(Reading time: 12 - 23 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தொடர்கதை - காணாய் கண்ணே - 31 - தேவி

ப்ரிதிவியின் இயல்பான அந்தப் பதில் கிருத்தியைக் கவர்ந்தது. அவள் கனவுப் பற்றிச் சொன்ன போதும் அதில் வரும் நிகழ்வுகள் எல்லாம் தெரிந்து இருந்தும் , உன் முகம் கனவில் பார்த்தேன் என்றுச் சொல்லும் போது அதை எந்த தவறான கண்ணோட்டத்திலும் பார்க்காத அந்தத் தெளிவு அவளுக்குப் பிடித்தது. இதுவரை ப்ரித்வி என்ற மனிதனை இந்த டூர் ஆர்கனைசராக, அவள் பெரியப்பா ஏற்பாடு செய்த பாதுகாவலானாக மட்டுமே பார்த்து இருந்தாள். அவ்வப்போது கேலி, கிண்டல் செய்தாலும் , நன்கு தெரிந்தவர் ஒருவரிடம் பழகும் எண்ணம் மட்டுமே.

ஆனால் இன்றைய அவனின் புரிதல் அவளுக்குள் ப்ரித்வி மீது மெல்லிய ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இவர்கள் பேசி முடிக்கவும் , கிருத்தியின் பிரெண்ட்ஸ் வரவும் சரியாக இருக்கவே, அதற்குப் பிறகு வேறு எதுவும் பேசவில்லை. மற்றவர்களோடு கிருத்தியும் சேர்ந்து கொண்டாள்.

எல்லோரும் லேக் பேலஸ்சில் இருந்த லில்லி பாண்ட் எனப்படும் குளத்திற்கு அழைத்துச் சென்றான் ப்ரித்வி. நீச்சல் குளம் போல் அரண்மனையின் ஒருபுறம் இந்தக் குளம் அமைந்து இருக்க, அதில் அல்லி தாமரை படர்ந்து இருந்தது.

வெள்ளைக் கல் மாளிகையும், பச்சை பசேலென்று குளத்தில் படர்ந்து இருந்த இலைகளும், அதன் நடுவில் வெள்ளை மலர்களும் பார்க்க பார்க்க கண்கள் நிறைந்தது.

அனைவரும் வாவ் என ஒரே குரலில் ஆர்ப்பரித்தனர். செல்பி எடுக்கவும், குரூப் போட்டோ எடுக்கவும் மிகச் சிறந்த இடமாக இருந்தது. கிருத்தி , ராகவி இருவரும் செல்பி எடுத்துக் கொண்ட பின், தங்களை மட்டும் DSLR காமெராவில் தனியாக போட்டோ எடுக்க யாரையாவது தேடினர்.

அருகில் ப்ரித்வி நிற்கவும், ராகவியும், கிருத்தியும் அவனிடம்,

“பாஸ், எங்களை இந்த கமெராவில் தனியா போட்டோ எடுத்துக் கொடுங்களேன்” என்றுக் கூற, சிரித்தப்படி வாங்கினான்.

காமெராவின் தெளிவு மற்றும் கோணம் பார்ப்பதற்காக, பார்த்த ப்ரித்வி, சற்று நேரம் மூச்சு விட மறந்தான். 

வெள்ளை நிற லேகிங்க்ஸ், லைட் ப்ளூ கலர் குர்தியும் , அலட்சியமாக போடப்பட்டிருந்த வெள்ளை நிற துப்பட்டாவும் அணிந்து இருந்த கிருத்தி அந்த குளத்தின் பின்னணியில் வெகு அழகாக இருந்தாள்.

கிருத்தியின் பாதுகாப்பின் காரணமாக எப்போதுமே அவள் மேல் ஒரு கண் வைத்திருப்பான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.