(Reading time: 11 - 22 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

வரை அவரின் வேலைக்காரர்களாக மாறி இருந்தனர்.

உதய்ப்பூரில் இருந்து அஜ்மீர் செல்லும் முன், வழியில் புஷ்கர் நகரில் தங்கினார் அந்த வியாபாரி. புஷ்கர் நகரம் சந்தை கூடும் இடம். அத்தோடு அக்கம் பக்கம் கிராமத்தில் விளைவிக்கும் பொருட்களை முஹலாயர்கள் நேரடியாக வந்து வாங்கிச் செல்வர் என்பதால் எப்போதுமே புஷ்கர் நகரத்தில் ஜன சந்தடி அதிகமாக இருக்கும்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட ப்ரித்விராஜ், மஹாராணாவிற்கு உளவு சொல்லும் வீரர்களை சந்தைக்கே வரச் சொல்லியிருந்தார்ன். இது கிரண் தேவிக்குத் தெரியாது. இளவரசரையேத் தொடர்ந்து சென்றாள்.

சந்தைக்கு நடுவில் நின்றவன், சுற்று முற்றும் பார்த்தான். ஒரு பகுதியில் நல்ல ஜாதிப் புரவிகள் கட்டப் பட்டு இருக்க, அவற்றுக்கு தீனி போடும் இடத்தில் சென்று நின்று கொண்டான். ராணியும் அவனருகில் நின்றாள்.

சற்று நேரம் சென்றும் இளவரசன் எதுவும் பேசாமல் இருக்கவும், ராணி திரும்பிப் பார்த்தாள். இளவரசனோ அதைக் கண்டது போல் தெரியவில்லை.

சற்று நேரம் பொறுத்த ராணி, சற்று உரக்கவே “இளவரசே, எதற்காக நாம் இங்கே நின்று கொண்டு இருக்கிறோம்?” என்றுக் கேட்டாள்.

தன் வாயில் விரல் வைத்து , இளவரசியை அமைதியாக இருக்கச் சொன்னான். மேலும் ஏதோ கேட்க வரவும், சற்றுப் பலமாகவே தலையாட்டினான் பேசாதே என்பது போல். ராணியும் அத்தோடு நிறுத்திக் கொண்டாள்.

மேலும் சில நாழிகைகள் சென்று இருக்க,  யாரோ சிலர் புரவிகள் பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் முழுக்கவும் அரபு தேசத்து உடை அணிந்து இருக்க, இளவரசன் அவர்களையே இமைக்காமல் பார்த்தான். பின் அவர்கள் அருகில் சென்று தானும் புரவிகளை வாங்குவதாக பேரம் பேசினான்.

சில பல வார்த்தை உரசல்களுடன் அந்தப் பேரம் நடக்க, கடைசியில் ப்ரித்விராஜின் பேரமே படிந்தது. மற்றவர்ள் அதை விட்டுச் சென்று இருக்க, அந்த புரவி வியாபாரி இளவரசனிடம் பணம் கேட்டான்.

அவர்கள் தங்கியிருந்த சத்திரத்தில் ஈடு பணம் இருப்பதாகவும், யாரையாவது அனுப்பினால் கையோடு கொடுத்து விடுவதாகவும் கூறினான். அந்த வியாபாரியே அவனோடு வர, ராணியும் பின் தொடர்ந்தாள்.

சற்றுத் தூரம் சென்றதும், சுற்றிலும் பார்த்தனர். யாரும் அவர்களைப் பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்ட பின்,

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.