(Reading time: 16 - 32 minutes)
vellai pookkal ithayam engum malaruthe
vellai pookkal ithayam engum malargave

பாருப்பா!"  என்று அவர்  சொல்லி முடிக்கும் முன்பே பிரபஞ்சன் அங்கு சென்றிருந்தான். முழங்காலிட்டபடி அழுது கொண்டிருந்தாள்

 பிரசன்னலீலா.   அவள் அப்படி அமர்ந்திருந்த  காட்சி ஏதோ ஒரு வகையில் அவனை பாதித்ததோ ? அது அவனுக்குத்தான் தெரியும்!

" ஓய் பொம்மாயி!!"  என்றான்  பிரபஞ்சன்அவன் குரல் நன்கு கேட்டும் சிறிதும் அசைவின்றி அமர்ந்திருந்தாள் பிரசன்னலீலாஅவனும் சற்றும் தளராமல் " பொம்மாயி பொம்மாயீஎன்று குரலை மாற்றி மாற்றி அழைத்து பார்த்தான்அப்போதும் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை! அவளை தொட்டு எழுப்ப விரும்பவில்லை அவன்அதனால் அருகில் இருந்த குடையை  எடுத்து விரித்து அவளை  மழையிலிருந்து நனையாமல் தடுத்தான்சிவந்த விழிகளுடன் அவனை ஏறிட்டாள் பிரசன்னலீலா.

 " என்னம்மா நம்ம வீட்டில பாத்ரூம் எங்கே இருக்குன்னு தெரியலயா  உனக்குஇப்படி மழையில் நனைஞ்சு குளிச்சிட்டு இருக்க?" என்று கிண்டலாக கேட்டான் பிரபஞ்சன்அவனது நக்கலான கேள்வி அவளை இன்னமும் கோபப்படுத்தியது. அதனால்  பதில் ஏதும்  கூறாமல் அருகில் கிடந்த காலி பாட்டில்களை காட்டினாள்

"இது நீங்க பண்ண வேலை தானே? அப்போ நைட்டு  கண்ணாடி பாட்டில் உடைச்சது  யாருனு கேட்டப்போ   பேய் பிசாசுனு  கதை சொல்லி என்னை ஏமாத்திட்டீங்க தானேஉங்க மூணு பேருக்கும்  என்ன தான் பிரச்சனைஎன்னை கடத்திட்டு  வந்தீங்கஎன் கல்யாணத்தை நிறுத்திட்டீங்கநல்லவங்க  மாதிரி நடிச்சு  தங்கவும்  வச்சுட்டுஇப்படி பயமுறுத்தி  பாக்குறிங்கஎன்னை  பைத்தியமா மாத்த  ஏதாவது திட்டம் தீட்டுறீங்களா ? என்று ஒரே மூச்சாக பொரிந்தாள் .

 அவளது கேள்வி எரிச்சலை  மூட்டினாலும் தங்கள் மீதும் தவறு இருக்கிறது என்று உணர்ந்த பிரபஞ்சன் " மொதல்ல நீ எந்திரி .. இப்போதான் கடலில் முங்கி  எழுந்த.. இப்போ மழையில் நனைஞ்சிட்டு  இருக்க..கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்காஉன் அப்பா அம்மாவுக்கு யார் பதில் சொல்றது ? எங்களுக்காக இல்லைனாலும் உனக்காக நீ உன்னை பார்த்துக்கிட்டு தானே ஆகணும் பொம்மாயிஎந்திரிச்சு வா.. உள்ளே போயி  பேசலாம்என்றான்.

அவன் வார்த்தையை மறுத்துப் பேச தான் நினைத்தாள்  பிரசன்னலீலாஆனால் குளிரும், குளிரில் நடுங்கும் உடலும் அவளது பிடிவாதத்திற்கு ஒத்துழைக்கவில்லைஅவனது   கையை பிடித்து எழ  விரும்பாமல் தட்டுத்தடுமாறி ஒருவழியாக எழுந்து நின்று தத்தித் தத்தி நடந்து வந்தாள். அவள் நடந்து வந்த கோலத்தை பார்க்க அவனுக்கு சிரிப்புத்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.