(Reading time: 11 - 22 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தொடர்கதை - காணாய் கண்ணே - 32 - தேவி

கிருத்திகாவின் கேள்வியில் போனை ஆச்சர்யமாக பார்த்துவிட்டு பேசினார் பிரதாப்.

“என்ன கிருத்தி கேட்ட?” என்றார்.

மீண்டும் ப்ரித்வியை உங்களுக்கு எப்படித் தெரியும் என்ற கேள்வியே கேட்டாள்.

“அதான் சொல்லிருப்பாரே. இன்ஸ்பெக்டர் மூலமா தெரியும். ஏன் கேட்கற?”

“ஒன்னும் இல்லை. உங்க செலெக்ஷன் சூப்பர் பெரியப்பா”

கிருத்தி சொன்னதைக் கேட்டு அவருக்கு திடுக்கிட்டது. இது எதற்காக சொல்லப்பட்டது என்று தெரியாமல் திகைத்தார். ஆனாலும் எதையும் காண்பிக்காத குரலில்,

“அவர் வேலையில் பெர்பெக்ட் என்று நானும் கேள்விபட்டேன்” என்று அழுத்தமாகக் கூறினார்.

அவரிடம் பேசும்போதும் அவள் பார்வை ப்ரிதிவியிடம் தான் இருந்ததுன். அவரின் அழுத்தத்தில் சட்டென்று சுதாரித்துக் கொண்டாள் கிருத்திகா.

பின், “பெரியப்பா , நான் வேணும்னா திரும்பி நம்ம ஊருக்கு வந்துடவா? “ என்றுக் கேட்டாள்.

“ஏன்மா? பயப்படறியா?”

“இல்லை. ஆனால் எல்லோருக்கும் கஷ்டம் கொடுக்கிறோமோன்னு தோணுது”

“தேவை இல்லைடா. கொஞ்சம் கவனமா இருந்துக்கோ போதும். எப்படியும் அவனை சீக்கிரம் பிடிச்சிடலாம். ஆதாரத்தோடு போலீஸ்லே ஒப்படைத்து விட்டால் பிறகு பயம் இல்லை. “ என்றார்.

“சரி பெரியப்பா”

“உன் அம்மா கிட்டே பேசினியா?”

“இது ப்ரித்வி சார் போன் பெரியப்பா. என் போனில் இருந்து நான் அம்மா கிட்டே பேசிக்கறேன். இப்போ வைக்கறேன் பெரியப்பா” என்று கூற,

“சரிம்மா ஜாக்கிரதை” என்று அவரும் வைத்தார்.

கிருத்திகா போன் வைத்ததும், ப்ரித்வி கைகளில் ஐஸ்கிரீமோடு வந்தான்.

“பேசிட்டியா?” என்றவன் “இந்தா. உனக்கு என்ன ப்ளேவர் பிடிக்கும்னு தெரியாது. அதனால் பொதுவா வெண்ணிலாவே வாங்கிட்டு வந்துட்டேன்” என்று அவள் கைகளில் கொடுத்தான்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம் பாஸ்?

“இதில் சிரமம் எதுவும் இல்லை. சாப்பிட்டு கொஞ்ச நேரமாகிவிட்டது. போன் பேசிக் கொண்டே இருந்ததில் லைட்டா பசிக்கிற பீல். அதான் எனக்கு டெசெர்ட் வாங்கப் போனேன். அப்படியே உனக்கும் சேர்த்து வாங்கினேன்.”

“தேங்க்ஸ் பாஸ். “ என்றவள், ஐஸ்கிரீம் சுவைத்துக் கொண்டே “அந்த செல்வம் & குரூப் மேலே என்ன தொந்தரவு கொடுப்பாங்களோன்னு டென்ஷனா இருக்கு” என்றாள்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.