(Reading time: 16 - 31 minutes)

நல்லா இருக்கு..ஜெயந்த் கல்யாணத்துக்கு அப்பறம் வீடு மறுபடியும் கலகலனு இருக்கு இன்னைக்கு.

உங்களுக்கு எல்லாம் எப்போ நேரம் கிடைக்குதோ கிளம்பி வந்துருங்க..வகை வகையா நான் சமைச்சு போட்டு அசத்திட்றேன்..”

சொல்லிட்டீங்கள இனிமே எப்போ மீட்க்கு ப்ளான் பண்ணாலும் இங்க தான் ஆன்ட்டி..”என்று ரினிஷா கூறிச் சிரித்தாள்.

அனைவருமாய் உண்டு முடித்தவுடன் ஆத்விக் அனைவருக்கும் முன் நின்று ஷான்யா கொண்டு வந்திருந்த பையை எடுத்து வருமாறு கூறினான்.

டேய் ஆத்வி புள்ள பிறந்த அப்பறம் தான் டா சீர் கேட்டேன்..இப்போவே கொண்டு வந்துட்டியா அம்புட்டு பாசக்கார பயபுள்ளையா டா நீ?”

ம்ம்ம் ஆசை தான்..அதெல்லாம் என் பொண்ணை உன் வீட்டு மருமகளா ஏத்துக்கோ நாங்க குடுக்குற மிகப் பெரிய சீர் அதுதான்..இல்லையா செல்லம்?”

ஐயோ கருமம் கருமம்..எல்லாரும் சிரிக்குறாங்க உங்களையெல்லாம்..”

ஓகோ அப்பா நாளைக்கே நீங்க சம்மந்தி ஆய்டூவீங்க நாங்க மட்டும் வேடிக்கை பார்ப்போமா..ரேஷ்ஷும் நானும் என்ன தக்காளித் தொக்கா??”

சபாஷ் சரியானப் போட்டி!!”,ஜீவிகா கவுண்ட்டர் கொடுக்க மீண்டும் சிரிப்பு சத்தம் வீட்டை நிரப்பியது.

சரி சரி சொல்ல வந்ததை பேச விடுங்க..இதுல எங்க கல்யாணத்துக்காக எல்லாருக்கும் எடுத்த ட்ரெஸ் இருக்கு குடும்பத்தோட எல்லாரும் கண்டிப்பா வந்துரணும்.”

டேய் அரசியல்ல சேரப் போறியா என்ன இவ்ளோ லென்தா பேசுற..நாங்க இல்லாம தாலி கட்டிருவியா நீ?”

அம்மா தாயே ஆளை விடு இந்தா இதை வாங்கிக்கோ..”,என்றவன் அவரவருக்கான பைகளை கையில் கொடுக்க அனைவரும் அதைப் பிரித்துப் பார்த்தனர்.ரேஷ்ஷிற்கும் ஜெயந்திற்கும் ஒரே மாதிரியான சட்டையும் ரினிஷாவிற்கும் ஜீவிகாவிற்கும் ஒரே மாதிரியான புடவையும் இருந்தது.

ஹே வாவ் சூப்பர்..கல்யாணத்துல கலக்குறோம்..”,என்று ரினிஷா ஆர்ப்பரிக்க அருகிலிருநேத ஜீவிகா அவளை லேசாய் சுரண்டினாள்.

என்ன ஜீ?”

இல்லை நீங்க ஒரு ஹீரோயின்னு நியாபகம் இருக்கா..”

யோவ் போங்கயா ஹீரோயினாவது எதாவது..இப்போ எல்லாம் நான் ரொம்ப ஜாலியா இருக்கேன்.இது எனக்கு பிடிச்சுருக்கு..கண்டிப்பா கல்யாணத்துல செமயா என்ஜாய் பண்ண

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.