Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 03 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 03 - பிரேமா சுப்பையா

Ethir ethire neeyum naanum

ர பரப்பாய் இயங்கியது அவளின் விளம்பர நிறுவனம்.  எப்போதுமே சுறு சுறுப்பாய் இயங்க கூடிய ஆட்கள் அவர்கள்.

கேளிக்கைக்கு குறைவில்லாத இடம். வீக் எண்ட் பார்ட்டி உண்டு. ஆனால்  "நோ" சொல்ல வேண்டிய இடத்தில் "நோ" என்பதை உறுதியாய் தெரிவிக்கும் ஆற்றல் வாய்ந்தவளால் தனக்கென்று சில கோட்பாடுகளை வழிவகுத்து அதற்கேற்ப பொன்னியால்  மிளிர இயன்றது.

அனைவருக்கும் இவளின் மேல் தனி மரியாதை உண்டு. எல்லா இடங்களையும் போல இவளின் முன்னேற்றம் கண்டு இவளை எவ்வாறு மட்டம் தட்டலாம் என்று அலைந்த சிலரும் இருக்கத்தான் செய்தார்கள்.  ஆனால் அதை எல்லாம் அலட்சியப்படுத்தும் இவள் உண்மையாய் இவளின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு சொல்வோரின் கருத்துக்களுக்கு செவி சாய்ப்பாள்..

அப்படி செவி சாய்க்க கூடிய ஒருவன் தான் அமர்.

கண்மணியின் கனவில் வந்து அவரை பதை பதைத்த அதே அமர் ?!!

அமர் பொன்னியுடன் பணிபுரியும் அன்பான, அழகான மிக முக்கிய குறிப்பு கண்ணியமான ஆடவன். அவன் பார்வையில் இருக்கும் நேர்மையும் உண்மையும் ...அவன் கருத்துக்களை காதோடு நிறுத்தாமல் மனம் வரை எடுத்துச்செல்லும் அனுமதியை பொன்னியின் அறிவு கொடுத்திருந்தது.

அமர்…..!!!!! அவனை பற்றி சொல்லியே ஆக வேண்டும்! பணியிடத்தில்  அனாவசியமாக பேச விரும்பாதவன் ...உடன் பணிபுரிவோரிடம் மிகுந்த மரியாதை காட்ட கூடியவன்..திறமையை மனம் திறந்து பாராட்ட கூடியவன் .....தான் கற்க நேர்வதை எவரிடம் இருந்தும் எவ்வித தயக்கமும் இன்றி கற்றுக்கொள்ள கூடிய மனம் படைத்தவன் ..... ஆலோசனை கேட்டு வருவோருக்கு அக்கறையாக ஆலோசனை சொல்ல கூடியவன் ...சிக்கலுக்கு வெகு சுலபமான தீர்வை எடுத்து சொல்லக்கூடிய ஆற்றலை கொண்டவன்.

"பொன்ஸ் என்ன சொன்னாங்க உன் பேரன்ட்ஸ் ... வேர் தே ஹாப்பி?" என்று அந்த வடநாட்டு ரசகுல்லா    புன்னகைத்தபடி கேட்க

"ம்" என்று சொல்லும்போது மெலிதான வலி அவளுள்.  தன்னை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லும் தாயை நினைக்க லேசாய் வலித்தது அவளுக்கு. இருந்தும் வெளிக்காட்டி கொள்ளவில்லை அவள். அழகாய் வேலையை பற்றி பேசி பேச்சை மாற்றிவிட அமரும் அவளும் சேர்ந்து செய்ய வேண்டிய அடுத்த ப்ரொஜெக்ட் பற்றிய பேச்சுக்கள் அதற்கு பின் தொடர்ந்தன.

இருவரின் திறனை ஒருவருக்கொருவர் மெச்சிக்கொண்டபடி வேலையை தொடர  அவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய அந்த விளம்பர படம் சூப்பர் டூப்பர் ஹிட்..

அவளின் உழைப்பை பாராட்டி அவளது நிறுவனம் அவளுக்கு பதவி உயர்வு கொடுக்க அதைப்பற்றி ஆசையாய் அவள் தாயிடம் தெரிவிக்க அவள் தாயோ "அம்மா,… மாப்பிள்ளை பாரு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருந்தேன்னா என் பெத்த மனசு குளிர்ந்து போயிருக்கும் நீ என்னடான்னா ப்ரோமோஷன் கிடைச்சிருக்குன்னு  என் வயித்துல நெருப்பள்ளி கொட்டுற?" என்று சொல்லி வருத்தப்பட ..எங்காவது சென்று முட்டி கொள்ள வேண்டும் போல் தோன்றியது பொன்னிக்கு.

"டேய் அல்வா…. இனிமே உன் ஆத்தா கிட்ட என் வேலை சம்மந்தமா எதுவும் சொல்ல மாட்டேன் பார்த்துக்கோ” என்று உடன் பிறப்பை கடுப்படிக்க  செல்ல தங்கையின் கோபத்தை புரிந்து கொண்டவன்

"விடு பப்பு சொல்லு, எந்த விளம்பரத்துக்கு கிடைச்சது, நான் சொன்னேனே அதான ...பார்த்தியா விளம்பரத்துல கூட பேமிலி செண்டிமெண்ட் தான் ஒர்க் ஆகுது" என்று அவள் மனதை மாற்ற முயற்சிக்க

இப்போது அவனும் கூட பேச தொடங்கிவிட்டான்.."பப்பு நல்ல இடம்..வந்திருக்கு எனக்கும் கூட இந்த இடம் உனக்கு ஒத்து வரும்னு தோணுது மா..ஆனா என்று இழுக்க"

"நீயுமா அல்வா..? ஆக என்னை மூட்டை கட்டி அனுப்ப நீயும் ரெடி ? எனக்கு  முடிச்சுட்டு   தான் நீ மேரேஜ் செஞ்சுப்ப இல்ல? ஓகே நடத்துங்க நடத்துங்க ஆனா அல்வா ஒன்னு நியாபகம் இருக்கட்டும் நாளை பின்ன என்னை மேரேஜ் செஞ்சுக்கும் கூமுட்டை பஞ்சாயத்துக்கு உன்னை அடிக்கடி கூப்பிடும் பார்த்துக்கோ" என்று சொல்லியதிலேயே அவளின் சம்மதத்தையும் செல்வா எடுத்துக்கொள்ள "பப்பு திருமணத்திற்கு தயார்" என்று குடும்பத்தாரிடம் இவன் தெரிவித்து விட அங்கே அவளின் நிலையோ நகம் கடிக்கும் படி இருந்தது.

ஒரு நாள் சுற்றுலாவென மாமல்லபுரத்திற்கு நிறுவனம் அழைத்து செல்ல, சென்ற இடத்தில் அந்த அமர் இவளிடம் காதல் காவியம் பாடுவான் என எதிர்பார்த்தாளா அவள்?

"அமர் ...நீங்க ...??" திக்குகிறது வார்த்தைகள் அவளுக்கு.

“உன் அதிர்ச்சியே நீ என்ன மனநிலைல இருக்கன்னு எனக்கு புரியவைக்கிது பொன்ஸ் ஆனா என்னாலையும் இதை சொல்லாம இருக்க முடியல"

“உனக்கு இந்த பீல்டு ல பிரைட் பியூச்சர் இருக்கு. நான் உன் வளர்ச்சிக்கு உறுதுணையா இருக்க ஆசை படுறேன்” என்று அவன் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி அவளை தாக்க நினைக்க

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 03 - பிரேமா சுப்பையாAdharvJo 2019-05-12 20:15
:cool: epi prema ma'am :clap: :clap: indha abayam sangu udharadhai vidunga boss :D Aunty kanda kanavu nijam aga pogudha wow so sonpapudi akas rasagula will be BIL of Aluwa ena oru combination :dance: And Alawa bro oda love towards Ponn's is really cute :yes: waiting to see how ponn's family would react to this...

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 03 - பிரேமா சுப்பையாAbiMahesh 2019-05-10 21:46
Nice update & Kathai Mam! Alwa anna's pasam apdiyae goosebumps vara vaikuthu.. Nice Family but Amar ah accept pannuvangala?? Waiting for next update :thnkx: Mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 03 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-05-10 21:16
:clap: nice epi.pons amma,appa,anna enna solvaargal :Q: eatrukolvaargala? Waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top