உனக்கு சீமந்தம் பண்ணிட்டு தான் கல்யாணம் பண்ணணும் போல..”
“ஐயோ இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போச்சு..இனி இதை சொல்லியே என்னை கொல்லுவியே..உன் நண்பனுக்கு இருக்குற லொள்ளு கொஞ்சம் இல்ல ரொம்பவே அதிகம்..”
“என்ன வேணா சொல்லு ரினிகுட்டி..யூ ஆர் சோ லக்கி..ரேஷ் எப்பவுமே உன்னை ஏதோ ராணியை பார்க்குற மாதிரி பிரமிப்பு குறையாம தான் பார்க்குறார்.ஸ்டே ப்ளஸ்ட் இரண்டு பேரும் இப்டியே வாழ்க்கை பூரா சந்தோஷமா இருங்க.
உன் நொண்ணனை கொஞ்சம் காலாகாலத்துல சம்மதம் சொல்ல சொல்லும்மா..நாங்க எப்பவும் இதே மாதிரி பொறுமையா எல்லாம் இருக்க மாட்டோம் சொல்லிட்டேன்.”
“இப்போ எதுக்கு நீ எங்க அண்ணனைத் திட்ற..அவருக்கு தங்கச்சி வாழ்க்கை மேல எவ்ளோ அக்கறை இருக்கு..”
“வேணாம் எதாவது சொல்லிருவேன்..வேண்டா வெறுப்பா தங்கச்சியை ஹீரோயின் ஆக்கி படத்துக்கு காண்டாமிருகம்னு பேரு வச்ச கதையா இருக்கு..தங்கச்சி ஹீரோயினா இருக்கலாம் தங்கச்சி புருஷன் ஹீரோவா இருக்க கூடாதா என்னங்கடா உங்க நியாயம்..”
“சரி சரி நோ டென்ஷன்..நீ குட்டி ஜீவியை பெத்து எடுத்து உடம்பை தேத்திட்டு வருவியாம் எங்க அண்ணனை கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வைப்பியாம் ஓகே வா.”
“நல்லா கண்ணை கண்ணை உருட்டி பேசி சமாளிச்சுரு..இருந்தாலும் உன் குடும்பத்துக்கே ஒரு நாள் இருக்கு டீ ரினி செல்லம்..”,எனும்போதே அவளை சபைக்கு அழைக்க அப்படடியே பேச்சை நிறுத்தியவள் அடக்க ஒடுக்கமாய் சென்று ஹாலில் போடப்பட்டிருந்த பெரிய நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.
நல்லபடியாய் வளைகாப்பு முடிந்து கை நிறைய வளையல்களும் முகம் முழுக்க சந்தனமுமாய் பார்ப்பதற்கே அத்தனை அழகாய் இருந்தாள் ஜீவிகா.தாய்மையின் அழகே தனி எனுமளவிற்கு அவள் மாறியிருந்தாள்.ஜெயந்த்தின் விழிகள் அவ்வப்போது ஜீவிகாவையே தழுவி கொண்டிருக்க சட்டென அவனைக் கண்டவள் பிறரறியாமல் கண்ணடித்து வைக்க ஜெயந்த் அடுத்த நொடி அங்கிருந்து ஓடியிருந்தான்.
அடுத்த மூன்று மாத காலங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்திருக்க ஜீவிகா அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்திருந்தாள்.ஆத்விக்கும் ஷான்யாவும் கூட நல்ல செய்தியோடு குட்டி ஜீவிகாவைப் பார்த்து வந்தனர்.
ஜெயந்தையோ கையில் பிடிக்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.தன் இளவரசியைப் பார்த்து பார்த்து பூரித்துப் போனான்.அது மட்டுமன்றி அவள் அப்படியே அச்சு அசல் ஜெயந்தின்ஜாடையில் இருக்க அது ஒன்றே போதுமாய் இருந்தது அவளை தலையில் வை.து.