(Reading time: 11 - 22 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

தேட்ஸ் மை டியூட்டி..இதுவரை கொடுத்த இன்போ எல்லாம் ஓகே குடும்ப நபர்கள் தவிர இங்க வந்து போறவங்க ஆர் செர்வண்ட்ஸ் பத்தின டீடெயில் வேணுமே!”

இங்க சமையல்காரங்க நாலு பேர் இருக்காங்க.எல்லாரும் காலையிலே ஆறு மணி தொடங்கி நைட் எட்டு மணியோட போய்டுவாங்க.தோட்டகாரர் வீட்டு வேலை செய்றவங்கனு ஒரு அஞ்சு பேர் இருக்காங்க அவங்களும் சேம் வொர்க் டைம் தான்.இவங்களை தவிர்த்து முருகன் அண்ணா ஒருத்தர் தான் முழு நேரமும் இங்கேயே இருக்குறவர்.தாத்தா காலத்துலயே இங்க வேலைக்கு வந்தவர் ஒருவிதத்துல என் அப்பாவோட சிநேகிதர்.சோ அவர் வேலையாள்னு சொல்றத விட எங்கள்ல ஒருத்தரா தான் நான் பாக்குறேன்.

அவருக்கு கிட்சன் பக்கத்துலேயே இருக்குற ரூம் கொடுத்துருக்கோம்.அவர் இல்லாம யாருக்கும் ஒண்ணும் தெரியாது அதனால பேமிலி கூட அவரும் மதுரா போய்ருக்கார்.”

இன்ட்ரெஸ்ட்டிங்..வெல்..எனக்கு ஓரளவு டீடெயில் புரிஞ்சுது..ஐ வில் மேனேஜ்..நாளைக்கு மார்னிங் ஒருதடவை உங்க தாத்தாவோட ரூமை பார்த்துட்டா பெட்டர்.”

ஷுவர்..நானே கூட்டிட்டு போறேன்.சொல்ல போனா உங்க டேரெக்டர் நீங்க இன்னைக்கு வரீங்கனு சொன்னதுனால தான் எல்லாரையும் ஊருக்கு அனுப்பினதே.இல்லனாம்ம் நாளைக்கு அவங்க வந்தப்பறம் உங்களுக்கே புரியும்.

ஓகே குட்நைட்..நாளைக்குப் பார்க்கலாம்..அண்ட் மார்னிங் சர்வெண்ட்ஸ் வந்துருவாங்க முடிஞ்ச வரை என் ப்ரெண்டாவே காட்டிக்கோங்க..”

டோண்ட் வொரி ஐ வில் டேக் கேர்..குட் நைட்..”,என்றவள் தனதறைக்கு வந்து கட்டிலில் விழுந்தாள்.ஏதேதோ சிந்தனைகளில் உழன்றவளுக்கு அசதியினால் தூக்கம் கண்களைத் தழுவ சீக்கிரமே உறங்கியும் போனாள்.

திடீரென எங்கோ கேட்ட அலறலில் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க அப்போது தான் இருக்கும் இடம் நினைவில் வந்தது.என்ன ஏதென தெரியாமல் ஒரு வேளை கனவாக இருக்குமோ என்ற எண்ணத்தில் மீண்டும் உறக்கத்தை வரவழைக்க முயன்றவள் ஏதோ ஒரு உந்துதலில் அறையை விட்டு வெளியே வந்தாள்.

மாடிப்படிகளில் யாரோ வேகமாய் செல்லும் சத்தம் கேட்டு அவளுமாய் மாடியேறினாள்.அங்கு நீண்ட பெரும் வராண்டாவில் ஒரு ஓரத்தில் ஒரே ஒரு அறை மட்டும் இருப்பதைக் கண்டவள் மெதுவாய் அதன் அருகில் சென்று கதவின் பிடியில் கை வைத்த நேரம் பின்னிருந்து ஒரு கரம் அவளை அழுந்தப் பற்றியது.

ஒரு நொடி அதிர்ந்தவளாய் பின் திரும்பி அடிக்க கையை ஓங்கிய போது லாவகமாய் அதை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.