(Reading time: 16 - 31 minutes)

கிடையாது..பார்த்து..பக்கு..”

ம்மா சரி சரி தெரியாம பேசிட்டேன்..என்னை வீட்டுரு..நாளைக்கு வரும்போது எனக்கு பிடிச்ச பால் பணியாரம் செஞ்சு தரியா?”

பிள்ளைத்தாச்சி பொண்ணு கேட்டுட்ட தராமா இருப்பேனா கண்டிப்பா எடுத்துட்டு வரேன்..வச்சுரவா..”

மாம்ஸ் ஒரு பத்து மாசத்துக்கு ஜீவி நிலைமை ஜாலி தான்..என்ன கேட்டாலும் சாப்பிட தருவாங்க போல..உங்களுக்கு கூட எதுவும் வேணும்னா சொல்லுங்க நான் கேட்டு வாங்கித் தரேன்.”

கடவுளே வயித்துக்குள்ள இருக்கும்போதே என் புள்ளையையும் இவளை மாதிரி சாப்பாடு ராமனா மாத்திருவா போலயே!”

ஓய்..உள்ளே இருக்குறது சாப்பாட்டு ராமியா இருந்தா என்ன பண்ணுவீங்க?”

அவள் கைகளை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டவனாய்,”எந்த குழந்தையா வேணாலும் இருக்கட்டும் ஆனா என் ஜீவிக்குட்டி மாதிரி யாருக்கும் கஷ்டம் கொடுக்கத் தெரியாதா சமத்து குழந்தையா இருந்தா போதும்.”

பார்ரா ஓவர் லவ்வாங்கிஸா இருக்கே!!!”

ம்ம் இதெல்லாம் ஒண்ணுமில்ல இனிமே தினமும் உனக்கு கிடைக்கப் போற கவனிப்பை மட்டும் பாரு ஜீவிக்குட்டி..”

ஆனா நிஜமாவே காலையிலே செக் பண்ணி பார்த்துட்டு பாசிட்டிவ்னு பார்த்தப்போ எப்படி இருந்தது தெரியுமா ஜெய்..ஒரு மாதிரி சந்தோஷம் பயம் எல்லாமுமா இருந்தது.எல்லாத்தையும் விட எந்த குழந்தையா இருந்தாலும் அது என் அப்பாவே குழந்தையா எனக்கு கிடைச்ச மாதிரி தான்னு தோணிச்சு.

அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணிருக்கேன் ஜெய்.வெளிக்காட்டிக்க மாட்டேன் அவ்வளவா ஆனாலும் ஒரு சின்ன குழந்தை அவங்க அப்பா கையை பிடிச்சுட்டு போகும் போதும் ஒரு 16-17 வயசு பொண்ணு அப்பாகூட வண்டில போகும்போதும் அவ்வளவு ஏன் எதாவது கல்யாணத்துக்கு போனா கன்னியாதானம் பண்ணும் போதும் என்னை அறியாம மனசுக்குள்ள அழுதுருக்கேன்.

அம்மா என்னை ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க தான்.அவங்க தான் என் உலகம் இருந்தாலும் பொண்ணுக்கு அப்பா தானே முதல் ஹீரோவா இருப்பார்.இப்போ கூட இந்த விஷயத்தை கேள்விப்பட்டா என் அப்பா தலைகால் புரியாம சந்தோஷப்படுவாரு இல்லனு தான் யோசிச்சேன்.”,எனும்போதே அவள் கண்கள் கலங்கியிருந்து.

ஜீவிம்மா!!என்னடா இது..”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.