(Reading time: 17 - 33 minutes)

சிவகங்காவதி இறை பூஜையில் ஈடுபட்டிருக்க ரத்தன் சென்று நஸீமை மனமாற வரவேற்றான்.

என்ன ஆளுநர் அவர்களே!!என் மீதான கோபம் தீர்ந்ததா??”

இன்னும் முழுதாய் தீரவில்லை அதனால் தான் நேரில் பார்த்து யுத்தத்திற்கு தயாரா என்று கேட்க வந்தேன்.”

அடடா இதென்ன இந்த ரத்தனுக்கு வந்த சோதனை!!”

போதும்!போதும்!எது எப்படியிருப்பினும் உன் தங்கை தான் முக்கியம் என்று எனக்கு நன்றாக உணர்த்திவிட்டுத் தானே வந்தாய்!”

நஸீம் என்ன இது சிறுபிள்ளை போன்று பேசுகிறாய்?உனை இப்படி பார்க்க எனக்கும் மகிழ்ச்சியே இருந்தும் உனைவிட இவ்வுலகில் முக்கியமானவரை எவரும் எனக்கு கிடையாது என்று நீயே அறிவாய் அல்லவா?”

சரி சரி நம்புகிறேன்.மிகுந்த அயர்வாய் இருக்கிறேன். பசியாற்றி விட்டு உன்னுடன் வாதாடுகிறேன்.இப்போது..”

நீயே பசி என்று கேட்கும் அளவில் நடந்து கொண்டேனே!!வா வா முதலில் உணவருந்திவிட்டு இளைப்பாறு நஸீம்.”

அங்கிருந்து உணவருந்தும் கூடத்திற்கு இருவரும் சென்று அமர சிவகங்காவதியின் குரலில் திருவாசகப் பாடல்கள் காற்றில் கரைந்து வந்தன

சிவகங்காவதி தான் இங்கு வந்த நான்கு நாட்களும் சரியாய் உண்கிறாளோ இல்லையோ ஈசனை விட்டு அங்கிங்கு நகர மாட்டேன் என்கிறாள்.இதோ அவளை அழைத்து வரச் சொல்கிறேன்.”

சிறிதுநேரத்தில் அங்கு வந்தவளை கண்டவனின் கண்கள் அதுவாய் இழந்த ஒளியை திரும்பப் பெற்றிருந்தது.ரத்தனும் வந்த நொடியில் இருந்து நஸீமை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.ஏதோ சரியில்லை என்பது தெரிந்தாலும் அவனால் என்னவென்பதை கணிக்க முடியவில்லை.

சிவகங்காவதி அவனிடம் மரியாதை நிமித்தமாய் வணக்கம் கூறி ரத்தன் சிங்கின் அருகில் நின்று கொண்டாள்.

எப்படியிருக்கிறாய் கங்கா?”

மிக்க நலம்.தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”

நலத்திற்கு ஒன்றும் குறைவில்லை.”,என்றவன் தனக்கான உணவை உண்ண ஆரம்பித்தான்.இருவரும் உணவை முடித்து அங்கிருந்து கிளம்பும் வரை மரியாதை நிமித்தமாய் அங்கு நின்றிருந்தாள் சிவகங்காவதி.

விருந்து திருப்தியாய் இருந்ததா நஸீம்?”

மிக மிக அருமையாக இருந்தது ரத்தன்.வயிறு நிறைந்திருக்கும் போதே மனதிற்கும் நிறைவாய் நான் இங்கு வந்ததற்கான காரணத்தைக் கூறிவிடுகிறேன்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

என்ன காரணமா?அப்படியென்றால் நீ எனைப் பார்ப்பதற்காக வரவில்லையா?”

உனைப் பார்க்காமல் பேசாமல் உன் தங்கையின் நிக்காஹ் பற்றி யாரிடம் பேசுவது?”

என்ன சிவகங்காவதியின் திருமணமா?என்ன சொல்கிறாய்?யார் மணமகன்?”

யாரோ ஒருவனின் நிக்காஹ் பற்றி நான் ஏன் பேச வர வேண்டும்?நான் வந்தது என் நிக்காஹ் பற்றி பேசுவதற்காக.”

நஸீம்!!என்ன இது விளையாட்டு?”

எதற்காக இத்தனை பதட்டம் ரத்தன்.நான் பொறுமையாகத் தானே பேசிக் கொண்டிருக்கிறேன்.”

நஸீம் வேண்டாம் அவள் அத்துனை பெரிய பாவம் எதுவும் செய்துவிடவில்லை.அவளை பழிவாங்குவதற்காக திருமணத்தை ஆயுதமாய் எடுப்பது சரியல்ல.”

என்ன உளறுகிறாய் ரத்தன்!!தமையன் பாசத்தில் அறிவை இழக்காதே!பழிவாங்குவதற்காக எல்லாம் திருமணம் செய்யும் அளவு கொடூரனா நான்?யோசிக்காமல் வார்த்தைகளை விடாதே!”

பிறகு எதற்காக இந்த திடீர் முடிவு அதுவும் வேறு மதத்தை சேர்ந்தவளான அவளை திருமணம் செய்வதற்கு என்ன காரணம் இருந்துவிட முடியும்?”

காரணம்..காதலாய் கூட இருக்கலாம் அல்லவா?”

நஸீம்!!”,என்றவன் இருக்கையிலிருந்து எழுந்தேவிட்டான்.பொறுமையாய் அவனருகில் வந்தவன் ஆதரவாய் அவன் தோள்பற்றி தன் பக்க நியாயமனைத்தையும் விளக்கினான்.

நான் கூறிய அனைத்தும் சத்தியம் ரத்தன்.தாதிக்கும் இவை அனைத்தும் தெரியும்.அவர்களுக்கு முதலிலிருந்தே என் வாழ்க்கை தான் பெரிதாகப்பட்டது.ஆனால் எனக்கோ என் மதமும் மக்களும் தான் முதன்மையாகப்பட்டனர்.

அனைத்தும் கனவென மறந்திட நினைத்திருந்தேன்.ஆனால் நீ வந்து அவளை உறவுமுறை கூறி அழைத்த பொழுது நிச்சயம் என் மனம் தடுமாற்றம் கொண்டது.அந்த சிறு நேரத்திலேயே அவள் உன்னுடன் வந்தபின் அவளை நீ அவளிடத்திற்கு அனுப்பி விடுவாயோ என்று தொடங்கி திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிடுவாயோ என்பது வரை யோசித்து விட்டேன்.

அவளில்லாத மூன்று நாட்கள் நிச்சயம் எனை பித்தனாக்கி விட்டன.அங்கு அவள் இருந்த போதும் தினமும் பார்த்துக் கொள்ளவில்லை எனினும் இங்கு தான் இருக்கிறாள் என்ற ஒரு திருப்தி இருந்தது.ஆனால் இப்போது அவளை காணும் வரையிலுமே மனம் ஒருவித வெறுமையில் நிரம்பிக் கிடந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.