(Reading time: 16 - 32 minutes)
vellai pookkal ithayam engum malaruthe
vellai pookkal ithayam engum malargave

சிறுபிள்ளைத்தனமான சண்டை தான்!  அதை எப்போ வேணும்னாலும்  கடந்து வர முடியும் ! ஆனால் வாய்ப்புகளை  அப்படி கடந்து போக கூடாது ! "

".."

"வாழ்க்கையில நாம சந்திக்கிற ஒவ்வொருத்தரும் , அந்த சந்திப்பு சில நொடிகளாக  இருந்தாலும் கூட, அதுல நமக்கு  எதையாவது கற்றுக் கொடுத்துவிட்டு போவாங்கனு நான்  நம்புறேன்நான் இதுவரைக்கும் யாரையும் உதாசீனப்படுத்துனது கிடையாது!"

" ஆஹாங் !!!!" என்று ஆதங்கம்  நிறைந்த குரலில் சொன்னாள்   நித்யா.

"அன்னைக்கு   உனக்கும் எனக்கும் ஏனோ சண்டை ஆயிடுச்சு..  அதுக்காக அதையே பிடிச்சுக்கிட்டு இருக்கணுமா? லெட்ஸ்  மூவ் ஆன் ..  எங்களோட  கம்பெனி ஒரு நல்ல திறமைசாலியையும் , ஒரு நல்ல திறமைசாலி அவசர முடிவால் நல்ல நிர்வாகத்தையும் மிஸ் பண்ணாமல் இருக்கஇது ஒரு வாய்ப்புஇந்தா  உன்னோட அப்பாயின்மென்ட் ஆர்டர்! இதை கொடுத்துட்டு  போகத்தான் வந்தேன்சும்மாதான் ரெடி ஆகுனு  கேட்டேன்நீ நல்லா யோசிச்சிட்டு  நாளைக்கு கூட வரலாம், வரணும்!! "

".."

" உனக்கு இன்னொரு சந்தோஷமான செய்திநீ பயப்படவே  வேண்டாம்..  நீ தினமும் என் முகத்தை பார்த்து  வேலை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது..  ஏன்னா நான் எப்பவுமே கம்பெனிக்கு உள்ளே இருக்க மாட்டேன்.. கதிரவனும்  அப்படிதான்! நீ முதன்முதலில் யாரை பார்த்து இம்ப்ரஸ் ஆகுனியோ அதே பிரபஞ்சன்தான் உனக்கு பாஸ்சோ உன்னுடைய டென்ஷன் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு  சந்தோஷமா ஆதிராவுக்கு வலது காலை எடுத்து வச்சு  வாஎன்றான்  கார்கி . அவன்  கடைசியாக சொன்ன வரியில்  திடுக்கிட்டு , தீ பறக்கும் விழிகளுடன் நோக்கினாள் நித்யா .

மறுபடியும் தவறாக ஏதோ பேசிவிட்டோமோ என்ற குறுகுறுப்புடன் கார்முகிலன் அவளை பார்க்க,  நித்யாவிற்கு முகத்தில் புன்னகை அரும்பியது .

"பாவம் சார் நீங்ககல்மிஷமில்லாமல் பேச நினைச்சாலும் உங்கள் வார்த்தைகள் ஒத்துழைக்க மாட்டேங்குது ! நிறைய புத்தகம் படிங்க ..  இல்லேன்னா சீரியல் பாருங்க!  " என்று நக்கலடித்தாள்

ஒரு கருப்பு கண்ணாடியை ஸ்டைலாக மாட்டியவன், "  எனக்கு மனுஷங்களை படிக்கவே நேரம் போதமாட்டிங்குதுநான் வரேன், சரியா?" என்றபடி குறும்புடன் அவளை இருமுறை வட்டமடித்து விசையுந்தை  முறுக்கினான் .

மிகவும் ஆழ்ந்த குரலில் , " நான் கண்டிப்பா வரணுமா முகிலன் ? என்னால நீங்க ரொம்ப

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.