(Reading time: 16 - 31 minutes)

பண்ணுங்க சொல்லிட்டேன்..”

நாளுக்கு நாள் உன் அலம்பல தாங்கல ஜீவிம்மா..ஒழுங்கா படுத்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..”,என்றவன் கடைக்குச் சென்று வருவதாய் கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தவன் வாசலில் புதிதாய் இருந்த பைக்கைப் பார்த்து குழம்பியவனாய் உள்ளே செல்ல அங்கு ஆத்விக் ரேஷ்வா ரினிஷாவோடு ஷான்யாவும் அமர்ந்திருந்தாள்.

ஹே வாங்க வாங்க எப்போ வந்தீங்க எல்லாரும்?”

நாங்க வந்தது இருக்கட்டும் முதல்ல கையை கொடுங்க வாழ்த்துக்கள்..”,என்று ஆத்விக்கும் ரேஷும் கை குலுக்கினர்.

தேங்க் யூ..தேங்க் யூ..ரேஷ் ரினி எப்படி வந்தீங்க கார் கூட இல்லையே வெளில..”

மச்சான் இவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு ஒரு முடிவோட வந்துருக்காங்க..நான் கூட சொன்னேன் ஒண்ணும் பிரச்னையில்ல ஜீ எதுவும் சொல்லமாட்டானு..ஆனாலும் வந்தே தீருவோம்னு சொல்லி ரினி என்னனா முகமூடி கொள்ளைகாரன் மாதிரி முகத்தை எல்லாம் மறைச்சு பக்கா ப்ளான் பண்ணி ஷான் கூட ஆட்டோல வந்தாங்க..

இவங்க ரெண்டு பேரும் வர்றதுக்குள்ள எனக்கு பீபீ எகிறிடுச்சு..அது பத்தாதுனு ஹீரோ சார் வேற என்னோட பைக்ல வந்தார்.ஒரு ஒரு சிக்னல்ல வண்டியை நிறுத்தும் போதும் பக் பக்னு இருந்தது.

என்ன ரேஷ் இது??”

மச்சான் இதுவும் ஒரு மாதிரி நல்லாதான் இருந்தது எந்த தொந்தரவும் இல்லாம சென்னை சிட்டி ட்ராபிக்ல பைக்ல சான்ஸேயில்ல தெரியுமா..அதைவிட ரினியை கேளுங்க ஆட்டோ எக்ஸ்பீரியன்ஸை சொல்லி சொல்லி என்ஜாய் பண்ணிட்டு இருக்கா..”

ஆக மொத்தம் என் பேரைச் சொல்லி இரண்டு பேரும் உங்க ஆசையெல்லாம் நிறைவேத்திட்டு இருக்கீங்க..ம்ம்..”

சரி சரி எல்லாரும் வாங்க சாப்பிடலாம்..”,என்றவாறு ஜெயந்தின் தாய் ஹாலிற்கு வர அனைவருமாய் கீழே வட்டமாய் அமர்ந்து சாப்பிடலாம் என்று கூறி அத்தனை பதார்த்தங்களையும் நடுவில் வைத்துவிட்டு எத்தனை கூறியும் கேட்காமல் ஜெய்ந்த் தாய் தந்தையையும் தங்களோடு அமர்த்திக் கொண்டு அவரவருக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தனர்.

எங்க சொந்தபந்தமெல்லாம் வெளியூர்ல இருக்காங்க அதனால வந்தாலும் எல்லாரும் ஒரே நேரத்துல எல்லாம் வர முடியாது.இத்தனை பேரா உக்காந்து பேசி சிரிச்சு சாப்டுறதும் எவ்ளோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.