(Reading time: 12 - 23 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

கேட்டாள்.

அவளை முறைத்துப் பார்த்த மூவரும், அவளுக்குக் கொடுக்க எடுத்து வந்த தண்ணீரைத் தாங்கள் குடித்தனர்.

“ஆமாம், அவன் ஏன் உன்னை மட்டும் பிடிச்சான்? அவன் கிட்டேயும் என்கியாவத் வம்பு வளர்த்தியா?” என்று ராகவி கேட்க,

“யாருக்குடி தெரியும்? அவன முன்னப் பின்னப் பார்த்தது கூட கிடையாது?” என்று பதில் சொன்னாள்.

ப்ரித்வியிடம் திரும்பிய திலிப் “ஏன் சார் , கிருத்திய மட்டும் பிடிக்கப் பார்த்தான்?” என்றுக் கேட்டான்.

“ஹ்ம்ம். தெரியல. “ என்று மட்டும் சொன்னான்.

பின் அந்த வில்லன்களிடம் திரும்பிய ப்ரித்வி, அவர்கள் பதில் சொல்லும் நிலையில் இல்லை என்பதைக் கண்டு யோசனையோடு சென்றான்.

ராகவி தன் ஹன்ட்பேகால் “எரும, எரும. உன்னாலே எங்களுக்கு நாக்கு தள்ளுதுடி. “ என்று கிருத்தியிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

படகு கரைக்கு வந்ததும், அங்கிருந்த சுற்றுலா காவல் நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்து விட்டு மற்றவர்களோடு சேர்ந்து கொண்டனர்.

டூர் வந்து இருக்கிறவர்கள் என்பதால் அவர்களின் விலாசம் மற்ற விவரம் எல்லாம் வாங்கிக் கொண்ட காவல் அதிகாரி, அவர்களை அனுப்பி வைத்தார்.

அங்கிருந்து எல்லோரும் சுகாதியா சதுக்கத்திற்குச் சென்றனர். நகரத்தின் மத்தியில் இருக்கும் இந்த இடம் பார்க், போட், ஷாப்பிங், பப் என்று எல்லா வசதிகளும் உள்ளடக்கியது. முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் பெயரில் அமைந்துள்ள இந்த இடம் சிறந்த பொழுது போக்குகிற்கான இடமாகும்.

எந்த சிந்தனையும் இல்லாமல் மாணவர்கள் நன்றாக என்ஜாய் செய்தனர். கிருத்தியும் அவர்களோடு கலந்து கொண்டாலும், அவ்வப்போது யோசனைக்குச் சென்றாள்.

ப்ரிதிவியோ வரிசையாக போன் பேசிக் கொண்டு இருந்தான். உணவு எல்லாம் முடித்து மற்றவர்கள் ஐஸ் கிரீம் பக்கம் செல்ல, கிருத்தி அதை மறுத்து விட்டு, அங்கே ஓரிடத்தில் அமர்ந்து இருந்த பரிதவிக்கு அருகில் அமர்ந்தாள்.

அதை உணராத ப்ரித்வி, மேலும் பேசிக் கொண்டு இருக்கவும், கிருத்திகா

“ப்ரித்வி “ என்று அழைத்தாள்.

அவள் கூப்பிட்டதும் தான் அவளை உணர்ந்தவன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.