல் அனைவரும் சில்சீ பாரம் சென்று பாருங்கள். அதில் நீ பார்த்த விழிகள் என்று ஒரு தொடரின் சில அத்தியாயங்கள் பகிர்ந்திருக்கிறேன்.. இனி தொடர்ந்து அத்தியாயம் பகிருகிறேன். சப்ஸ்க்ரைப் செய்து அதையும் அனைவரும் படியுங்கள் நன்றி.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.