(Reading time: 17 - 33 minutes)

என் வாழ்வின் இந்த நொடி வரை நடக்கும் அத்தனைக்கும் நான் மட்டுமே பொறுப்பு அது நன்மையாயினும் தீமையாயினும் என்னால் தாங்கிக் கொள்ள முடியும் என்ற காரணத்தினால் தான் ஈசன் என்னிடம் அதைச் சேர்க்கிறான்.

எனவே தாங்கள் வீணாய் எதை நினைத்தும் கவலை கொள்ளாதீர்கள்.இறுதியாய் தாங்கள் கூறியதுபடி எனக்கான மற்றுமொரு பிறந்தஅகம் இது. அதே நேரம் எனக்கான ஒரே ஒரு தமையன் தாங்கள் மட்டுமே!இதே அன்போடு இறுதி மூச்சு வரை இருக்க வேண்டும் என்பதே என் ஒரே அவா!”

என்றவளை ஆரத் தழுவிக் கொண்டான் ரத்தன் சிங்.மணமகளை அழைத்துச் செல்வதற்காக ரத்தனின் தாயோடு மற்ற பெண்களும் வந்திருக்க அவரின் பாதம் பணிந்து ஆசி பெற்றவள் அவர்களோடு மணமேடையை நோக்கிச் சென்றாள்.

இரஜபுத்திர முறைப்படியான சடங்குகள் நடைபெற்றிருக்க மணவறையில் அமர்ந்திருந்த நஸீம் தன்னை நோக்கி நடந்துவரும் அவனது கங்காவை இமைக்காமல் பார்த்திருந்தான்.

இரஜபுத்திர முறைப்படியே அவளை அலங்கரித்திருந்தனர்.மிகுந்த வேலைப்பாடுடைய திருமண உடையில் புடவைத் தலைப்பால் முகம் முழுவதும் மறைக்கப்பட்டவாறு கழுத்து மொத்தமுமாய் இந்துஸ்தான பாரம்பரிய மிக்க நகைகள்  அணிந்து விண்ணுலக தேவதையாகவே நடந்து வந்து கொண்டிருந்தாள்.

முகம் பார்க்கவில்லை எனினும் முதன்முறையாய் ஒரு பெண்ணிற்கான அனைத்து ஒப்பனைகளோடும் அவளைக் கண்டவனின் மனம் அத்தனை கலக்கங்களையும் கடந்து இலகுவானது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இருவருமாய் அக்னியை வலம்வந்து மங்கல நாணை அவள் கழுத்தில் பூட்டினான் நஸீம்.சிவகங்காவதியோ மனதிற்குள் தன் பெற்றோரின் நினைவில் உழன்று கொண்டிருந்தாள்.தாயும் தந்தையும் முன் நின்று நடத்த வேண்டிய திருமணம் இப்படி நடக்கிறதே என்று மனம் வருந்தினாள்.

அதன் பிறகு முகலாயர்களின் முறைப்படியான திருமணம் நடைப்பெற்றது.அனைத்தும் நல்லபடியாய் முடிந்து சிவகங்காவதி நஸீமோடு சேர்ந்து ரத்தனின் பெற்றோர்களிடம் ஆசிப் பெற்றாள்.ரத்தனிடமும் ஆசிப் பெற்றவள் எவ்வித உணர்ச்சியியும் இன்றி நின்றிருக்க நஸீமுமே கடமையாய் செய்த திருமணம் என்ற தோரணையிலேயே நின்றிருந்தான்.

அதன்பின்  மணமக்களுக்கான பிரத்யேக நேரத்திற்கான ஏற்பாடுகள் முடிந்து சிவகங்காவதி அறைக்குள் அமர வைக்கப்பட்டாள்.மனம் வெகுவாய் சோர்ந்திருந்தது.தாய் மடி தேடும் மழலையாய் பரிதவித்துக் கொண்டிருந்தது.

அனைத்தும் இவள் ஏற்கனவே அறிந்திருந்ததே.இருந்தும் நஸீமை இப்படி ஒரு நிலையில் திருமணம் செய்ய வேண்டியதிருக்கும் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.

அப்படி என்ன பெரிய பாவம் இழைத்துவிட்டேன் நான்,எனை பழிவாங்குவதற்காக ரத்தன் அண்ணாவை அடிபணிய செய்து அவசர அவசரமாய் இந்த திருமணம் தேவைதானா!அந்தஅளவு மன்னிக்க முடியாத பாவத்தையா நான் இவருக்கு செய்திருக்கிறேன்.மற்ற ஆடவர்களைப் போன்று இவர் இல்லை என்று நினைத்திருந்தேனே!

இப்போது எனை பழிவாங்குவதற்காக இந்த திருமணத்தைச் செய்தவர் நாளை அவரின் மனத்திற்குப் பிடித்தவளை காணும் போது அவளையும் திருமணம் செய்து கொள்வார் தானே! அப்படியென்றால் வெளிஉலகை பொருத்தமட்டில் நான் அவரது ஆசை நாயகி தான் இல்லையா!!”

இப்படியாய் தேவையற்ற பல சிந்தனைகளில் இருந்தவள் நஸீம் வந்ததையே கவனியாமல் அமர்ந்திருக்க உள்ளே வந்தவனோ பஞ்சு மெத்தையில் பாறையென இறுகி இருந்தவளைக் கண்டு மனம் வருந்தினான்.

அவள் கரத்தை தொடுவதற்காக தன் கரத்தை அவன் நீட்டிய நேரம் எங்கிருந்து அத்தனை ஆத்திரம் கொண்டாளோ தெரியவில்லை நிமிர்ந்து தீர்க்கமாய் அவனை ஒரு பார்வை பார்த்தவள்,

என் அனுமதியின்றி உங்கள் விரல் நுனி என் மீது பட்டாலும் அந்தச் சணமே என்னுயிரை நான் மாய்த்துக் கொள்வேன்.இது நான் வணங்கும் ஈசனின் மேல்ஆணை!!!”,என்றுரைக்க இதனை எதிர்பார்த்தவனாய் அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் இஷான் நஸீம்

தொடரும்...

Episode 10

Episode 12

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.