(Reading time: 12 - 23 minutes)
Unnodu naanirukkum mani thuligal
Unnodu naanirukkum mani thuligal

அடப்பாவி டேய் நீயுமா..ம்ம் ஆக மொத்தம் புள்ளையை கண்ல காட்டினப்பறம் என்னை யாருனு கேக்காம இருந்தா சரி..”

வாய்ப்புகள் இருக்கு ஜி..”

உன் மூஞ்சி..ஆமா ஷான் எப்போ ஜாய்ன் பண்ண போறா?”

ம்ம் இன்னும் பத்து நாள்ல ஜாய்ன் பண்றா நல்ல வேளை சென்னை போஸ்டிங்கே கிடைச்சுருச்சு..”

அப்போ அடுத்து எனக்கு மருமக புள்ளை சீக்கிரமே தயார் ஆய்டும்னு சொல்லு..”

ம்ம் அதெல்லாம் டைம் இருக்கு..பர்ஸ்ட் அவ வேலைல கொஞ்சம் செட்டில் ஆகட்டும்..”

டேய் ஆத்வி உன் முன்னாடி கண்ணாடி இருக்கு?”

ம்ம் ஆமா ரூம்ல தான் இருக்கேன் என்னாச்சு?”

ம்ம் அதுல உன் மூஞ்சியைப் பார்த்து நீயே துப்பிக்கோ..”

அடியேய் உன்னை கொல்ல போறேன் பாரு..”

ஹா ஹா சரி சரி ஆத்வி பையா கோபப்படக்கூடாது..கலெக்டர் அம்மாவை விசாரிச்சேன்னு சொல்லு அடுத்த மாசம் சீமந்தம் டா மச்சான் இன்வைட் பண்ண வருவாரு குடும்பத்தோட வந்து சேரு..”

ஜும் ததா..இதெல்லாம் நீ சொல்லவே வேண்டாம்..முதால் ஆள் நான் தான்..”

நல்லா ஐஸ் வைக்குற டா..நீ பொழச்சுக்குவ..”,என்றவள் போனை வைத்துவிட்டு எழ நினைக்க ஜெயந்த் அவளை அழைத்திருந்தான்.

மாம்ஸ்..ஜுஸ் சாப்ட்டேன். கொஞ்ச நேரம் தூங்கினேன்.வாக்கிங் போகப் போறேன்.தட தடனு நடக்காம பார்த்து தரைக்கு வலிக்காம பக்குவமா நடக்குறேன்.எல்லாத்தையும் விட முக்கியமா உங்க புள்ளையோட நிறைய பேசுறேன்.அவ்வளவு தான?”

ஜீவி கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோயேன்..எவ்ளோ டயர்டா இருந்தாலும் இந்த வாய் மட்டும் குறையுதானு பாரு.என் புள்ளை உன்கிட்ட மாட்டிகிட்டு படாதபாடு படுது டீ..”

ஓகோ அவ்ளோ கவலைப்பட்டா எடுத்து உங்க வயித்துக்குள்ள வச்சு பத்திரமா பாத்துக்க வேண்டியது தான..நானா வேண்டாங்குறேன்.”

ம்ம் அந்த ஒரு விஷயத்தை வச்சு தான ஆண்வர்க்கத்தையே படாதபாடு படுத்திட்டு இருக்கீங்க..”

என்னது??”

ஹி ஹி சும்மா சும்மா ஜீவிக்குட்டி..நீ ரெஸ்ட் எடுப்பியாம்..நைட் மாமா சீக்கிரம் ஓடி வந்துருவேனாம்..”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.