(Reading time: 31 - 62 minutes)

ங்கப்பாரு சுடர்.. நீ ஒரு தப்பு செஞ்சிருக்க தான், அதுக்கு எல்லோருக்கும் உன்மேல வருத்தம் இருந்துச்சு தான்.. ஆனா இப்போ அதெல்லாம் சுத்தமா இல்ல.. எல்லோரும் உன்னை தப்பானவளான்னு நினைப்பாங்கன்னு வருத்தப்படாத சரியா? இப்படி எதையாச்சும் நினைச்சு வருத்தப்பட்டு உன்னையே நீ வருத்திக்கிறதை என்னால தாங்கிக்கவே முடியாது.. ஏன்னா நான் உன்மேல உயிரையே வச்சிருக்கேன் தெரியுமா?”

“இப்போ இவ்வளவு பேசற நீ.. இத்தனை நாள் என்னை கண்டுக்காம கூட இருந்தது எதனாலாயாம்.. அதுவுமில்லாம பாட்டி வேற என்னல்லாம் பேசினாங்க தெரியுமா?”

“ஹாஹா அதனால் தானே மேடம் இப்போ இங்க வந்தீங்க.. உனக்கு எதனால என் மேல கோபம்னே தெரியாம தவிச்சு போயிருந்தேன் தெரியுமா? அப்போ உன்கிட்ட பேச எத்தனை முயற்சி செஞ்சேன்.. ஆனா நீ பாட்டுக்கு அங்க வீட்ல போய் உட்கார்ந்துக்கிட்ட.. அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும், அதுக்குப்பிறகும் நீல பேச முயற்சி செஞ்சிருப்பியா? அதான் இப்படி ஒரு ட்ராமா போட்டு பாட்டியை இப்படி பேச வச்சேன்..”

“என்ன சொல்ற மகிழ்.. இது ட்ராமாவா? அப்போ பாட்டி ட்ராமாக்காக தான் அப்படி பேசினாங்களா? பாட்டிக்கு என்மேல கோபம் இல்லையா?”

“அவங்க ஏன் தேவையில்லாம உன் மேல கோபப்பட போறாங்க.. எங்க அவங்க பொண்ணு வாழ்க்கையில் நீ இடைஞ்சலா இருப்பியோன்னு அவங்க பயந்தாங்க.. அதுவும் கதிர் மாமாவே வேண்டாம்னு சொல்லியும் எழில் அத்தை உன்னை வீட்டுக்கு கூட்டிட்டி வரவும் அவங்களுக்கு அது பிடிக்கல..

ஆனா கதிர் மாமாவுக்கு நீ ரொம்ப முக்கியம்னு தெரிஞ்சப்பிறகு, அதிலும் எழில் அத்தைக்கே இதுல பிரச்சனை இல்லைன்னு தெரிஞ்சப்பிறகு அவங்க இனி என்ன உன்னை பேசப் போறாங்க.. அதிலும் அவங்க செல்ல பேரனுக்கு உன்னை பிடிக்கும்னு தெரிஞ்சப் பின்னாடியும் அவங்க உன்கிட்ட பேசுவாங்களா சொல்லு..”

“போ மகிழ் நான் எத்தனை பயந்துட்டேன் தெரியுமா? உனக்கு என்னோட தவிப்பு எப்படி தெரியும்.. உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னாலும், உள்ளுக்குள்ள உடைஞ்சுப் போயிட்டேன்.. இதுல நீ என்னை கண்டுக்காம இருந்ததும் எப்படி வருத்தப்பட்டேன் தெரியுமா?”

“உன்னை கண்டுக்கலன்னு யாரு சொன்னது.. ஒவ்வொரு முறையும் என்னை நீ ஏக்கமா பார்க்கிறது தெரிஞ்சு நானும் தான் கஷ்டப்பட்டேன்.. ஆனாலும் நீயா என்கிட்ட பேசணும்னு நினைச்சு தான் இந்த ப்ளான் போட்டேன்.. ஆனாலும் இந்த ஷாக் ட்ரீட்மெண்ட் தானே வேலை செஞ்சுது..

என்னை திருப்பி பார்க்க வைக்க இப்படி நீ அழகா  புடவை கட்டியிருந்தும், அதை கண்டும் காணாம இருக்கிறது எனக்கு எத்தனை கஷ்டமா இருந்துச்சு சொன்னா உனக்கு புரியாது.. ஒழுங்கா அப்பா வந்து பேசினப்பவே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்திருந்தா இப்படியான அவஸ்தையெல்லாம் இல்லாம இருந்திருக்கும்.. இப்போ எப்படியும் ஒரு ரெண்டு மூனு மாசம் கழிச்சு தான் நம்ம கல்யாணத்தை நடத்துவாங்க..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "இதயச் சிறையில் ஆயுள் கைதி..." - காதலும் மர்மமும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஆனா அதுவரைக்கும் என்னால சும்மா இருக்க முடியாது.. நான் ஏற்கனவே சொன்னது போல நமக்கு தான் முன்னமே கல்யாணம் ஆகிடுச்சே.. அதனால அமுதன் அருளோட சேர்ந்து நாமளும் ஹனிமூன் போறோம்.. பார்த்தியா டிக்கெட் கூட எடுத்திட்டேன்..” என்று அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து விமான டிக்கெட்டை எடுத்துக் காட்டவும்,

முதலில் அதிர்ச்சியில் கண்களை விரித்தவள் பின் முகம் முழுக்க வெட்கத்தால் சிவக்கவும், “என்னோட மகிழ்க்காக நான் வருவேனே..” என்றாள்.

இன்னமும் அவளை அணைப்பிலேயே வைத்தப்படி பேசிக் கொண்டிருந்தவன், “ஹே நிஜமாவா சொல்ற..” என்று தன் மூக்கால் அவள் மூக்கை உரசியப்படியே கூறியவன்,

“நீ என்ன சொல்றன்னு பார்க்கிறதுக்காக தான் அப்படி ஒரு பிட்டை போட்டேன்.. மத்தப்படி அமுதன், அருள் கூட நாம மட்டும் போகப் போறதில்ல.. கூட மலர், மணி அப்புறம் அவங்க ஹஸ்பண்ட்ஸ், இலக்கியா, அறிவு, நம்ம அறிவோட ஆள்னு எல்லோருக்கும் டிக்கெட் போட்ருக்கு.. ஒருப்பக்கம் ஹனிமூன் கப்பிளை டிஸ்டர்ப் செய்யாம நாமல்லாம் தனியா எஞ்சாய் பண்ணப் போறோம்.. இருந்தாலும் எனக்காக நீ வருவேன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ்..”

“எனக்கு என்னோட மகிழைப் பத்தி தெரியாதா? கொஞ்ச நாள் உன்னோட ஒரே வீட்ல இருந்திருக்கேனே.. என்னைக்கும் நீ அத்துமீற நினைச்சதில்லையே, அருள்க்காக நாங்க தனித்தனியா இருப்போம்னு சொல்லி விலகி தானே இருந்திருக்க, ரொமான்ஸ்ங்கிற பேர்ல ஒரு கிஸ் கூட பண்ணதில்லையே”

“அடப்பாவி.. நீ இப்போ என்னை பாராட்டறியா.. இல்லை என்னை டேமேஜ் பண்றியான்னு தெரியலையே.. ஆனாலும் இத்தனை நாள் அருள்க்காக தான் காத்திருந்தேன்.. ஆனா இனி அப்படி இல்லல்ல..” என்று சொன்னவனின் கைகள் புடவையை தாண்டி அவளது வெற்றிடையில் ஊர்வலம் போனது. அவனது உதடுகள் அவள் இதழ்களை நோக்கி வரவும், அவள் கண்களை மூடி அவனது செயல்களை அனுமதித்தாள்.

அவனது உதடுகள் இதழ்களை தாண்டியும் மேனியெங்கும் ஊர்வலம் நடத்த அந்த நேரம் பார்த்து மின்சாரம் தடைப்பட்டு அந்த அறை இருளில் மூழ்க, “அய்யோ மகிழ்.. இருட்டா இருக்கு.. எனக்கு பயமா இருக்கு மகிழ்..” என்று அவனோடு இன்னும் ஒன்றினாள்.

அவளுக்கா இருட்டைக் கண்டு பயம், பாதி பொழுதை இருட்டறையில் கழித்தவள் தானே, அவளுக்குமே மகிழின் செயல்கள் பிடிக்க அதை அனுமதித்தாள். வெளியில் வீட்டு உறுப்பினர்கள் இருப்பதையும் மறந்து, மீண்டும் மின்சாரம் வந்தது கூட அறியாமல், அவர்கள் இந்த உலகத்தை மறந்தப்படி இருக்க, திடீரென வந்த அலைபேசி சத்தத்தில் தான் இருவரும் விலக மனமில்லாமல் விலகினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.