(Reading time: 16 - 32 minutes)
vellai pookkal ithayam engum malaruthe
vellai pookkal ithayam engum malargave

வந்தது.  எனினும் சிரித்து  அந்த கோபத்தை அதிகப்படுத்துவானேன் ? என்று அமைதியாக இருந்தான் பிரபா .

"முதல்ல போய் டிரஸ் மாத்திட்டு வா..  நான் எங்கேயும் ஓடிப் போகமாட்டேன் .. எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்றேன்.. காபி போட்டு வைக்கிறேன்.. சீக்கிரமா வாஎன்றவன்  தானும்  மழையில் நனைந்து விட்டதால்  உடைமாற்ற சென்றான்ஆவி பறக்கும் காபி  லீலாவை  வரவேற்றதுகுளிருக்கு இதமாக அவள் தொண்டைக்குள் இறங்கியது அந்த காபி .

" உனக்கு என்ன கேட்கணுமா , இப்போ கேளு " என்றான் பிரபஞ்சன் .

 "  இந்த கண்ணாடி எல்லாம் உடைச்சது  யாருஅப்போ இன்னைக்கு காலையில நீங்க சொன்னது எல்லாமே பொய் தானே? ஏற்கனவே எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லை ! அப்படி இருக்கிற பட்சத்தில் இன்னமும் பொய் சொன்னா என்ன அர்த்தம் ? " என்று உறுத்து விழித்து   கேட்டாள் பிரசன்னலீலா.

" உன் கேள்வி நியாயமானதுதான்..  முதல்ல நடந்ததுக்கு நான் உன்கிட்ட சாரி கேட்கிறேன்.. மன்னிச்சுடு ..  ஆனா உன்னை ஏமாத்துறது எங்கள் நோக்கம் கிடையாதுஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்க..  நாங்க உனக்கு  புதுசா வந்தவங்க..  அதே மாதிரி நீயும் எங்களுக்கு புது பொண்ணு..  அறிமுகமில்லாதவ! எங்கள பத்தின  எல்லா விஷயமும்உன்கிட்ட  பகிர்ந்துக்க முடியாது..  அதற்கு அடிப்படை நம்பிக்கை ஆச்சும்  நமக்குள்ள  இருக்கணும்அட்லீஸ்ட் ஒரு பரஸ்பர நட்பாவது இருக்கணும்..  அது  வளர்ற வரைக்கும் சில விஷயங்களை  நேரடியாக சொல்ல முடியாத சூழ்நிலையில் நாங்க இருக்கோம்இது ஒரு மொக்கையான ஐடியானு  நான் அப்பவே கார்முகிலன் கிட்ட சொன்னேன்அந்த எருமை தான் உன்னை திசை திருப்ப இப்படி பாட்டில் உடைக்கிற  ஐடியா சொன்னான் " - பிரபா

" அவன் சொல்லும்போதே, இது  சொதப்பும்னு  எனக்கு தெரியும்அதே மாதிரி சொத்தையா போச்சு ..  ப்ளீஸ் கோபப்படாதே! நைட்டு எங்களுக்கு எப்பவுமே கொஞ்சம் பிரைவசி தேவைப்படும்..  பயப்படாதே நாங்க தண்ணி தம்மு அடிக்க மாட்டோம்வேறு எந்த தப்பும் பண்ணல.. ஆனா எங்களுக்கான நேரம் அது ..  அந்த நேரத்துக்குள்ள நீ வர்றதோ பேசுவதோ  இப்போதைக்கு சரியா இருக்காது!   ஒருவேளை எங்க மூணு பேர்ல ஒருத்தர் தானாகவே மனசு மாறி உன்கிட்ட எல்லாத்தையும் சொன்னா, அப்போ நீயும் எங்ககூட  சேர்ந்துக்கலாம்! அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு!" .  ஏனோ அவனது இறைஞ்சும் குரலும்நிதானமான  முகமும் அவளை எதிர்த்து பேச முடியாமல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.