(Reading time: 11 - 22 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“ஜெய் பவானி” என்றுக் புரவி வியாபாரிக் கூற, ப்ரித்வியும் “ஜெய் பவானி” என்று கூறினான்.

பின் மீண்டும் “ஜெய் மகராஜ்” என்றுக் கூற, இளவரசனும் அதையேக் கூறினான்.

“தகவல்கள் என்ன?” என்று இளவரசன் கேட்க,

“தாங்கள் யார்?” என்றுக் கேட்டான் வியாபாரி.

ராணி ஏதோ சொல்ல வரவும், கை உயர்த்தி தடுத்தவன்,

“என்னைப் பற்றிய விவரங்கள அனாவசியம்.” என்று மட்டும் கூறினான்.

“மகராஜ் அல்லது இளைய ராஜாவிடம் மட்டுமே தகவல்கள் பரிமாறச் சொல்லி உத்தரவு. “

“நானும் மகராஜ் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் தான்”

“அதை எப்படி நம்புவது ?’

“தங்கள் நம்பிக்கைக்கு என்ன சான்று தர வேண்டும்?”

“தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் அரச குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர் என்பதை எனக்கு நிரூபித்தால் , நான் வேண்டிய தகவல் அளிக்கிறேன்”

“நல்லது. “ என்றவன், “இதோ, தங்கள் மகாராஜ்ஜின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமான ராணி கிரண் தேவி என்னோடு இருக்கிறார். இதை விட வேறு சான்று வேண்டுமா?” என்றுக் கேட்டான்.

அந்த புரவி வாங்க வந்தவனோடு ஒரு பெண் இருப்பதைக் கண்டு கொண்டான் என்றாலும், அதற்கு மேல் பார்வைத் திருப்பாது இருந்தான் வியாபாரி உடையில் ஒளிந்து இருந்த ஒற்றன்.

தற்போது தான் இளவரசன் ராணியைப் பற்றிக் கூறவும் பதட்டத்துடன் அவளைக் கூர்ந்துக் கவனித்து விட்டு, அவள் முக லட்சனத்திலும், கம்பீரத்திலும், தன்னை அறியாது தலை வணங்கியவன், வேகமாக மண்டியிடப் போனான்.

அவனைத் தடுத்த இளவரசன்,

“வேண்டாம் வீரரே. தாங்கள் செய்யும் தீரச்செயல்களுக்கு நாங்கள் தான் மண்டியிட வேண்டும். மேவாரின் விடுதலைக்காகப் போராடும் ஒவ்வொரு வீரனுக்கும் வழிகாட்டியாக இருக்கும் தாங்கள் அரசரைத் தவிர யாருக்கும் மண்டியிடக் கூடாது” என்றுக் கூறவும், மிகவும் மகிழ்ச்சியோடு தலை அசைத்தான்.

“தாங்கள் யார் வீரரே? மகாராஜின் அன்புப் புதல்வியைத் தங்களோடு அனுப்பி இருக்கிறார் என்றால், தாங்களும் அவர் அன்பிற்கு உரியவராகத் தான் இருக்க வேண்டும். “

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.