(Reading time: 16 - 31 minutes)

என் கூட இருக்குற வரை எத்தனை பெரிய நிலைமையையும் கண்டிப்பா சமாளிப்பேன்.”

ஆஹா இவ்ளோ பெரிய ஐஸை தூக்கி வச்சுட்டீங்களே..இதுக்கு எதாவது கிப்ட் குடுத்தே ஆகணுமே..”,என்றவள் நொடியும் யோசிக்காது அவனது கன்னத்தில் அழுந்த இதழ்பதித்திருந்தாள்.

நாட்கள் குதிரை வேகத்தில் நகர ஆத்விக்கின் திருமண நாளும் வந்தது.முந்தைய நாள் மாலை ரிசெப்ஷனும் மறுநாள் கல்யாணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முந்தைய நாள் மதியமே ஜீவிகாவும் ஜெயந்தும் வந்துவிட ஜீவிகாவை ஷான்யாவோடு அறையில் ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு ஜெயந்த் வேலைகளை கவனிக்கச் சென்றான்.

ஹே ஷான் மெஹந்தி சூப்பரா இருக்கு..உன் ஆளை நினைச்சுட்டே இருந்தியா இப்படி சிவந்திருக்கு..”

அக்கா!!”

ஹா சரி சரி அப்பறம் சொல்லு கல்யாண பொண்ணு ஏதோ யோசனையிலே இருக்குற மாதிரி இருக்கு என்னாச்சு??”

அது..அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா..”

என்கிட்ட சொல்ல வேண்டாம்னா விடு பரவால்ல..ஆனா யார்கிட்டேயாவது ஷேர் பண்ணிக்கோ முகத்துல ஏதோ ஒண்ணு நல்லாவே இல்ல..”,என்றவள் சாதாரணமாய் கூறிவிட ஷான்யா சட்டென அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

என்ன டா என்னாச்சு?”

அக்கா ஏன்னு தெரில ஒரு மாதிரி மனசு கஷ்டமா இருக்கு..அம்மா அப்பாவை விட்டு ஏதோ ரொம்ப தூரம் வந்தமாதிரி.எனக்குத் தெரியும் நான் யோசிக்குறதெல்லாம் பைத்தியகாரத்தனம்னு இருந்தாலும்..”

அடடா இது எல்லாருக்கும் வர்ற பயம் தான் ஷான்..நீயாவது பரவால்ல நானெல்லாம் ஆத்விக்கு கால் பண்ணி மண்டபத்துல இருந்து ஓடிப்போக போறேன்னு சொன்னேன்.ரேஷ்ஷும் அவனும் கேவலமா திட்டினாங்க..

கொஞ்ச நாள்ல எல்லாம் சரி ஆய்டும் டா..அதுவும் ஆத்விக் இருக்கும்போது உனக்கு என்ன கவலை சொல்லு..அவன் உன்னை ரொம்பவே லவ் பண்றான் தான் ஆனா அதுக்கும் மேல எல்லாருடைய உணர்வையும் மதிச்சு நடப்பான்.

உன் ஐஏஎஸ் கனவை நிறைவேத்தினதுலயே தெரியலையா அவன் எப்படிபட்டவன்னு.பொதுவா புருஷன்னா அப்படி இப்படினு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கலாம்.ஆனா ஆத்வி ரேஷ் என் மாம்ஸ் எல்லாம் அதிலிருந்து விதிவிலக்கு.

அவனுக்கு நீயும் அவன் குடும்பமும் தான் உலகம்.குடும்பம்னு சொல்றதுல இப்போ உன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.