(Reading time: 11 - 22 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“அதைப் பற்றி யோசிக்காதே. அவங்களை கையும் களவுமாக பிடிக்கத்தான் முயற்சி செய்துட்டு இருக்கோம். சீக்கிரம் பிடிச்சிடலாம்.”

“சரி” என்றவள் ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடிக்கவும், மற்ற பிரெண்ட்ஸ் எல்லோரும் வந்து சேர்ந்தனர். அன்று இரவு ஹோட்டல் போய் தங்கினர்.

கொஞ்ச நேரம் எல்லோரும் அரட்டை அடித்து விட்டு உறங்கச் செல்லவும், ப்ரித்வி மறுநாள் செல்ல வேண்டிய இடங்கள் பற்றிச் சுருக்கமாகக் கூறினான். அதைப் பற்றிப் பேசியபடி எல்லோரும் சென்றனர்.

கிருத்திகா, ராகவி இன்னும் இரு பெண்கள் சேர்ந்து தங்கியிருந்த அந்த அறைக்கு அவர்கள் சென்றனர். கிருத்திகா தன் தண்ணீர் பாட்டில் காலியாகி விட்டதால், அங்கிருந்த கோரிடாரின் மற்றொரு மூலையில் இருந்த வாட்டர் கேன் நோக்கிச் சென்றாள்.

அவள் சென்று தண்ணீர் பிடித்துவிட்டு , அவளின் அறைக்கு செல்லும் வரை ப்ரித்வி கிருத்திகாவையேப் பார்த்து இருந்தான். பிறகே தன் அறைக்குத் திரும்பினான்.

அன்று இரவு படுக்கும் போது ப்ரித்வி , கிருத்திகா இருவருமே அன்றைக்கு நடந்த சம்பவங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டு படுத்து இருந்தனர்.

ப்ரித்விக்கு கிருத்திகாவை அந்த அல்லிக் குளத்தில் வைத்து போட்டோ எடுத்தக் காட்சியே மீண்டும் மீண்டும் வந்து போனது. போட்டில் நடந்த சம்பவங்களும் யோசனையில் ஓடிக் கொண்டிருந்தது. கிருத்தியின் பெரியப்பா ப்ரதாப்பிடம் பேசிய பின், தன் ஸ்டாப்ஸ் இருவரிடம் பேசி, அந்த அரசியல்வாதியை கவனிக்கத் தனி ஷேடோ ஏற்பாடு செய்தான். அத்தோடு போலீஸ் மூலமாக அவரின் மொபைல் பேச்சை ட்ராக் செய்யவும் முயற்சித்தான்.

இப்படி ஏதோதோ யோசனைகளில் அவன் கண் மூட, சற்று நேரத்தில் அவனுக்கே கனவு போல். ப்ரித்வியும் , கிருத்தியும் ஏதோ ஒரு குதிரையில் செல்வது போல் தெரிய, சட்டென்று எழுந்து அமர்ந்து விட்டான். கிருத்தியிடம் பேசியதின் தாக்கம் என்று உணர்ந்தவனாக, தண்ணீர் குடித்து விட்டு படுத்தும் விட்டான்.

கிருத்தியும் அலுப்பில் உறங்க ஆரம்பித்து இருந்தாள். அப்போது அவளின் கனவு தொடர ஆரம்பித்தது.

இளவரசன் ப்ரித்விராஜ் மற்றும் ராணி கிரண் தேவி இருவரும் மாறுவேடமிட்டு அக்பரின் இருப்பிடமான அஜ்மீர்க்கு செல்ல எண்ணியிருந்தனர். இருவரும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதே சமயம் காவலர்களின் சந்தேகத்தைத் தூண்டக் கூடாது என்று எண்ணியதால், அந்த வியாபாரியிடமே பேசி, அவர்கள் அஜ்மீர் கோட்டைக்குள் செல்லும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.