(Reading time: 11 - 22 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“ஹ்ம்ம். இருக்கலாம். ஆனால் அக்பரை வெளியில் வந்து போரிட வைப்பது எப்படி?”

மூவரின் எண்ணங்களும் வேறு ஏதோ யோசனையில் இருக்க, ஏதோ யோசனைக் கிடைத்தது போல் இளவரசனின் விழிகள் பளிச்சிட்டன.

“ ராம்சிங். இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போய் உங்கள் வேலையைத் தொடருங்கள்” என்றான் .

“இளவரசே , ஒரு சிறு விண்ணப்பம். எக்காரணம் கொண்டும் ராணி அக்பர் கண்களில் பட்டு விடக் கூடாது”

இப்போது கிரண் தேவி திகைப்பாகப் பார்த்து ,

“ஏன் ராம் சந்த்?”

“அவர் பெண்கள் விஷயத்தில் நம்பிக்கைக்கு உரியவர் இல்லையம்மா?”

இது ப்ரித்விக்குத் தெரியாமல் இருந்து இருக்காது. இருந்தும் ராம் சந்த்  சொன்னவுடேன் அதற்கு பதில் எதுவும் சொல்லாது தலையசைத்தான்.

பின் அவன் கிளம்பியவுடன், கிரண் தேவி,

“தேவி, நாளை நீ எப்படியாவது அக்பரின் அரண்மனைக்குள் நுழைந்து விட வேண்டும்.” எனவும் திகைத்துப் பார்த்தாள் கிரண் தேவி.

“ஏன் இளவரசே?”

“அக்பரின் மனநிலைப் பற்றி அறிய வேண்டும். அவர் ஏன் ராணாவின் மீது நேரடியான படையெடுப்பு நடத்தவில்லை. இனியும் அதற்கு சாத்தியக் கூறுகள் எதுவும் இருக்கிறதா?  என்று தெரியவேண்டும்.

“இதை எல்லாம் அங்கிருக்கும் அரண்மனை ஊழியர்களிடம் கேட்டால் சொல்ல மாட்டார்களா?

“மாட்டார்கள். அவர்கள் அனைவருமே அக்பரால் மிகுந்த கவனத்துடன் தேர்ந்டுத்து வைக்கப்ட்டுள்ளவர்கள்.. அது மிகப் பெரிய சவாலான் விஷயம். அதனால் நீயே உள்ளே சென்றுக் கண்டு பிடித்தால் நமக்கு உதவியாக இருக்கும்.

சற்று நேரம் யோசித்த கிரண் தேவியும் சம்மதித்தாள்.

“இளவரசே, எனக்கு ஒரு சந்தேகம்?

“கேள் ராணி.

“ராம்சந்த் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

“நம் ஒற்றர்கள் ஒவ்வொருவரின் தலைபாகையிலும் வாள் சின்னம் பச்சை நிறத்தில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.