(Reading time: 16 - 31 minutes)

அவசரமாய் கண்களைத் துடைத்தவள்,”இல்ல ஜெய் இதெல்லாம் எப்பவோ மனசுல இருந்தது.உண்மையை சொல்லவா நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் இத்தனை மாசத்துல ஒரு தடவை கூட எனக்கு அப்படி ஒரு நினைப்பு வந்ததேயில்ல.மாமாவை நான் என் அப்பாவா தான் நினைக்குறேன்.

அவருமே டெய்லி என்கிட்ட குட்மார்னிங் சொல்றதுல இருந்து என் பைக்கை தினமும் சரிபார்த்து வைக்குற வரை ஒண்ணும் ஒண்ணும் உண்மையான அக்கறையோடயும் அன்போடயும் செய்றார்.

அதைவிட நீங்க எனக்கு எப்பவுமே ஒரு ப்ரெண்ட்ங்கிற ஸ்டேட்ல தான் இருந்துருக்கீங்க.எப்பவுமே நான் புருஷன் நீ பொண்டாட்டி ஒரு படி இறங்கித் தான் இருக்கணும்னு நீங்க நினைச்சாதா கூட எனக்குத் தெரில.

அத்தையை பத்தி கேட்கவே வேண்டாம் இப்படி ஒரு அழகான குடும்பத்துக்கு என்னால கொடுக்க முடியுற மிகப் பெரிய சந்தோஷம் இந்த குழந்தை மட்டும் தான்னு எப்பவோ முடிவு பண்ணிருந்தேன்.

இன்னைக்கு அது நிஜமா நடந்துருக்கும்போது ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்குங்க..லவ் யூ சோ மச்…”,என்றவள் தன்னவனோடு ஒன்றிக் கொண்டாள்.

மறுநாள் காலையிலேயே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துவிட்டு இருவருமாய் வீட்டிற்கு வந்தனர்.

ஜீவிம்மா மத்தவங்ககிட்ட சொல்ல வேணாமா நான் க்ரூப்ல மெசெஜ் போட்றேன்.நேத்து தான் மீட் பண்ணிருக்கோம் திரும்ப எல்லாரும் பாக்குறது கஷ்டம் இல்ல..”

ம்ம் சொல்லிடலாம் மாம்ஸ் ஆனா இருங்க எதாவது வித்தியாமா யோசிப்போம்..”

அடங்க மாட்டியா நீ..ஏன் ஜீ..”

இதெல்லாம் ஒரு என்டர்டெயின்மெண்ட் தான் மாம்ஸ்..ஹான் ஐடியா வாங்க வாங்க உக்காருங்க..”,என்றவள் தனது மொபைலை எடுத்து வாட்ஸ்அப் க்ரூப்பில் மெசெஜ் அனுப்பினாள்.

டேய் வீணா போனவனே இருக்கியா?”

யோவ் ஹீரோ எங்கிருந்தாலும் உடனே வரவும்.”

ஜீவி அவங்க வருங்கால பொண்டாட்டிங்களும் அந்த க்ரூப்ல இருக்காங்கனு மறந்துறாத..”

நீங்க வேற அவங்க ரெண்டு பேரும் தங்களால முடியாததை நான் பண்றனேனு சந்தோஷப்படுவாங்க..”,என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ரினிஷாவிடம் இருந்து தில் வந்திருந்தது.

என்ன ஜி என் ஆளை இத்தனை மரியாதையோட கூப்டுறீங்க என்ன விஷயம்..எங்களுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.