(Reading time: 11 - 22 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

அவளிடம் அதை கொடுத்துவிட்டு அமரும்படி கூறிவிட்டு உள்ளே சென்று மறைந்தாள்.

அந்த அரச அரியணை போன்ற சோபாவில் அமர்ந்தவள் கால் மேல் கால் போட்டு சற்றே சாய்ந்தவாறு அமர்ந்து தனக்கான பழரசாத்தை சுவைக்க ஆரம்பிக்க சில நிமிடங்களில் படிகளில் யாரோ இறங்கி வரும் அரவம் கேட்டு பார்வையை மேலே பதித்தாள்.

ஆறடி இரண்டு அங்குலத்தில் ஆஜானுபாகுவாய் ஒருவன் எவ்வித அலட்டலுமின்றி தன் இரவு பைஜாமாவில் இறங்கி வர பார்வை மட்டும் அவளை அளவெடுத்தவாறே நகர்ந்து கொண்டிருந்தது.அழுத்தமான அடிகளை வைத்து அவளருகில் வந்தவன் அவளுக்கு எதிர்புற சோபாவில் அமர்ந்தான்.

ஹாய் மிஸ்.ஷியாமா..”

ஹலோ மிஸ்டர் மகிழன்.”,சற்றே அலட்சியப் பார்வை அவனிடத்தில்.அதே நேரம் பிசிறின்றி வெளி வந்தன வார்த்தைகள்.

ரொம்ப நாளுக்கு அப்பறம் என் பேரை கேட்குறேன்..குட்..சோ என்னைப் பத்தி எந்த விவரங்களும் உங்களுக்குத் தெரியாது அம் ஐ ரைட் மிஸ்.ஷியாமா?”

சற்றும் அசராதவளாய்,”கமான் மிஸ்டர் மகிழன். தி பிஸினஸ் மேக்னட் சந்திர வர்மாவோட பேரன் அண்ட் அமித் வர்மாவோட பையன்.பார்ன் வித் சில்வர் இல்ல இல்ல கோல்டன் ஸ்பூன்.அஸ் ஆப் நவ் வர்மா க்ரூப் ஆப் கம்பனியோட எம் டி.. உங்களின் புகழ் பரப்பும் கூட்டத்துக்கு தி ஒன் அண்ட் ஒன்லி எம்வீ..உங்களைப் பத்தி தெரியாம உங்க கோட்டைகுள்ள நுழைய முடியுமா?”

நாட் பேட்..இவ்ளோ தெரிஞ்சும் நேம் மென்ஷன் பண்ணிருக்கீங்க..குட்...கே லெட் மீ கம் டூ த பாயிண்ட்..உங்களைப் பத்தி நெறைய கேள்விபட்டு ரொம்ப நம்பிக்கையான இடத்துல இருந்து உத்திரவாதம் கொடுத்ததுனால தான் நீங்க இங்க வர்றதுக்கே நான் சம்மதிச்சேன்.

பட் ஒரு செக்யூரிட்டிகிட்டேயே இவ்ளோ ஆர்க்யூ பண்ணிட்டு இருக்கீங்க..ஐ டோண்ட் திங்க் யூ கேன் ஹேண்டல் திஸ் கேஸ்…”

எக்ஸ்கீயூஸ் மீ மிஸ்டர் மகிழன்.என்னை பத்தியும் என் ஜாப் ஸ்டைல் பத்தியும் நீங்க கன்க்ளுட் பண்ண வேணாம்.பர்ஸ்ட் திங்க் இங்க நான் வந்துருக்க விஷயம் ரொம்பவே கான்பிடென்ஷியல்..அப்படி இருக்கணும்னு சொன்னதும் நீங்க தான்னு நியாபகம்.அண்ட் செகண்ட் திங்க் பலமில்லாத சாதாரண ஒரு மனுஷன்கிட்ட நான் என் பெருமையை பேசி  அவங்களை பயமுறுத்தி மிரட்டி என் வேலையை சாதிக்குறது எனக்கு சுத்தமா பிடிக்காது.

அவருக்குத் தேவையான விஷயம் நான் எதுக்காக இந்த வீட்டுக்குள்ள வந்தேன்ங்கிறது தான்.அதுக்கான பதில் சொல்லிட்டேன்.என் வேலை முடிஞ்சுது.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.