(Reading time: 12 - 23 minutes)
Unnodu naanirukkum mani thuligal
Unnodu naanirukkum mani thuligal

பரவால்ல மாமா கீழே விழுந்து அடிபட்ற போகுது..நடந்தே வாங்க மாமா..”

ஐயோ இப்படியே நீ மொக்கை காமெடி போட்டு நம்ம புள்ளையும் அப்படியே வரப்போகுது..கடவுளே காப்பாத்து..”,என்றவன் மீண்டும் வாங்கிக் கட்ட மனதில்லாமல் போனை கட் செய்துவிட்டு வேலையைப் பார்க்கச் சென்றான்.

அடுத்து வந்த சில தினங்களில் ஜீவிகாவின் வளைகாப்பு விழாவிற்கு நண்பர்கள் கூடியிருந்தனர்.வெகு முக்கிய விருந்தினர்கள் மட்டுமே என்பதால் வீட்டிலேயே வைத்து செய்யலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.

ரினிஷா ஜீவிகாவோடு அறையிலேயே இருக்க ரேஷ்வா ஆத்வியோடு சேர்ந்து சிறு சிறு உதவிகள் செய்து கொண்டிருந்தான்.

இந்த அடக்க ஒடுக்கமெல்லாம் ஷான் கல்யாணத்துல இருந்துருக்கணும்..இல்ல ஷான் குட்டி..”

ஜீ வேணாம்..நானே என் ஆள் பக்கத்துல இருந்தும் பார்க்க முடியலையேங்கிற கடுப்பில இருக்கேன்..வீணா வந்து மாட்டின சட்னி தான் சொல்லிட்டேன்..”

உண்மை பல நேரங்களில் சுடும் டா ரினி செல்லம்..”

ம்ம் சுட்டா போய் மருந்து போட்டுக்குவேன்..நீ ஒண்ணும் கவலைப்படாத..”

அச்சோ பாரேன் எம்புட்டு ஃபீலிங்க்ஸ்னு..இரு நம்ம ஹீரோ சாரை உள்ளே கூப்பிடுவோம்..”,என்று கத்தப் போனவளை வேகமாய் வந்து வாயை மூடினாள் ரினிஷா..

அம்மா தாயே வாயை மூடு உன் நண்பன் அம்பூட்டு நல்லவரெல்லாம் கிடையாது..வர வர ஓவர் ரொமண்டிக் ஹீரோவா மாறிட்டு இருக்கார்..”

ஆஹான்..நீங்க அப்படியே பச்சை மண்ணு அவரு ரொமான்ஸ் பண்ணும் போது கண்ணை மூடிகிட்டு நிப்பீங்களாக்கும்..”

ஐயோ கருமம் கருமம் ரெண்டு பேரும் ஏன் இப்படி பண்றீங்க..”

ரினிம்மா இவ என்னோட கொஞ்ச நஞ்ச நம்பிக்கைலயும் ஒரு லாரி மண் அள்ளி போட்டு மூடிட்டா..”

நானா நான் என்ன பண்ணேன்?”

ம்ம் நாங்க பேசுறதுக்கே இந்த ரியாக்ஷன் குடு.தா..என் நண்பன் ஆத்வி கடைசி வரை கன்னிப் பையனா தான் இருப்பான் போலேயே!”

ரினிஷா வயிறுகுலுங்கச் சிரித்துக் கொண்டிருக்க ஷான்யா ஜீவிகாவை விளையாட்டாய் கையில் அடித்துக் கொண்டிருந்தாள்.அந்த நேரம் ரேஷ்வா கையில் ஜுஸோடு உள்ளே நுழைய இப்போது சிரிக்கும் முறை ஷான்யாவுக்கும் ஜீவிகாவிற்குமானது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.