(Reading time: 12 - 23 minutes)
Unnodu naanirukkum mani thuligal
Unnodu naanirukkum mani thuligal

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 22 - ஸ்ரீ

அன்பென்ற வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்

அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்

ஆகாயம் தாண்ட சொல்லுதடி காதல் முத்தம்

அதனால்தான் நெஞ்சம் கேட்குதடி வெற்றிச் சத்தம்

என் வாழ்க்கையே மாற்றுதே முத்தமே முத்தமே

முத்தம்தா முத்தம் தா கண்மணி ஓ

காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே

உன் முத்தத்தால் அந்த மேகம் ஒரு மின்சாரம் ஆகும்

 

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே

ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே

 

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே

அணலிருக்கு குளிருக்கு எல்லாமே உன்னாலே

நாட்கள் அதன்போக்கில் ஓடிக் கொண்டிருக்க ரினிஷாவின் அண்ணனின் முடிவிலும் எந்தவித மாற்றமும் வந்திருக்கவில்லை.இருந்தும் பொறுமையாய் இருப்பதே நல்லது என ரினிஷாவும் ரேஷ்வாவும் அமைதியாகவே இருந்தனர்.

இதற்கிடையில் ரேஷ்வா பல படங்களுக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தான்.அதிலும் ஒன்று அவனும் ரினிஷாவுமே நடிக்கும் வாய்ப்பு அமைந்திருந்தது.

அதற்கும் ரினிஷா தரப்பில் அவள் அண்ணன் முடியாது என்று வாக்குவாதம் செய்ய நல்ல கதை நல்ல இயக்குனர் என ஏதேதோ கூறி ஒருவழியாய் சம்மதிக்க வைத்திருந்தாள்.

இங்கு ஷான்யாவிற்குத் தேர்வு முடிவுகள் வந்து இன்னும் பத்து தினங்களில் பதவியில் பொறுப்பேற்கவிருக்கிறாள்.ஜீவிகாவிற்கு ஆறு மாதங்கள் முடிவுபெரும் நிலையில் ஓரளவு வயிறு பெரிதாக ஆரம்பித்திருந்தது.ஜெயந்த் அவளை வேலைக்குப் போக வேண்டாம் என்று கூறிவிட அதன்படி வீட்டிலேயே அவளின் அராஜகங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

டேய் ஆத்வி உன் மச்சான் ரொம்ப பண்றாரு டா குனியாதே நிமிராதேனு பாடா படுத்துறாரு டா..”

ம்ம் இன்னும் ஒரு மூணுமாசத்துக்கு அடக்க ஒடுக்கமா உக்காரு ஜி..என் மருமகப் புள்ளை வெளியிலே வந்தப்பறம் உன்னை எவன் கேள்வி கேட்கப் போறான்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.