(Reading time: 31 - 62 minutes)

றிவு தான் அழைத்திருந்தான். “டேய் உங்களுக்காக நாங்க சாப்பிடாம உட்கார்ந்திருக்கோம்டா.. வருவீங்களா? மாட்டிங்களா? கரண்ட் போனப்பவே வருவீங்கன்னு எதிர்பார்த்தோம்.. என்னடா செய்றீங்க?” என்று அவன் கேட்க,

“டேய் கரண்ட் போனதுமே அது உனக்கு தெரிஞ்சிருக்க வேண்டாமா? இருடா வரோம்..” என்றவன் சட்டையை எடுத்து மாட்டிக் கொள்ள, அவளும் தன் ஆடைகளை சரிபடுத்திக் கொண்டாள். இருந்தாலும் முகச் சிவப்பை எங்கு மறைக்க?

இருவரையும் ஒன்றாக கண்டதும் அவர்களின் பெற்றோர் முகத்திலும் மகிழ்ச்சி வந்து குடிக் கொண்டது.

“என்னடா மகி அப்போ கல்யாணத்துக்கு நாள் பார்த்திடுவோமா?” என்று பாட்டி கேட்க,

“இன்னும் நீங்க பார்க்க ஆரம்பிக்கலையா பாட்டி..” என்று மகி திருப்பிக் கேட்டான்.

“பாட்டி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்துக்கு தேதி குறிச்சிடுங்க.. இல்ல குறிச்ச தேதியில் கல்யாணத்துக்கு பதிலா வளைகாப்பு செய்யக் கூட சான்ஸ் இருக்கு..” என்று அறிவு சொல்ல,

“என்னடா பேச்சு இது..” என்று மங்கை அவனை கண்டித்தார்.

அந்த பேச்சில் சுடருக்கு இன்னும் வெட்கம் மேலிட மகிழ் அவளை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

“சுடர் கல்யாணம் வேண்டாம்னு சொன்னதும் நான் கொஞ்சம் ரொம்பவே பயந்துட்டேன்.. ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு எதுவும் சரியா செய்யலையே, இதுல கடைசிவரைக்கும் எதுவும் நல்லது செய்ய முடியாம போயிடுமோன்னு நினைச்சேன்.. இப்போ தான் எனக்கு சந்தோஷமா இருக்கு..” என்று கதிர் உணர்ச்சிவசப்பட்டு பேச,

“என்னங்க அதான்  மகிழ் அப்படியே விட்டுட மாட்டான்.. சுடரை சரிப் பண்ணிடுவான்னு  நான் முன்னமே சொன்னேனே.. பார்த்தீங்களா?” என்று எழில் கூறினாள்.

“சரி எல்லோரும் இப்போ சாப்பிடுங்க.. நாளைக்கே சீக்கிரம் ஒரு நல்ல முகூர்த்தமா குறிச்சு.. கல்யாணத்தை எப்படி செய்வோம்னு பேசலாம்..” என்று புகழேந்தி கூற, அனைவரும் அதை ஆமோதித்தனர்.

டற்கரை ரெசார்ட்க்கு முன்னமே வந்துவிட்டதால், கடற்கரையில் அமுதனின் கைகளோடு தன் கையை கோர்த்துக் கொண்டு சிறிது நேரம் நடந்தது. அவனோடு பேசியப்படி கேண்டில் லைட் டின்னர் சாப்பிட்டது என்று பொழுது கழிந்ததால், இப்பொது அவனோடு தனியறையில் இருப்பதும் அருள்மொழிக்கு பெரிதாக தெரியவில்லை.

இதுவே வீட்டில் இருந்திருந்தால் கலை கண்டிப்பாக ஒரு பட்டுப்புடவையை கொடுத்து கட்டச் சொல்லியிருப்பார். வெளியில் உறவினர் கூட்டம் இருக்க, அவர்களை தாண்டி கையொல் பால் சொம்போடு அவள் மட்டும் அமுதனோடு தனியறைக்குள் செல்வது அவளுக்கு என்னவோ போல் இருந்திருக்கும், ஆனால் அப்படி எந்தவித பதட்டமும் இல்லாமல், சாதாரணமான ஒரு மெல்லிய டிசைனர் சேலையில்  இயல்பாக அமுதனோடு அமர்ந்திருக்க அவளால் முடிந்தது. இருந்தாலும் அடுத்து என்ன? என்று நினைத்து பார்க்கும் போது அதில் கொஞ்சம் அவளுக்கு பதட்டமாகவும் இருந்தது.

அதை அவனும் உணர்ந்தானோ, “மொழி நான் நம்ம ஃபர்ஸ்ட் நைட் பத்தி என்ன கனவெல்லாம் கண்டேன் தெரியுமா? இந்த சினிமால வரது போல நீ பட்டுப்புடவை கட்டி தலை நிறைய பூ வச்சு, கையில் பால்சொம்போட ரூம்க்குள்ள வெட்கத்தோட வரணும்.. அப்புறம் நான் உன்னை அப்படியே அள்ளி..” என்று சொல்லிக் கொண்டே போக,

அவனை முறைத்துப் பார்த்தவள், “லண்டன்ல இருந்து வந்த நீங்க இப்படியெல்லாமா எதிர்பார்ப்பீங்க.. இங்க இருக்கவங்களே இதெல்லாம் ஓல்ட்னு சொல்லிக்கிறாங்க..” என்றாள்.

“பின்ன உன்னைப் போல அக்மார்க் தமிழ் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்டா இப்படி தான் எதிர்பார்க்க முடியும்? இந்த சடங்கெல்லாம் ஒல்ட்டா இருந்தாலும், அதுக்குப்பிறகு நடக்கறதெல்லாம் புதுசு தானே..” என்று சொல்லி கண்ணடித்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“வேண்டாம் இப்படி இயல்பா உங்கக்கூட இருக்க முடியுதேன்னு இப்போ தான் நினைச்சேன்.. என்னோட மூடை மாத்திடாதீங்க..” என்று சொன்ன நொடி அவளை நெருங்கி அமர்ந்தவன்,

“ஹே என்கிட்ட என்ன பயம் அருள்.. அப்போ ஒரு கிஸ் கேட்டாலே எல்லாம் கல்யாணத்துக்கு பின்ன தான்னு சொல்லுவ.. இப்போ இப்படி பயப்படலாமா?” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

திருமணம் ஆகியிருந்தாலும் திடீரென அவனுடனான நெருக்கம் அவளை ஏதோ செய்ய, “நான் எங்க பயமா இருக்குன்னு சொன்னேன்.. இப்போ நீங்க எத்தனை கிஸ் வேணும்னாலும் பண்ணலாமே..” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை. அதற்கு முன்பே அவளது இதழை அவன் உதடுகளால் சிறைப்படுத்தியிருந்தான்.

முத்தமழையில் அவளை குளிப்பாட்டியவன், அவளை தன்னோடு சேர்த்தப்படி அமர்ந்திருக்க, “அமுதன் ஹனிமூன்க்கு எல்லோருக்குமே டிக்கெட் போட்ருக்கீங்களே ஏன்?” என்று அவன் மார்பில் விரல்களால் கோலம் போட்டப்படி கேட்டாள்.

“ம்ம் நமக்கான நேரம் நிறையவே இருக்கு மொழி.. உன்னை கூட்டிக்கிட்டு இந்த உலகத்தையே ஒரு ரவுண்ட் வந்துடுவேன்.. அதான் முதல்முறை தனியா போகாம எல்லோரோடவும் போனா நீ சந்தோஷமா ஃபீல் செய்வேன்னு நினைச்சேன்.. என்ன இருந்தாலும் உன்னோட குடும்பத்து ஆளுங்க உன்கூட இருந்தா உனக்கு ஹாப்பி.. நீ ஹாப்பியா இருந்தா எனக்கும் ஹாப்பி.. அப்போ தானே நான் கேக்கறதெல்லாம் எனக்கு டபுள் மடங்கா கிடைக்கும்..”

“இப்போ தான் எனக்கு உங்களை ரொம்பவே பிடிக்குது அமுதன்.. ஐ லவ் யூ..” என்று அவனை அணைத்து இப்போது அவள் முத்தமழை பொழிய, அடுத்து அங்கே அழகானதொரு சங்கமத்திற்கான தேடல் தொடர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.